யூதர்களுக்கு பயந்ததினால் தாய்தகப்பன்மார் இப்படிச் சொன்னார்கள்.
His parents said these things because they feared the Jews. (John 9:22)
Jn7:13; Jn12:42,43; Jn19:38; Jn20:19; Lk12:4-9; Lk2:56-61; Act5;11-13; Gal2:11-13; Rev21:8; Ps27:1,2; Pr29:25; Isa51:12; 57;11.
அவனுடைய தாய்தகப்பன்மார் யூதர்களுக்குப் பயந்ததினால் இப்படிச் சொன்னார்கள். ஏனெனில் இயேசுவைக் கிறிஸ்து என்று எவனாவது அறிக்கை பண்ணினால் அவனை ஜெபஆலயத்துக்குப் புறம்பாக்கவேண்டுமென்று யூதர்கள் அதற்குமுன்னமே கட்டுப்பாடு செய்திருந்தார்கள். (யோவான் 9:22)
யோவான் 7:13; யோவான் 12:42,43; யோவான் 19:38; யோவான் 20:19; லூக்கா 12:4-9; லூக்கா 22:56-61; அப்போஸ்தலர் 5;11-13; கலாத்தியர் 2:11-13; வெளி21:8; சங்கீதம் 27:1,2;நீதிமொழிகள் 29:25; ஏசாயா 51:12; ஏசாயா 57;11.
பயம் :
தேவனுக்கு பயந்து வாழுகிற வாழ்க்கையும், கர்த்தருடைய வசனத்துக்கு அஞ்சி, நடுங்கி வாழும் வாழ்க்கையும், தேவனுடைய மனுஷனுக்கு கீழ்படிந்து பயந்து வாழுகிற வாழ்க்கையும் ஆவிக்குரிய முறையில் பயபக்தியின் அனுபவமாகும்.
பெற்றோருக்கும், பெரியோருக்கும், கணவருக்கும் அஞ்சி வாழும் வாழ்க்கை குடும்ப பக்தியாகும்.
நாட்டின் தலைவருக்கும், மேலான அதிகாரமுள்ளவர்க்கும் அஞ்சி வாழ்வது நாட்டு பக்தியாகும்.
பாவத்தினிமித்தம் உண்டாகும் பயம், சாத்தானுக்கு அஞ்சி வாழும் வாழ்க்கை,தேவனுக்கு எதிரானோருக்கு அஞ்சி வாழும் வாழ்க்கை யாவும் தேவனுக்கு பிரியமில்லாதது ஆகும்.
நன்மையை மறைப்பது தேவையற்ற பயத்தின் வெளிப்பாடு. கர்த்தராகிய இயேசுவை ஆண்டவர் என்றும், மீட்பர் என்றும், ஒரே தேவன் என்றும் அறிக்கையிடாதது பயத்தினால் உண்டான விளைவாகும். மனிதர்க்கு பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும். தேவனுக்கு பயப்படும் பயம் கண்ணியை அறுக்கும். தேவன்மேல் வைக்கும் பூரண அன்பு பயத்தை புறம்பே தள்ளிவிடும். விசுவாச வாழ்வு பயத்துக்கு எதிரானது. மரணத்தை கண்டும், அந்நிய தெய்வங்களை கண்டும், சாத்தானை கண்டும் பயப்படுவது விசுவாசத்தை வெளியேற்றிவிடும்.
இந்த தாய்தகப்பன்மார் யூதர்களுக்கு பயந்ததினால் இயேசுவை ஏற்றுகொள்ளவில்லை., அறிக்கையிடவில்லை. இன்றைக்கு நாம் இவ்விதம் காணப்படுவோமானால் விசுவாசத்தை இழந்தவர்களும், தேவனுக்கு தூரமானவர்களுமாவோம். ஜீவனை காப்பதைவிடவும் விசுவாசத்தை காப்பது நலம்.
கர்த்தாவே மனிதர்க்கும், உலகிற்கும் நாங்கள் அஞ்சி வாழ்ந்தது போதும். உமக்கு மட்டுமே அஞ்சி வாழும் வாழ்க்கையை உம் ஆவியினால் எங்களில் நிலைபடுத்தும்.