இத்தனை அற்புதங்கள் செய்தும் என்னை விசுவாசிக்கவில்லை
But although He had done so many signs before them, they did not believe in Him. (John 12:37)
John1:11; John11:42; John15:24; Matthew11:20; Luke16:31; Luke22:67; 1Cor2:14; Exodus 4:8,9; Number 14:11; Psalm 28:5; Psalm78:32.
அவர் இத்தனை அற்புதங்களை அவர்களுக்கு முன்பாகச் செய்திருந்தும்,அவர்கள் அவரை விசுவாசிக்கவில்லை. (யோவான் 12:37)
யோவான் 1:11; யோவான் 11:42; யோவான் 15:24; மத்தேயு 11:20; லூக்கா 16:31; லூக்கா 22:67; 1கொரிந்தியர் 2:14; யாத்4:8,9; எண்14:11; சங்கீதம் 28:5; சங்கீதம் 78:32.
நம்பாத மனுகுலம்.
ஆபிரகாமை தெரிந்தெடுத்து ஆபிரகாம் மூலமாக தமக்கென்று சொந்த ஜனத்தை உருவாக்கி அற்புதங்களையும் அடையாளங்களையும் அவர்கள் நடுவில் செய்து தமது வல்லமையையும், பராக்கிரமத்தையும், மகத்துவத்தையும் வெளிப்படுத்தியும் அவர்கள் தேவன்மேல் உறுதியான பற்றுதலாயிருக்கவில்லை. நன்மை உண்டாகும் போது பற்றி நிற்பதும், நன்மைகள் கிடைக்காதபோது தேவனைவிட்டு விலகி பொல்லாப்பானவைகளை செய்வதிலும் நாட்டம் உடையவர்களய் காணப்பட்டனர். அவர்கள் வழுவிப்போகிறவர்கள் என்றும், மாயக்காரர்கள் என்றும், வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள் என்றும் அழைக்கப்பட்டனர்.
ஆபிரகாமின் வழிவந்த கர்த்தராகிய இயேசுகிறிஸ்து ஆராய்ந்துமுடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அற்புதங்களையும் செய்தும் அவருடைய ஜனங்கள் அவரை நம்பாமலும், பின்பற்றாமலும் போய் அவரையே கொன்றுபோட தங்கள் கைகளை நீட்டினார்கள்.
இந்தியா போன்ற பல நாடுகளில் கிறிஸ்துவின் ஊழியக்காரர்களால் செய்யப்பட்ட பற்பலவிதமான சமுதாய மாற்றங்கள், சுகாதார பரிணாமங்கள், கல்வி எழுச்சிகள் உண்டாக்கி பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தும் கிறிஸ்துவை அறியாத சந்ததிகள் எழும்பி கிறிஸ்துவுக்கு எதிரான காரியங்களையே செய்கின்றனர்.
கர்த்தராகிய இயேசுவை ஏற்றுக்கொண்டவர்கள், விசுவாசத்துக்கு உட்பட்டவர்கள் புதிய இஸ்ராயேலர் என்று அழைக்கப்பட்டும் அவர்களுக்கு பரலோக ராஜ்யம் வாக்களிக்கப்பட்டும், அவர்கள் தேவனுடைய ஆவியை பெற்றிருந்தும் விசுவாசத்தையும் ஆதி அன்பையும் விட்டுவிட்டு உலக காரியங்கள்மேல் கவனம் செலுத்தி உலகிற்குரியவர்களாகவும், மாம்சத்துக்குரியவர்களாகவும் மாறுகின்றனர். இயேசுவையும் நம்புகிறோம் உலகம் மாம்சம் பிசாசு ஆகியவைகளையும் நம்புகிறோம் என்று சமய சமரசம் பண்ணுகிறார்கள். அவர் தமது ஜீவனை தந்து நம்மை மீட்டிருந்தும் இரட்சிப்பிலும் விசுவாசத்திலும் நிலைத்திருக்க விருப்பமில்லையே. அவர் வரும்போது பூமியிலும் சபைக்குள்ளும் விசுவாசத்தை காண்பாரோ?.
நீங்கள் முன்னமே அறிந்திருந்தாலும், நான் உங்களுக்கு நினைப்பூட்ட விரும்புகிறதென்னவெனில், கர்த்தர் தமது ஜனத்தை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணி இரட்சித்து, பின்பு விசுவாசியாதவர்களை அழித்தார். யூதா1:5.
கடைசிகாலத்திலே தங்கள் துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற பரியாசக்காரர் தோன்றுவார்கள் என்று உங்களுக்குச் சொன்னார்களே.
இவர்கள் பிரிந்து போகிறவர்களும், ஜென்மசுபாவத்தாரும், ஆவியில்லாதவர்களுமாமே.
நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணி, தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்திய ஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருங்கள்.
அல்லாமலும், நீங்கள் பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து, சிலருக்கு இரக்கம் பாராட்டி, சிலரை அக்கினியிலிருந்து இழுத்துவிட்டு, பயத்தோடே இரட்சித்து, மாம்சத்தால் கறைப்பட்டிருக்கிற வஸ்திரத்தையும் வெறுத்துத் தள்ளுங்கள். யூதா1:19-23.