வசனங்கள்

நான் உங்களுக்கு சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும், ஜீவனாயும் இருக்கிறது.

The words that I speak to you are spirit, and they are life. (John 6:63)
Jn6:68; Jn12:49,50; Ro10:8-10,17; 1kori2:9-14; 2kori3:6-8; 1thes2:13; Heb4:12; Jas1:18; 1Pet1:23; Deu32:47; Ps19:7-10; Ps119:50,93,130.

ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது, நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது. (யோவான் 6:63) 

யோவான் 6:68; யோவான் 12:49,50; ரோமர் 10:8-10,17; 1கொரிந்தியர் 2:9-14; 2கொரிந்தியர் 3:6-8; 1தெசலோனிக்கேயர் 2:13; எபிரெயர் 4:12; யாக்கோபு 1:18; 1 பேதுரு 1:23; உபாகமம் 32:47; சங்கீதம் 19:7-10; சங்கீதம் 119:50,93,130.

உயிருள்ள வசனங்கள்:

அவருடைய வசனங்கள் உயிருள்ளவைகளாயிருக்கின்றன என்பதை விவிலியத்திலிருந்து சில உதாரணங்கள்மூலம் விளக்கமுடியும் என்பதை அறிவீர்கள்.
அவைகளில் சில.. 
அவருடைய வசனத்தில் உயிர் உள்ளது என்பதை…

  • படைப்பு, சிருஷ்டிப்பு வெளிபடுத்துகிறது.
  • மனிதன் ஜீவாத்துமாவானான்.
  • மரித்தோர் உயிர்பெற்றது..
  • கட்டளையிட செயல்பட்டது..
  • மனிதர்கள் இன்றும் மீட்கப்படுவது..
  • அற்புதங்கள், அடையாளங்கள்.
    அவருடைய வார்த்தையில் உயிர் இருந்ததினால்தான் இவைகள் செயல்வடிவம் பெற்றது.

மனித வார்த்தையிலும் உயிர் உண்டு. ஆனால் அவைகள் ஒரு எல்லைக்குமேல் செயல்பட இயலாது.
தேவ வார்த்தையோ உயிராயிருக்கிறது. சிந்தையாய் இருக்கிறது.
ஊடுருவும் ஆற்றல் உள்ளது. மாற்றமடைய செய்யும் ஆற்றல் உள்ளது. அழிக்கும் ஆற்றலும் உண்டு.

கிறிஸ்துவின் வார்த்தைகளை விசுவாசிப்போரில் ஜீவனுண்டு, ஆவியுண்டு.
அல்லாதோரில் ஜீவனில்லை, ஆவியில்லை, அனலும் இல்லை, ஆற்றலும் இல்லை.

கர்த்தருடைய வசனத்துக்கு நடுங்குபவராய் நீர் இருந்தால் தேவன் உம்மைகொண்டு செய்யும் அளவிடவியலாத செயலை அனுபவபூர்வமாய் காண்பீர்.

உயிருள்ள வார்த்தையை நம்பு..
உயிராய் அவரில் வாழ்..
உணர்வாய் அவரில் இணை.

கர்த்தாவே, உம் வார்த்தைகளை உயிருள்ளவையாக வைத்து எங்களை இரட்சித்தும் எங்களில் பலர் அவ்வார்த்தைகளை விசுவாசியாமல் கடின இருதயம் உள்ளவர்களாய் இருக்கிறோம். நாங்கள் மாற- மாற்றமடைய செய்ய உம் வார்த்தைகள் எங்களில் கிரியை செய்யட்டும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME