மோசேயோடு தேவன் பேசினார், இவன் எங்கேயிருந்து வந்தவனென்று அறியோம்

மோசேயோடு தேவன் பேசினார், இவன் எங்கேயிருந்து வந்தவனென்று அறியோம்.

We know that God spoke to Moses;as for this fellow, we do not know where He is from. (John 9:29)

Num12:2-7; Num16:28; Deu34:10; Ps103:7; Ps105:26; Heb3:2-5; Jn7:27,40-43; Jn8:14; Ps22:6; Isa53:2,3; Phil2:6,7; Col1:15-20.

29 மோசேயுடனே தேவன் பேசினாரென்று அறிவோம், இவன் எங்கேயிருந்து வந்தவனென்று அறியோம் என்றார்கள். (யோவான் 9:29)

எண்ணாகமம் 12:2-7; எண்ணாகமம் 16:28; உபாகமம் 34:10; சங்கீதம் 103:7; சங்கீதம் 105:26; எபிரெயர் 3:2-5; யோவான் 7:27,40-43; யோவான் 8:14; சங்கீதம் 22:6; ஏசாயா 53:2,3; பிலிப்பியர் 2:6,7; கொலோசெயர் 1:15-20.

இவர் எங்கிருந்து வந்தார்?
இஸ்ராயேல் ஜனங்கள் மோசேயை குறித்து அறிந்திருந்தார்கள். மோசேயை கண்டிராவிட்டாலும் மோசேயின் நியாயபிரமானத்தின் மூலம் இஸ்ராயேலருக்கு மிகவும் பரிச்சியமானவராயிருந்தார். மோசேயை குறித்த நம்பிக்கை காலம்காலமாக இஸ்ராயேலரிடையில் இருந்து வந்ததாகும்.

ஆனால் இயேசுகிறிஸ்துவை குறித்து அதே நியாயபிரமாணமும் , நியாயபிரமாணத்தைக் கொடுத்த மோசேயும் கூறியிருப்பதை இஸ்ராயேலர் காணதவறியும், நம்ப தவறியும் போனார்கள். இது ஒரு பெரிய துன்பவியல் படலமாகும். மனிதனை அறிகின்ற அறிவு கூட தெய்வத்தைக் குறித்து அறிகின்ற அறிவுக்கு இடம்தரவில்லை இஸ்ராயேலர். இவ்விதமான தன்மைகள் இக்கால கிறிஸ்தவர்களிடையிலும் காணப்படுகிறது.

மேலும், இயேசுவின் பிறப்பை குறித்த வரலாற்றையும் இந்த இஸ்ராயேலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. நாசரேத்தூரிலிருந்து ஒரு நன்மையும் வராது என்பதினால் நாசரேத்தூர் இயேசு என்பதைக் கொண்டு இயேசுவை ஏற்றுகெகொள்ள விரும்பவில்லை.

இயேசுகிறிஸ்து ஆதியிலே தேவனோடிருந்தார் என்று இதனால்தான் யோவான் 1:1-27 வரையிலும் கூறியுள்ளார். அவர் மனிதனாக பிறந்திருந்தாலும், மனிதனாக வாழ்ந்திருந்தாலும் அவர் தெய்வத்தில் தெய்வமானவர். அவர் தேவனிடமிருந்து வந்தவர். தேவனை கொண்டு வாழ்ந்தார். தேவனிடமே சென்றுள்ளார். தேவனாலேயே மறுபடியும் வரப்போகிறார். இதனை நம்புகிறவர்களை அவர் வந்து தேவனண்டைக்கு கூட்டிச்செல்வார்.

இவர் யார். எங்கிருந்து வந்தார் என்ற கேள்விகளை துறந்து இயேசுவே ஆண்டவர் என்று நம்பி முன்னேறுவோம்.
நம் பிறப்பை நாம் ஆராய்வதில்லை. அதுபோலவே அவரது தோற்றத்தையும் ஆராய வேண்டாம். நம்புவோம்.

கர்த்தாவே உம்மை குறித்த ஆராய்ச்சியை நாங்கள் விட்டுவிட்டு எங்களைக் குறித்து நாங்கள் ஆய்ந்து உம்மோடு ஐக்கியபட எங்களுக்கு உதவி செய்யும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME