யூதர் உம்மைக் கல்லெறியத் தேடினார்களே, நீர் அங்கே போகலாமா

யூதர் உம்மைக் கல்லெறியத் தேடினார்களே, நீர் அங்கே போகலாமா?

Rabbi, lately the Jews sought to stone You, and are You going there again? (John11:7,8)

Jn10:40-42,31,39; Lk9:51,52; Mk10:1; Mt16:21-23; Act15:36; Act20:22-24; Act21:12,13; Ps11:1-3.

அதன்பின்பு அவர் தம்முடைய சீஷரை நோக்கி: நாம் மறுபடியும் யூதேயாவுக்குப் போவோம் வாருங்கள் என்றார். (யோவான் 11:7)

அதற்குச் சீஷர்கள்: ரபீ, இப்பொழுது தான் யூதர் உம்மைக் கல்லெறியத் தேடினார்களே, மறுபடியும் நீர் அவ்விடத்திற்குப் போகலாமா என்றார்கள். (யோவான் 11:8)

யோவான் 10:40-42,31,39; லூக்கா 9:51,52; மாற்கு 10:1; மத்தேயு 16:21-23; அப்போஸ்தலர் 15:36; அப்போஸ்தலர் 20:22-24; அப்போஸ்தலர் 21:12,13; சங்கீதம் 11:1-3.

யூதேயாவுக்கு போவோம்:
வாழ்க்கை என்பது எதிர் நீச்சல் வழியாகத்தான் செல்லும். போராட்டங்களினூடேதான் கடந்து செல்லும். எளிதான பாதையில் லகுவாக செல்வது சுலபமே. கடினமான பாதையில் கஷ்டப்பட்டு முன்னேறுவது சற்று கடினமாக இருந்தாலும் அதுவே வெற்றியாகும்.

இயேசுகிறிஸ்துவுக்கு நியமிக்கப்பட்ட பாதை எளிதான ஒன்றல்ல, கடினமான ஒன்று. யூதேயாவுக்கு சென்றால் என்ன பிரச்சனை வரும் என்பதை இயேசு அறிந்திருந்தார். தெரியாத இடத்தில் தெரியாது அகப்படுவது ஆபத்தானது, அவலமானது. தெரிந்த இடத்தில் தெரிந்தே அகப்படுவது சற்று கடினமாக இருந்தாலும் மேன்மையாகவே இருக்கும். தேவன் தனக்கு நியமித்த ஓட்டத்தின் பாதையை நன்றாக அறிந்திருந்தார் இயேசு. முட்களும், வேதனைகளும், தோல்விகளும், ஏமாற்றங்களும் உண்டு என்றாலும் அதினூடேதான் வெற்றி வருகிறது என்பதை இயேசு அறிந்திருந்தார்.

புதையல் இருப்பதை அறிந்த ஒருவன் அதை அடைய எவ்வளவு துன்பங்களையும் அனுபவிக்க தயங்காததுபோலவே மீட்பு இருப்பதை புரிந்துகொண்ட இயேசு துன்பங்களையும், துயரங்களையும் பெரிதாக நினையாது அதில் அகப்படுவதை வெறுப்பாக எண்ணாது முன்னேறி சென்றார்.

துன்புறாது முன்னேறுவது புத்திசாலிதனம் என்பது உலக வழக்கு. துன்பத்தினூடே முன்னேறுவது தெய்வ யுக்தி என்பது தேவ திட்டம்.
தேவன் நியமித்த பாதையில் பாடுகள் இருந்தாலும் தேவன் வருவார், செயல்படுவார், உதவி செய்வார் என்பதும் உண்டு.

தேவன் நியமித்த பாடுகளில் கடந்து செல்வது துணிவு அல்ல, கீழ்படிதல். கீழ்படிதலின் களத்தில் மட்டுமே தேவன் செயல்பட இயலும்.

யூதா என்றால் துதி என்பது உண்மை பொருள்தான். ஆனால் அங்குதான் வேதனையும், வியாகுலமும் உண்டாயிருக்கிறது. வலி பிறக்காமல் வழி பிறக்காது என்பதுபோல வேதனையில் தான் சாதனைகள், போதனைகள் உருவாகின்றது.

கர்த்தாவே உம்மை பின்தொடர்வதுதான் எங்கள் விருப்பமாயிருக்கட்டும். அதற்காய் எங்களுக்கு உதவிடும்.

Comments
  1. God is grate

  2. Good message

    FULL GOSPEL CHURCH OF GOD

ADD YOUR COMMENT

Powered By Indic IME