தோமா: போகிற இடம் தெரியாமல் வழியை எப்படி அறிவது

தோமா: போகிற இடம் தெரியாமல் வழியை எப்படி அறிவது?

Thomas said,Lord,we do not know where You are going,and how can we know the way? (John 14:5)

John20:24-28; John 13:36; John 16:17,23; Mark 8:17,18; Mark 9:19; Luke 9:45; Luke 24:25; Hebrews 5:11,12.

தோமா அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் போகிற இடத்தை அறியோமே, வழியை நாங்கள் எப்படி அறிவோம் என்றான். (யோவான் 14:5)

யோவான் 20:24-28; யோவான் 13:36; யோவான் 16:17,23; மாற்கு 8:17,18; மாற்கு 9:19; லூக்கா 9:45; லூக்கா 24:25; எபிரெயர் 5:11,12.

வழி அறியா தலைவர்கள்:
கர்த்தராகிய இயேசு யூத சமயத்தின் குழந்தையாக பிறந்து வளர்ந்து அவர்களாலேயே மரணிக்கப்பட்டார். தேவனோ அவரை எழுப்பி யூதர்களுக்கும் புறஜாதியாருக்கும் இயேசுவை ஆண்டவரும் மீட்பராகவும் நியமித்தார். அவராலேயல்லாமல் ஒருவரும் பிதாவிடம் செல்ல இயலாதபடிக்கு சிலுவைபாதையை ஏற்படுத்தினார்.

இயேசுவின் காலத்தில் இயேசுவையும் அவரது உபதேசத்தையும் அவரது கிரியைகளையும் புரிந்துகொள்ளாதிருந்த இஸ்ராயேலரைப் போலவே அவரது சீஷர்களில் சிலரும் காணப்பட்டனர். அப்படிபட்டவர்களில் தோமாவும் ஒருவராயிருக்கின்றார்.

இயேசுவை தேவனிடமிருந்து வந்த தேவகுமாரன் என்று தோமா அறிந்து நம்பியிருந்தால் அவர் எங்கே போகப்போகிறார் என்றும் அறிந்திருப்பார். அந்த வழி எது என்று கேட்டிருக்கவும் மாட்டார்.

இந்த தோமாவைபோலவே இக்கால கிறிஸ்தவ தலைவர்கள் புதிய யுகம் படைக்க புறப்பட்ட போர்படை தளபதிகளாய் தங்களை பிரகடனப்படுத்திக்கொண்டு காந்தியையும், மண்டேலாவையும், அமெரிக்க காந்தியையும் ஆராய்ச்சி செய்கிறவர்களாக எழும்பியுள்ளனர். இயேசுவை அறிவதற்கு நேரம் செலவிடுவதை விட்டுவிட்டு தத்துவங்களையும், இனங்களையும், மதங்களையும், உளவியலையும் கற்றுக்கொண்டு அவ்விதமாகவே இயேசுவை அறிய முனைகின்றனர்.

தேவனுடைய ஆவியைப் பெறாமல் ஒருவரும் தேவகுமாரனை அறியவும் முடியாது அவர் சென்ற வழியையும் அறியமுடியாது. அவர் சென்றுள்ள இடத்துக்கு சென்று சேரவும் முடியாது. சபைதலைவர்களும், விசுவாச குடும்பங்களும் தடவிதிரியும் குருடர்களாயுள்ளனர். இவர்கள் எப்படி வழி காட்டுவார்கள், வழி நடத்துவார்கள்.

தோமாவாவது பிற்பாடு அவரையும் அவரது வழியையும் அறிந்து அநேகரை அவ்வழிக்குட்படுத்தினார்.

பரலோகம் செல்ல இயேசுவே வழி. வேறுவழி இல்லை. இல்லவே இல்லை.

மாயக்காரரே, உங்களைக்குறித்து: இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது. மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப்போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று, ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான் என்றார். பின்பு அவர் ஜனங்களை வரவழைத்து, அவர்களை நோக்கி: நீங்கள் கேட்டு உணருங்கள். வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது; வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார். அப்பொழுது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: பரிசேயர் இந்த வசனத்தைக் கேட்டு இடறலடைந்தார்கள் என்று அறிவீரோ என்றார்கள். அவர் பிரதியுத்தரமாக: என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடே பிடுங்கப்படும். அவர்களை விட்டுவிடுங்கள், அவர்கள் குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறார்கள்; குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே என்றார். மத்தேயு15:7-14.

ADD YOUR COMMENT

Powered By Indic IME