நீங்கள் மோசேயை விசுவாசித்தீர்களானால் என்னையும் விசுவாசிப்பீர்கள்
For if you believed Moses, you would believe Me; for he wrote about Me. (John 5:45-47)
Act26:23; Ro10:4; Mt11:13; Lk24:44; Ro3:19-21; Ro2:12,17-29; Ro7:9-14; 2Cor3:7-11; Gal3:10; Num21:8,9; Num24:17,18; deu18:15,18,19; Deu31:9; Jer6;16.
நீங்கள் மோசேயை விசுவாசித்தீர்களானால், என்னையும் விசுவாசிப்பீர்கள்: அவன் என்னைக்குறித்து எழுதியிருக்கிறானே. (யோவான் 5:45-47)
அப்போஸ்தலர் 26:23; ரோமர் 10:4; மத்தேயு 11:13; லூக்கா 24:44; ரோமர் 3:19-21; ரோமர் 2:12,17-29; ரோமர் 7:9-14; 2கொரிந்தியர் 3:7-11; கலாத்தியர் 3:10; எண்ணாகும் 21:8,9; எண்ணாகும் 24:17,18; உபாகமம் 18:15,18,19; உபாகமம் 31:9; எரேமியா 6;16.
வார்த்தையும், விசுவாசமும்:
எந்த வார்த்தையும் நம்பப்படுவதற்காகவே உரைக்கப்படுகிறது.
வார்த்தை நம்பப்படுவதினால்தான் கிரியைகளும் நடந்தேறுகின்றது. வார்த்தைகளை பொறுத்தே கிரியைகளும் அமைகின்றது.
சிலர் நன்றாக, தெளிவாக, அழகாக, தூய்மையாக பேசுவார்கள், எழுதுவார்கள். ஆனால் அவர்களின் அந்தரங்க வாழ்க்கை சாக்கடையாக இருக்கும். சாக்கடையிலிருந்து நல்ல வார்த்தைகள் வந்தாலும் அதிலே துர்மணம் மட்டுமே உண்டாகும். இதனால்தான் பிற்கிரியைகள் ஒழுக்கக்கேடுகளாக காணப்படுகின்றது.
சிலர் நல்ல வாழ்க்கை வாழுவார்கள். ஆனால் பேசவோ, எழுதவோ பழக்கமில்லாதிருப்பர். இவர்களை எவரும் கவனத்தில் கொள்வதேயில்லை.
பிரபலமானவர்கள் எதை சொன்னாலும் நம்பக்கூடிய நிலையில் மனிதன் இருக்கின்றான். ஆனால் விவிலியம் கூறும் வாழ்க்கைமுறைவார்த்தைகளை மட்டும் ஏற்றுகொள்ள தயங்குகின்றான்.
கிறிஸ்தவர் ஆபிரகாம், ஈசாக்கு,யாக்கோபு, எலியா, எலிசா, தாவீது போன்றவர்களுக்கு கொடுக்கிற மரியாதைகூட மோசேக்கு கொடுப்பதில்லை. மோசேயை குறித்து பேசுவதற்கே தயங்குகின்றனர். மோசேயை பேசாத நாம் எப்படி இயேசுவை குறித்து பேசுவோம்?
மோசேயின் வார்த்தைகள் வருங்கால தீர்க்கதரிசனமாக இருந்தது.
இயேசு வந்தபோதோ அவை நிகழ்கால தீர்க்கதரிசனங்களாக மாறி நிறைவடைந்தது.
நிறைவடைந்த பழைய ஏற்பாட்டு உபதேசங்களைவிடவும் நிறைவேறுதலுக்குள்ளாக்கிய
இயேசுவின் வார்த்தைகளும், வாழ்க்கை முறையும் நமக்கு அவசியமாயுள்ளது. எல்லா வார்த்தைகளும் கிறிஸ்துவிலே வந்து நிறைவடைவதினால் இயேசுவையே, அவர் வார்த்தையையே நாம் பிரசங்கிக்க வேண்டும். பழைய ஏற்பாட்டு செய்திகள் யாவும் இயேசுவை விசுவாசிப்பதையே அழுத்தி கூறுகின்றது. பழைய ஏற்பாட்டு செய்திகள் விசுவாசத்தின் வார்த்தைகளல்ல, விசுவாசத்திற்கு வழிகாட்டும் வார்த்தைகள். கிறிஸ்துவின் வார்த்தைகள் மட்டுமே விசுவாசத்தின் வார்த்தைகள்.
– விசுவாசத்திற்கு வழிகாட்டும் வார்த்தைகள் உண்டு.
– விசுவாசத்திற்கு வழிநடத்தும் வார்த்தைகள் உண்டு
– விசுவாசத்தில் வளர்ச்செய்யும் வார்த்தைகள் உண்டு.
எல்லாம் இயேசுவில் நிறைவடைவதே கிறிஸ்தவம்.
கர்த்தாவே உம் வார்த்தைகள் உம் மகன்மேல் எங்களுக்கு நம்பிக்கையை ஊட்டின. இப்பொழுது அவரின் வார்த்தைகளை நாங்கள் பிடித்துகொண்டு முன்னேறிச்செல்ல எங்களுக்கு உதவிடும்.