இயேசு யூதருடைய பஸ்கா பண்டிகையிலே எருசலேமுக்கு போனார்.

இயேசு யூதருடைய பஸ்கா பண்டிகையிலே எருசலேமுக்கு போனார்.

அதன் பின்பு அவரும் அவருடைய தாயாரும் அவருடைய சகோதரரும் அவருடைய சீஷரும் கப்பர்நகூமுக்குப்போய், அங்கே சில நாள் தங்கினார்கள்.

பின்பு யூதருடைய பஸ்காபண்டிகை சமீபமாயிருந்தது: அப்பொழுது இயேசு எருசலேமுக்குப் போய். (யோவான் 2:12,13)

யாத்திராகமம் 12:1-40; எண்ணாகமம் 28:16-25; உபாகமம் 16:1-8; 2 இராஜாக்கள் 23:21; 2நாளாகமம் 30; எஸ்றா 6:20; எபிரெயர் 11:28

“பஸ்கா” என்னும் சொல் Pesachஎன்னும் எபிரேயச் சொல்லிலிருந்து பிறக்கிறது. அதன் பொருள் கடந்துசெல்லுதல், தாண்டிப் போதல், கடத்தல் என்பதாகும். இதை ஆங்கிலத்தில் “Passover” என்பர். எபிரேய மக்கள் எகிப்து நாட்டில் அடிமைகளாக இருந்து துன்பங்கள் அனுபவித்த காலத்தில் அவர்களுடைய வீட்டு நிலையில் செம்மறியின் இரத்தம் பூசப்பட்டிருப்பது கண்டு ஆண்டவரின் தூதர் அவர்களுக்கு யாதொரு தீங்கும் இழைக்காமல் கடந்து சென்றார்என்னும் செய்தி யாத்திராகமம் 12:1-13 இல் உள்ளது. 
வடக்கு அரைக்கோள தொடக்கத்தைக் கொண்ட எபிரேய நாட்காட்டியின் நிசான் மாதத்தில் 15ம் நாள் பாஸ்கா தொடங்கி, ஏழு அல்லது எட்டு நாட்களுக்கு கொண்டாடப்படும். பரவலாக அதிகம் கடைப்பிடிக்கப்படும் யூத விடுமுறைகளில் இதுவும் ஒன்று.

விவிலியத்தில் வரும் பஸ்காவும் அதனோடு இணைந்ததும்.

பஸ்கா பண்டிகை. யாத்திராகமம் 34:25
கர்த்தருடைய பஸ்கா. யாத்திராகமம் 12:11
பஸ்காவாகிய பலி. யாத்திராகமம் 12:27
பஸ்காவின் நியமம். யாத்திராகமம் 12:43
பஸ்காவின் சகல முறைமை. எண்ணாகமம் 9:12
பஸ்காவின் ஆட்டுகுட்டிகள். 2நாளாகமம் 30:15
பஸ்கா என்னபட்ட புளிப்பில்லா அப்பப்பண்டிகை. லூக்கா 22:7
பஸ்கா புசிக்க தகுதியான இடம். லூக்கா 22:11
தீட்டுபடாமல் பஸ்கா புசித்தல். யோவான் 12:28
பஸ்காவாகிய கிறிஸ்து. 1கொரிந்தியர் 5:7

இந்த பஸ்கா பண்டிகையின் காலங்கள் கிறிஸ்தவ முறைமையில் புனித வாரமாக ஆசரிக்கின்றனர். குருத்தோலை ஞாயிறிலிருந்து உயிர்த்தெழுதலின் ஞாயிறு முடிய இந்த ஆசரிப்பு நடக்கின்றது.

– அங்கே ஆடு அடிக்கப்பட்டது. இங்கே பஸ்கா ஆடாகிய தேவ ஆட்டுகுட்டியாகிய கிறிஸ்து அடிக்கப்பட்டார்.

– அங்கே எகிப்திலிருந்து விடுதலை. இங்கே பாவத்திலிருந்து விடுதலை.

– அங்கே இஸ்ராயேலருக்கு மட்டுமே விடுதலை. இங்கே முழு உலகிற்கும் விடுதலை.

– அங்கே பாலும் தேனும் ஓடுகிற கானானுக்குள் செல்ல விடுதலை. இங்கே பரம கானானுக்குள் செல்ல விடுதலை.

எனவே புனித வாரத்தை நினைவு கூர்ந்து ஆசரிப்பதில் தவறில்லை என்று நினைக்கின்றேன்.

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவே எங்கள் பாவ சிறையிலிருந்து விடுதலையாக்க பஸ்கா ஆடாக அடிக்கபட்டீரே. நாங்களும் மனிதர்களின் பாவ சிறையிருப்பை அகற்ற உமது சிலுவை சுமந்து செல்ல உதவி செய்யும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME