விசுவாசிக்கிறவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும்.
He who believes in Me,as the Scripture has said, out of his heart will flow rivers of living water. (John 7:38)
Jn4:14; Gal5:22,23; Eph5:9; 1Pet2:6; 1Jn5:6; Rev7:17; Rev21:6; Rev22:1; Job32:18,19; Pr10:11; Pr18:4; Isa12:3; Isa44:3; Isa58:11; Isa59:21; Eze47:1-12; Zec14:8.
வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார். (யோவான் 7:38)
யோவான் 4:14; கலாத்தியர் 5:22,23; எபேசியர் 5:9; 1பேதுரு 2:6; 1யோவான் 5:6; வெளி 7:17; வெளி 21:6; வெளி 22:1; யோபு 32:18,19; நீதிமொழிகள் 10:11; நீதிமொழிகள் 18:4; ஏசாயா 12:3; ஏசாயா 44:3; ஏசாயா 58:11; ஏசாயா 59:21; எசேக்கியேல் 47:1-12; சகரியா 14:8.
நதிகள் ஓடும்:
வானத்திலிருந்து மழை பொழியுமானால் பூமியில் ஊற்றுக்கண்கள் உண்டாகி நீரோடைகளிலும், ஆறுகளிலும் தண்ணீர் பாய்ந்தோடும். அதேபோன்றே இயேசுவை கிறிஸ்து என்றும், ஆண்டவர் என்றும், இரட்சகர் என்றும் மீட்பர் என்றும் விசுவாசிக்கிறவனில் பரலோகத்திலிருந்து தேவன் தமது ஆவியானவரை அளவில்லாமல் ஊற்றுகிறார். ஊற்றப்பட்ட உள்ளத்திலிருந்து கிரியைகளும், கனிகளும், வரங்களும் அளவில்லாமல் நீரோடைகளாய் பாய்ந்தோடும்.
படித்து பட்டம் வாங்குவதினால் தேவத்துவ அம்சங்கள் பாய்ந்தோடாது. படித்தவன் உள்ளத்திலிருந்து அதற்கேற்ற காரியங்கள் தான் பாய்ந்தோடும்.
விசுவாசிக்கிறவன் எப்பேர்பட்டவனாயிருந்தாலும் அவன் அழகில்லாதவனாகவோ, கல்வி அறிவு இல்லாதவனாகவோ, வசதி வாய்ப்புகள் இல்லாதவனாகவோ, மனித புயபலம் இல்லாதவனாகவோ இருந்தாலும் அவனிலிருந்து தெய்வஞானம், தெய்வ லட்சணங்கள் அளவில்லாமல் பாய்ந்தோடும்.
உலக அம்சங்கள் வெறுப்பையும், சுய நலத்தையும், கசப்பையும் உண்டாக்கும். தெய்வ அம்சமோ ஐக்கியத்தையும், அன்பையும், தன்னலமற்ற சேவையையும் கொடுக்கும்.
கிறிஸ்துவை விசுவாசித்து ஜீவதண்ணீரை பெறுங்கள்.
இவ்வுலகம் ஜீவ நீரோடைகளால் நிரம்பட்டும்.
கர்த்தாவே உம் மகனை விசுவாசித்து உம் அம்சங்களை பெற்றுகொள்ள வாஞ்சிக்கின்றோம். நீர் அவைகளை எங்களுக்கு தந்து எங்கள் தேசத்தை உமக்குரிய தேசமாக்கும்.