யூதர்கள் இயேசுவைக் கொலைசெய்ய வகைதேடினர்
because the Jews sought to kill Jesus. (John 7:1)
John 5:16-18; Jn 7:19,25; Jn 10:39,40; Jn11:53,54; Mt 10:23; Mt 12:14,15; Mt 21:38; Lk 6:11; Lk13:31-33; Act 10:38; Act12:17.
இவைகளுக்குப்பின்பு, யூதர்கள் இயேசுவைக் கொலைசெய்ய வகைதேடினபடியால், அவர் யூதேயாவிலே சஞ்சரிக்க மனதில்லாமல் கலிலேயாவிலே சஞ்சரித்துவந்தார். (யோவான் 7:1)
யோவான் 5:16-18; யோவான் 7:19,25; யோவான் 10:39,40; யோவான் 11:53,54; மத்தேயு 10:23; மத்தேயு 12:14,15; மத்தேயு 21:38; லூக்கா 6:11; லூக்கா 13:31-33; அப்போஸ்தலர் 10:38; அப்போஸ்தலர் 12:17.
இயேசுவுக்கு எதிரானோர்:
இயேசுவுக்கு சொந்தமானவர் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. யோவான் 1:11
கலிலேயரும் அவரை முழுமனதுடன் ஏற்றுக்கொள்ளவில்லை. யோவாான் 7:3 உலகமும் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. யோவான் 1:10.
உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு என்றார் இயேசு. யோவான் 16:33 ஏனெனில் இவர்கள் உலகத்தாரல்ல. யோவான் 17:14.
இயேசுவை பகைத்த உலகம் அவரது பின்னடியார்களையும் பகைக்கும்.
யூதர்கள் இயேசுவை பகைக்க காரணம் அவர்களின் பொறாமையினால் என்று விவிலியம் கூறுகின்றது.
ஆனாலும் யூதர்களின் பாரம்பரிய சடங்குமுறைகளில் திருத்தங்களை கொண்டுவந்ததே முக்கிய காரணமாய் உள்ளது.
யூதர்களின் முயற்சிக்கு இயேசு விலகிச்சென்றார். அதற்கு காரணம் வேளை இன்னும் வரவில்லை என்பதே. தமக்கு நியமித்த பணியை செய்து முடிப்பது வரையிலும் யூதர்களால் இயேசுவை ஒன்றும் செய்யவியலாது. சபையானது செய்து முடிக்கும்படி பணித்துள்ளவைகளை செய்துமுடிப்பது வரையிலும் சபையை உலகமோ, பாவமோ ஒருபோதும் மேற்கொள்ளவியலாது.
தேவனால் அழைப்பு பெற்று ஊழியம் செய்யும் ஒருவரின் தேவன் நியமித்த பணியை செய்துமுடிப்பது வரையிலும் அந்நபரை எவரும் ஒன்றும் செய்ய இயலாது என்பதை நம்புங்கள்.
நாம் செய்யவேண்டியதை பாதியிலே விட்டுவிட்டுபோக அவர் நம்மை அழைக்கவில்லை.
இன்னொருவரிடம் விட்டுவிட்டுபோகவும் அழைக்கவில்லை.
பவுலைபோல நல்லபோராட்டம்போராடினேன், விசுவாசத்தை காத்துக்கொண்டேன், இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டுள்ளது என்று ஓட்டத்தை முடித்துவிட்டுதான் தேவராஜ்யம் போகவியலும்.
கொடுத்ததை செய்துமுடிக்காமல் அவரிடம் திரும்பவியலாது.
கர்த்தாவே, எங்களை இரட்சித்து உம்பணியை தந்து அபிஷேகித்து உள்ளீர். நீர் நியமித்த பணியை நாங்கள் செய்துமுடித்து வெற்றிவீரர்களாக உம்மண்டை கடந்துவர எங்களுக்கு ஒத்தாசையாயிரும்.