யாரைக்குறித்துச் சொல்லுகிறாரென்று விசாரிக்கும்படி சைகைகாட்டினான்

யாரைக்குறித்துச் சொல்லுகிறாரென்று விசாரிக்கும்படி சைகைகாட்டினான்.

Simon Peter therefore motioned to him to ask who it was of whom He spoke. (John 13:24)

Luke 1:22; Luke 5:7; Acts 12:17; Acts 13:16; Acts 21:40; Matthew 10:11; Matthew 24:45; Matthew 25:36,43; Luke 22:23; Philipians 4:10; James 1:27; 1Peter 3:15.

யாரைக்குறித்துச் சொல்லுகிறாரென்று விசாரிக்கும்படி சீமோன் பேதுரு அவனுக்குச் சைகைகாட்டினான். (யோவான் 13:24)

லூக்கா 1:22; லூக்கா 5:7; அப்போஸ்தலர் 12:17; அப்போஸ்தலர் 13:16; அப்போஸ்தலர் 21:40; மத்தேயு 10:11; மத்தேயு 24:45; மத்தேயு 25:36,43; லூக்கா 22:23; பிலிப்பியர் 4:10; யாக்கோபு 1:27; 1பேதுரு 3:15.

விசாரித்தல்:
இயேசுகிறிஸ்துவை காட்டிக்கொடுக்கிறவன் குறித்து தெளிவற்று காணப்பட்டதினால் அதனை அறிய ஆவல் கொண்டிருந்த பேதுரு, யோவான் அப்போஸ்தலனிடம் விசாரிக்கும்படி சைகை காட்டினான். யோவான் இயேசுவுக்கு அருகில் இருந்ததினாலும், பேதுரு சற்று தூரமாய் இருந்ததினாலும் இந்த முறையை பின்பற்றினான் பேதுரு.

இயேசுகிறிஸ்துவின் தீர்க்கதரிசனங்களும், உரைகளும் அனேக நேரங்களில் அறிந்து கொள்ள இயலாத முறையில் காணப்படுவதுண்டு. அனேக விஷயங்கள் பின்னணியங்களின் அடிப்படையில் விளங்கிக் கொள்ள இயலும். சிலவை ஆவியானவரால் மட்டுமே விளங்கிக் கொள்ள இயலும். சிலவை மறைபொருள்களாகவே வைக்கப்பட்டிருக்கின்றது.

இரகசியங்களை அறியக்கூடிய ஆர்வம் பேதுருவுக்கு உண்டானதினால் தவறொன்றுமில்லை. இயேசுகிறிஸ்துவின் காரியங்கள் பலவற்றை தேவ வெளிப்பாடாக பெற்றவனே இந்த பேதுரு. இயேசுகிறிஸ்துவின் ஊழிய பணியின் தலைமைத்துவத்துக்கு எழும்புகிறவர்கள் தேவனுடைய காரியங்களை அறிந்துக் கொள்ளும் ஆர்வமுடையவர்களாய் இருக்க வேண்டும். அந்த ஆர்வமே அவர்களை கிறிஸ்துவோடு இணைந்து செல்ல வைக்கும். இணைந்து செல்வதினால்தான் அவரின் திட்டங்களும் செயல்முறைகளும் நடைமுறைக்கு வரும்.

விவிலியத்தை நன்றாக வாசித்தோ, தியானித்தோ, உபகரணங்களைக்கொண்டு ஆராய்ந்தோ அறிந்துக் கொள்வதில் தவறில்லை. ஆனால் அவைகள் ஆவியானவரின் நீரோட்டத்தில் இணைந்து காணப்படுவது அவசியமாகும்.

ஒருவரின் தனிப்பட்ட விஷயங்களை அறிய முனைவது தவறானதாக காணப்பட்டாலும் ஆவியானவர் அவைகளை வெளிபடுத்துகிறார் என்பதை நிராகரிக்க முடியாது. அவருடைய பார்வைக்கு முன்பாக சகலமும் நிர்வாணம்போல் காணப்படுவதால் பகுத்தறியும் ஞானம் நமக்கும் அவசியமாகின்றது.

ஆவிகளையும் மனித எண்ணங்களையும் உபதேசங்களையும் பகுத்தறியும் வரமே இக்காலத்தில் உன்னதமான வரமாகும். தன்னையும், தன்னுடையவர்களையும் அழிவினின்று காக்க இயலும்.
தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.

அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும். எபிரெயர் 4:12,13.

ADD YOUR COMMENT

Powered By Indic IME