யூதர்கள் சமாரியருடனே சம்பந்தம் கலவாதவர்களானபடியால்
woman of Samaria,How u being a Jew,ask a drink from me,a Samaritan woman?.Jews have no dealings with SAMARITAN. (John 4:9)
Jn4:27; Jn8:48; Lk9:52-56; Lk10:33; Lk17:15-19; Act1:8; Act10:28; 2Ki17:24-41; Ezra4:1-24; Neh4:1,2.
யூதர்கள் சமாரியருடனே சம்பந்தங்கலவாதவர்களானபடியால், சமாரியா ஸ்திரீ அவரை நோக்கி: நீர் யூதனாயிருக்க, சமாரியா ஸ்திரீயாகிய என்னிடத்தில், தாகத்துக்குத்தா என்று எப்படிக் கேட்கலாம் என்றாள். (யோவான் 4:9)
யோவான் 4:27; யோவான் 8:48; லூக்கா 9:52-56; லூக்கா 10:33; லூக்கா 17:15-19; அப்ஊ1:8; அப்போஸ்தலர் 10:28; 2 இராஜாக்கள் 17:24-41; எஸ்றா 4:1-24; நெகேமியா 4:1,2.
இனவாதம் தவிர்க்கபட வேண்டும்:
இஸ்ராயேல் நாடு ரெகோபெயாம் காலத்தில் வடநாடு – இஸ்ரேல், தென்னாடு – யூதேயா என இரு பகுதிகளாக பிரிந்தது. வடபகுதியின் தலைநகர் – சமாரியா. இப்பகுதி பின்னர் அசீரியா பேரரசினால் சிறைபிடிக்கபட்டு அழிக்கபட்டது. சமாரியாவில் பல இன மக்களை குடியேற்றியதினிமித்தம் சமாரியர் என்ற புனை பெயர் பெற்றது.
தென்பகுதியின் தலைநகர் எருசலேம். இப்பகுதி பின்னர் பாபிலோனியர்களால் அழிக்கப்பட்டாலும் கோரேசு அரசனின் காலத்தில் செருபாபேல் தலைமையில் விடுதலை பெற்று இஸ்ராயேலில் குடியேறிற்று.
இந்த இருபகுதிகளுக்கும் சமூக, சமய தொடர்புகள் அவ்வளவாக இல்லை. கலப்பில்லாத யூதர்கள், கலப்பின யூதர்கள் என்ற பாகுபாடு அதிகமாயிற்று. சமாரியர்களோடு எவ்விதமான கொடுக்கல் வாங்கலும் வைத்து கொள்ளவில்லை.
இயேசு கிறிஸ்து பாவிகள், ஏழைகள், சமாரியர்களோடு அதிகமாக பழகினார். நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்ப அழைக்க வந்ததாக கூறினார். ஆனால் கிரேக்கர்களை சந்திக்க மறுத்து விட்டார். அதற்கான முக்கிய காரணங்கள் உண்டு.
இயேசு கிறிஸ்து சமுதாய பேதங்களை ஆதரிக்கவில்லை. ஆனால் அதற்கு எதிராக போராடவும் இல்லை.
சிறியவர் பெரியவரிடம் உரிமைகோருவதை விட பெரியவர் சிறியவருக்காய் இறங்கி வர தீர்மானிப்பது ராஜ்ய சகாப்தம் ஆகும்.
ஆதிசபையில் சமூக ஏற்றத்தாழ்வுகள் காணப்பட்டன. அப்போஸ்தலர் 6.
யூத கிறிஸ்தவர்கள், புறஜாதி கிறிஸ்தவர்கள் என்ற வேறுபாடு காணப்பட்டது.
பின்னர் சபை சரித்திர காலத்தில் மேற்கத்திய சபை, கிழக்கத்திய சபை என்ற பிரிவுகள் காணப்பட்டது.
இந்திய சரித்திரத்தில் ஜாதி அடிப்படையிலான சபைகள் எழும்பியிருந்தன. சமீப காலங்களாக மொழிபிராந்திய சார்பு சபைகள் எழும்புகின்றன.
ஜாதி துவேஷங்கள், சமுதாய வேறுபாடுகள் மறையும் பட்சத்தில் மொழி வேறுபாடுகள் அதிகரிக்கின்றன.
யூதெனென்றும், கிரேக்கனென்றும் இல்லை என்ற அனுபவ சித்தாந்தம் கிறிஸ்தவ வாழ்க்கையின் சாரமாக மாற வேண்டும்.
சபைக்குள் வேறுபாடு இருப்பதை ஏற்க முடியாது. சபைக்கு வெளியே உள்ள வேறுபாட்டை சபை உடைத்தெறிய முனைவது கடினமாகவே உள்ளது.
சபைகளுக்குள் வேறுபாடுகள் இருப்பதையும் ஏற்கமுடியாது. வெளியில் நிர்வாக ரீதியிலான வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் சபை வேறுபாடுகளை அனுமதிக்க முடியாது.
நாம் எளியவர்களின் வியாச்சியங்களை கவனத்தில் கொள்வதே நாம் உயர்வடைவதற்கான சிறந்த வழி.
கர்த்தாவே, நாங்கள் உம்மில் வேறுபாடுகளை களைந்து உமக்குள் ஒன்றாகியுள்ளோம். எங்கள் இணக்க வாழ்வை சிதைக்கும் செயல்களுக்கு நாங்கள் இடம் தராமல் இருக்க உம் ஆவியானவரை கொண்டு எங்களை ஒருமுகப்படுத்தும்.