யூதா நீர் எங்களுக்கு உம்மை வெளிப்படுத்தக் காரணம் என்ன

யூதா: நீர் எங்களுக்கு உம்மை வெளிப்படுத்தக் காரணம் என்ன?

Judas,Lord, how is it that You will manifest Yourself to us, and not to the world? (John 14:22)

Matthew 7:24; Mark 6:3; John 1:39; John 3:4,9; John 4:11; John 6:52,60; John 16:17,18,23; Act 10:41.

ஸ்காரியோத்தல்லாத யூதா என்பவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தாமல் எங்களுக்கு உம்மை வெளிப்படுத்தப்போகிற காரணமென்ன என்றான். (யோவான் 14:22)

மத்தேயு 7:24; மாற்கு 6:3; யோவான் 1:39; யோவான் 3:4,9; யோவான் 4:11; யோவான் 6:52,60; யோவான் 16:17,18,23; அப்போஸ்தலர் 10:41

ஏன் எங்களுக்கு?
உலகம் முழுவதும் உள்ள மக்கள் கூட்டங்களில் தேவன் இஸ்ராயேலரை மட்டும் தெரிந்துக் கொண்ட காரணம் என்ன? இஸ்ராயேலரிடையில் 12 கோத்திரங்கள் இருக்க யூதா கோத்திரத்தை மட்டும் தெரிந்து கொண்ட காரணம் என்ன? பெரிய மனிதர்கள் எல்லாம் இருக்க ஆடு மேய்த்து கொண்டிருந்த தாவீதை மட்டும் தெரிந்துக் கொண்ட காரணம் என்ன?நமது உறவினர்களும் குடும்பத்தார்களும் எத்தனையோ பேர் இருக்க என்னை மட்டும் தெரிந்துக் கொண்ட காரணம் என்ன? இஸ்ராயேலர்கள் தேவனுடைய ஜனமாயிருந்தும் சீஷர்களுக்கு மட்டும் தம்மை வெளிப்படுத்த காரணம் என்ன? இவைகளுக்கெல்லாம் துலாம்பாரமாக பொருளைக் கண்டுபிடிப்பது கடினமே. நாம் அவரிடம் போகும்போது மட்டுமே அவரிடம் கேட்டு தெரிந்துக் கொள்ளலாம்.

இந்நாட்களில் முழு உலகிலும் கொள்ளைநோய் பரவி தேவனுடைய மக்கள்களையும் தேவனை அறியாதவர்களையும் கடவுள் மறுப்பாளர்களையும் அதிகாரத்திலுள்ளவர்களையும் எளியவர்களையும் ஒருசேர வாரிக்கொண்டு போகிறதற்கான காரணம் என்ன? விடைதேடவியலாத கேள்விகளை தேவன் தேசத்தில் அனுப்பியுள்ளார். அழுதுகொண்டிருக்கும் உலகத்தின் இன்னொரு புறத்தில் புதிருக்கான விடையைத் தேடிக்கொண்டிருக்கிறது உலகம்.

தேவன் இதுவரையிலும் உலகை பாதுகாத்திருக்க இப்பொழுது மட்டும் கைவிட்டதென்ன என்று அவரிடம் தவழ்ந்து வந்து முறையிட்டு கண்ணீர் விட்டு கேள்வி கேட்ட அவரிடமே விடை தேடலாமே.

அவரிடம் நெருங்கி போவதற்கு மட்டுமே வாழ்வின் புதிர்கள் வைக்கப்பட்டுள்ளது. தவிர்த்தால்……..
கர்த்தர் தமது சேனைக்குமுன் சத்தமிடுவார்; அவருடைய பாளயம் மகா பெரிது, அவருடைய வார்த்தையின்படி செய்கிறதற்கு வல்லமையுள்ளது; கர்த்தருடைய நாள் பெரிதும் மகா பயங்கரமுமாயிருக்கும், அதைச் சகிக்கிறவன் யார்? ஆதலால் நீங்கள் இப்பொழுதே உபவாசத்தோடும் அழுகையோடும் புலம்பலோடும் உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புங்களென்று கர்த்தர் சொல்லுகிறார். நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்; அவர் இரக்கமும், மனஉருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார். ஒருவேளை அவர் திரும்பி மனஸ்தாபப்பட்டு, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் போஜனபலிகளையும் பானபலிகளையும் செலுத்துகிறதற்கான ஆசீர்வாதத்தைத் தந்தருளுவார். சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள்; விசேஷித்த ஆசரிப்பைக் கூறுங்கள். ஜனத்தைக் கூட்டுங்கள், சபையைப் பரிசுத்தப்படுத்துங்கள்; முதியோரைச் சேருங்கள், பிள்ளைகளையும் பாலுண்கிற குழந்தைகளையும் கூட்டுங்கள்; மணவாளன் தன் அறையையும், மணவாட்டி தன் மறைவையும் விட்டுப்புறப்படுவார்களாக. கர்த்தரின் பணிவிடைக்காராகிய ஆசாரியர்கள் மண்டபத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே அழுது: கர்த்தாவே, நீர் உமது ஜனத்தைத் தப்பவிட்டுப் புறஜாதிகள் அவர்களைப் பழிக்கும் நிந்தைக்கு உமது சுதந்தரத்தை ஒப்புக்கொடாதிரும்; உங்கள் தேவன் எங்கே என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்லப்படுவானேன் என்பார்களாக. அப்பொழுது கர்த்தர் தமது தேசத்துக்காக வைராக்கியங்கொண்டு, தமது ஜனத்தைக் கடாட்சிப்பார். யோவேல் 2:11-18.

ADD YOUR COMMENT

Powered By Indic IME