என் வசனத்தைக் கைக்கொள்கிறவர்கள் உங்கள் வசனத்தையும் கைக்கொள்ளுவார்கள்

என் வசனத்தைக் கைக்கொள்கிறவர்கள் உங்கள் வசனத்தையும் கைக்கொள்ளுவார்கள்.

If they kept My word, they will keep yours also. (John 15:20)

1Samuel 8:7;Isaiah 53:1-3; Eze 3:7; Matthew 19:17; Matthew 23:3; Matthew 28:20; Act 7:53; Act 21:25; 1Corinthians 7:19; 2thessalonians 2:15; 1Timothy 6:13; 1John 2:4,5; 1John 13:24; 1John 5:2; Revelation 1:3.

ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்லவென்று நான் உங்களுக்குச் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினதுண்டானால், உங்களையும், துன்பப்படுத்துவார்கள்; அவர்கள் என் வசனத்தைக் கைக்கொண்டதுண்டானால், உங்கள் வசனத்தையும் கைக்கொள்ளுவார்கள். (யோவான் 15:20)

1சாமுவேல் 8:7; ஏசாயா 53:1-3; எசேக்கியேல் 3:7; மத்தேயு 19:17; மத்தேயு 23:3; மத்தேயு 28:20; அப்போஸ்தலர் 7:53; அப்போஸ்தலர் 21:25; 1கொரிந்தியர் 7:19; 2தெசலோனிக்கேயர் 2:15; 1தீமோத்தேயு 6:13; 1யோவான் 2:4,5; 1யோவான் 3:24; 1யோவான் 5:2; வெளி 1:3.

கைக்கொள்ளும் சந்ததி:

தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார். தேவன் அவருக்கு தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார் என்று யோவான் 3:34 ல் கூறப்பட்டுள்ளது. தேவன் அவரோடுகூட இருப்பதினாலேதான் அவர் அற்புதங்களை செய்தார் என்று நிக்கொதேமு கூறுகின்றார். இயேசுகிறிஸ்து பிதாவின் வார்த்தைகளையே பேசினார் என்று யோவான் சுவிசேஷம் கூறுகின்றது. ஆனாலும் பிதாவின் வார்த்தைகளாகிய நியாயபிரமாணங்களையும், தீர்க்கதரிசனங்களையும் கொண்டு இயேசுவின் வசனங்களை ஆராய்ந்து பார்க்காமல் பரிசேயர்களும், சதுசேயர்களும், வேதபாரகர்களும் ஹில்லேல். மிஷ்னா பாரம்பரியங்களை பின்பற்றி இயேசுவை அனுப்பிய பிதாவுக்கே சத்துருக்களாக மாறினர். ஆகையினால்தான் என் வசனத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் உங்கள் வசனத்தையும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று இயேசு கூறுகின்றார்.

இக்காலத்திலும் தேவனுடைய ஜனங்களில் சிலர் நூதனமானவைகளைக் கேட்க ஆர்வப்படுகின்றனர். சிலர் அறிவுபூர்வமாக பேசுவதை விரும்புகின்றனர். சிலர் பல மதங்களை விளக்கி சொல்வதை ரசிக்கின்றனர். சிலர் அனுபவ கதைகளை கேட்க விரும்புகின்றனர். சிலர் எளிமையான பால் போன்ற உபதேசங்களை விரும்புகின்றனர். இன்னும் சிலர் ஆசீர்வாத வாக்கியங்களை மட்டுமே விரும்புகின்றனர். இயேசுவின் தேவனுடைய இராஜ்யத்தின் செய்தியை கேட்பதற்கும், அறிவதற்கும் விருப்பமில்லாது போகின்றதினால் தண்டனையிம் பிரம்புகளும் நம்மை தேடி வருகின்றது.

காதுக்கினிய இரசமான வார்த்தைகளல்ல, இருதயங்களைக் குத்தி வகையறுத்து மனந்திரும்புதலை உருவாக்கும் வார்த்தைகளைக் கேட்கும் காதும், அதனை பேசும் வாயும் பாக்கியமுள்ளவைகள். பிறர் கைக்கொள்வதற்காக வேண்டி தேனைக் கலக்க முடியாது. அது ஒரு பருவத்துக்கு மட்டுமே. பிறர் மனந்திரும்பும்படி கசப்பு மருந்தையும் கொடுத்துதானாக வேண்டும்.

கிறிஸ்துவை நம்புகிறவன் வசனத்தைக் கைக்கொள்வான்,
அவ்வசனத்தைக் கைக்கொள்கிறவன் அவரின் ஊழியக்காரனை ஏற்றுக்கொள்வான், அவரின் ஊழியக்காரனை ஏற்றுக்கொள்கிறவன் அவரின் வசனத்தைக் கைக்கொள்வான்,
அவரின் வசனத்தைக் கைக்கொண்டவன் கிறிஸ்துவின் வார்த்தைகளோடு அவைகளை இணைத்து ஆராய்வான்.

என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்கிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார். ஸ்காரியோத்தல்லாத யூதா என்பவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தாமல் எங்களுக்கு உம்மை வெளிப்படுத்தப்போகிற காரணமென்ன என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம். என்னில் அன்பாயிராதவன் என் வசனங்களைக் கைக்கொள்ளமாட்டான். நீங்கள் கேட்கிற வசனம் என்னுடையதாயிராமல் என்னை அனுப்பின பிதாவினுடையதாயிருக்கிறது. யோவான் 14:21-24.

ADD YOUR COMMENT

Powered By Indic IME