யூதர்கள் இயேசுவைக் குறித்து முறுமுறுத்தார்கள்.
The Jews then complained about Him, because He said, “I am the bread which came down from heaven. (John 6:41,42)
Jn7:12; Mt20:12; Mk14:5; Lk5:30; Lk15:2; Lk19:7; Act6:1; 1Cor10:10; Jud1:16; ex15:24; Ex16:2,8; Ex17:3; Nu14:2; Nu16:41; Deu1:27; Jos9:18; Ps106:25.
நான் வானத்திலிருந்து வந்த அப்பம் என்று அவர் சொன்னதினிமித்தம் யூதர்கள் அவரைக்குறித்து முறுமுறுத்து,
இவன் யோசேப்பின் குமாரனாகிய இயேசு அல்லவா, இவனுடைய தகப்பனையும் தாயையும் அறிந்திருக்கிறோமே, அப்படியிருக்க, நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன் என்று இவன் எப்படிச் சொல்லுகிறான் என்றார்கள். (யோவான் 6:41, 42)
யோவான் 7:12; மத்தேயு 20:12; மத்தேயு 14:5; லூக்கா 5:30; லூக்கா 15:2; லூக்கா 19:7; அப்போஸ்தலர் 6:1; 1கொரிந்தியர் 10:10; யூதா 1:16; யாத்திராகமம் 15:24; யாத்திராகமம் 16:2,8; யாத்திராகமம் 17:3; எண்ணாகமம் 14:2; எண்ணாகமம் 16:41; உபாகமம் 1:27; யோசுவா 9:18; சங்கீதம் 106:25.
யூதர்களின் முறுமுறுத்தல்:
யூதர்கள் ஆதிகாலத்திலிருந்து இயேசுவின் காலம் வரைக்கும் முறுமுறுத்தலை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். அவர்கள் முறுமுறுத்தலை தேவன் கண்டிருந்தும் – அனுபவித்திருந்தும் அவர்களை முற்றிலுமாய் தள்ளிவிடவில்லை. அதற்கு காரணம் தேவன் அவர்களைகொண்டு செய்யவேண்டியவைகள் ஏராளம் உண்டு என்பதினாலேதான்.
முறுமுறுத்தல் என்பது 3 தன்மைகள் கொண்டது.
1. இது அவிசுவாசத்தை வெளிபடுத்துகிறது. முறுமுறுத்தல் அவநம்பிக்கையின் உளை. ஒருதடவை இதில் விழுந்துவிட்டால் அடிக்கடி இதில் விழும்படியான சந்தர்ப்பங்கள் வாய்க்கும். அவிசுவாசத்தின் வேர் இருப்பதினால் தான் முறுமுறுத்தல் என்கிற நுரை கொப்பளிக்கின்றது.
2. திருப்தியில்லாத தன்மையை வெளிபடுத்துகின்றது. தன்னிடம் இருப்பதே தனக்குரியது. அது தனக்கு போதுமானது. மற்றவரிடம் இருப்பது அவர்களுக்குரியது. அதற்கு நான் ஆசைபடலாகாது என்ற சிந்தனையிருக்காது. எவ்வளவு கிடைத்தாலும் திருப்தியிருக்காது. இன்னும் அடையவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். நாய்கள்போல அலைந்து திரியும் சுபாவம், பெருவயிற்று நாய்கள் என்றெல்லாம் விவிலியம் கூறுகின்றது. பவுல் போதுமென்கிற மனம் வேண்டும் என்று கூறுகின்றார்.
3. முறுமுறுத்தல் தெளிவற்ற தன்மையை வெளிபடுத்துகின்றது. இருக்கிறதை கொண்டு வாழமுடியும் என்ற தெளிவு இருக்காது. தேவன் கிரியை செய்வார் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும் பய உணர்வு மேலோங்கி நிற்கும். எதிலும் ஒரு நிச்சயமற்ற – தெளிவற்ற தன்மை காணப்படும். பயமே இதன் மூலதனமாயிருக்கும். பயத்தின் மிகுதியால் பின்மாற்றத்திற்கு செல்ல வழி வகுக்கும்.
மேலும் முறுமுறுத்தல் என்பது….
1. தேவனுடைய கிரியைகளை மட்டுபடுத்துகிறது. அவர் கிரியை செய்யாதபடிக்கு அவ்வாசலை அடைக்கும் பெரும்கதவு.
2. தேவனுடைய கோபத்தை எழுப்புகிறது. தேவனை சார்ந்து முன்னெடுத்து செல்லாது தேவனுக்கு எதிராக பின்பக்கமிருந்து போடும் காட்டு கூச்சல் ஆகும்.
3. பின்மாற்றத்தின் பாதையை துலக்குகிறது. நேர்மறையான உரைகள் விசுவாசபாதையை துலக்கும். முறுமுறுத்தலோ அவிசுவாசத்தின் பாதையை துலக்கி பின்மாற்றத்திற்குள் விழவைக்கிறது.
4. கசப்பான அனுபவங்களின் கொதிகலன். பல கசப்பான அனுபவங்களை அனுபவித்ததினால் முடிவில் முறுமுறுத்தல்என்ற நிலைக்கு தள்ளப்படுகிறது.
யூதர்கள் இயேசுவுக்கு விரோதமாக முறுமுறுத்தனர். சாதாரண இயேசு எப்படி அசாதாரண இயேசுவாக மாறமுடியும் என்ற கேள்வியே அவர்களை முறுமுறுப்புக்குள்ளாக்கியது.
அன்பானவர்களே. தேவகோபம் நம்மேல் பற்றியெரியாமிலிருக்க முறுமுறுத்தலை விட்டொழிப்போம்.
தேவகிரியைகள் நம்மில் திரளாய் உண்டாக முறுமுறுத்தலை விட்டொழிவோம்.
கர்த்தாவே, உமக்கு விரோதமாய் முறுமுறுத்து பெரும் சேதத்தை அனுபவித்த இஸ்ராயேலர் இப்பொழுது உம் குமாரனுக்கு விரோதமாக முறுமுறுத்து பெரும் தீங்கை அனுபவித்து வருகிறார்கள். நாங்கள் முறுமுறுக்காதவர்களாய் விசுவாசபாதையை முன்னெடுத்து செல்ல எங்களுக்கு உதவும்.