மொண்டு கொண்டு போங்கள்.
அவர் அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது மொண்டு, பந்திவிசாரிப்புக்காரனிடத்தில் கொண்டு போங்கள் என்றார், அவர்கள் கொண்டுபோனார்கள். (யோவான் 2:8)
மத்தேயு 2:9; லூக்கா 17:12-19; யோவான் 4:51; அப்போஸ்தலர் 5:15; உபாகமம் 28:19; 2 இராஜாக்கள் 2:1-14; சங்கீதம் 6:17.
ஜாடியில் தண்ணீரை நிரப்ப கூறினார். மறுபடியும் ஜாடியிலிருந்து மொண்டு செல்ல கூறினார்.
கீழ்படிதலும் – அற்புதமும்.
கீழ்படிதல் – obedience.
– அறிந்து, தெரிந்து, புரிந்து கீழ்படிதல். Matured obedience.
– அறியாது, தெரியாது, புரியாது கீழ்படிதல் – Childlike Obedience.
– எதிர் கேள்வி கேட்காது, நம்பி, கீழ்படிதல் – implicit Obedience.
– பட்டு, அனுபவித்து கீழ்படிதல் – Experiential Obedience.
– கடமை சார்ந்த கீழ்படிதல் – Duty oriented Obedience.
இயேசு கிறிஸ்துவின் கீழ்படிதலே மிக உயரிய கீழ்படிதல்.
ஏனெனில் அவர் மரணம் வரையிலும் கீழ்படிந்தார்.
எனவே அவர் வானம் வரையிலும் உயர்த்தப்பட்டார்.
கர்த்தாவே நாங்கள் நாவு சார்ந்த – மாய்மாலமான கீழ்படிதல் இல்லாதவர்களாய் வாழவும், உண்மையாய் உத்தமமாய் உமக்கு கீழ்படிந்து நடக்கவும் உமது ஆவியானவர் மூலம் பெலன் தந்தருள வேண்டுமென்று இயேசுவின் மூலமாய் கேட்கிறோம்.