மெய்யாகவே இவர் உலகத்தில் வருகிறவரான தீர்க்கதரிசி.
This is truly the Prophet who is to come into the world. (John 6:14)
Mt11:3; Mt21:11; Mk6:15; Lk7:16; Lk24:19; Jn1:21; Jn4:19; Jn7:12,40; Jn11:27; Act3:22-24; Act7:37; Gen49:10; Deu18:15-18.
இயேசு செய்த அற்புதத்தை அந்த மனுஷர் கண்டு: மெய்யாகவே இவர் உலகத்தில் வருகிறவரான தீர்க்கதரிசி என்றார்கள். (யோவான் 6:14)
மத்தேயு 11:3; மத்தேயு 21:11; மாற்கு 6:15; லூக்கா 7:16; லூக்கா 24:19; யோவான் 1:21; யோவான் 4:19; யோவான் 7:12,40; யோவான் 11:27; அப்போஸ்தலர் 3:22-24; அப்போஸ்தலர் 7:37; ஆதியாகமம் 49:10; உபாகமம் 18:15-18.
உலகில் வருகிறவரான தீர்க்கதரிசி:
மனிதரிடத்திலிருந்து மனிதரிடத்துக்கு வருகிற தீர்க்கதரிசிகள் உண்டு. தேவனிடத்திலிருந்து மனிதரிடத்துக்கு வருகிற தீர்க்கதரிசிகளும் உண்டு. மனிதரிடத்திலிருந்து தேவனுக்காய் மனிதரிடத்துக்கு அனுப்பப்படுகிற தீர்க்கதரிசிகளும் உண்டு.
இயேசுகிறிஸ்து தேவனிடத்திலிருந்து மனிதரிடத்துக்கு அனுப்பப்பட்ட தீர்க்கதரிசி. எனவே இயேசுவின் செய்தியும், கிரியைகளும், வாழ்வும் மற்றுள்ள தீர்க்கதரிசிகள் யாவரையும் விட மேலானதாக இருக்கும்.
இயேசுகிறிஸ்துவைவிடவும் மேலான தீர்க்கதரிசிகள் எவரும் இல்லையென்பதினால் பழைய ஏற்பாட்டு தீர்க்கர்களை மேற்கோள் காட்டலாமேயன்றி அவர்களை பின்பற்றுவது தகாது. அவர்கள் யாவரும் இயேசுவின் நாளை காண ஆசையாயிருந்ததினால் நாமும் இயேசுவை மட்டுமே பின்பற்ற வேண்டும்.
சாத்தானால் உலகிற்கு கொண்டுவரப்பட்ட தீர்க்கதரிசிகள் இவ்வுலகில் இருந்தார்கள், இருக்கிறார்கள்.
இயேசு என்ற தீர்க்கதரிசி தேவனால் உலகிற்கு கொண்டுவரப்படுவார் என்பதை அறிந்த சாத்தான் அதற்கு முன்னாடியும், பின்னாடியும் பற்பல தீர்க்கதரிசிகளை எழுப்பி இயேசுவின்மேல் ஜனங்கள் விசுவாசம் கொள்ளாதபடிக்கு கவனித்துக் கொண்டான். இந்த சாத்தானின் இரகசிய கிரியைகளை அறிந்த தேவன் காலம் காலமாய் யூதர்கள் மத்தியில் தீர்க்கர்களை எழுப்பி இயேசுவின் வருகையை குறித்து தீர்க்கதரிசனம் சொல்லவைத்தார். ஆனால் நம்மில் பலர் தேவனால் நிராகரிக்கப்பட்ட தீர்க்கர்களின் உரைகளை படித்து கொண்டு இயேசுவை பின்பற்றுகிறோம் என்பது வெட்கக்கேடு.
இயேசுவாகிய தீர்க்கதரிசி
– இயேசுவாக வந்து தீர்க்கதரிசன பணியை செய்தார்.
– மேசியாவாக வந்து தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றி முடிப்பார்.
அன்பானவர்களே!!!
உங்கள் வாழ்வின் கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் கைக்குள் வைத்திருப்பவர் நம் இயேசு மட்டுமே.
இயேசுகிறிஸ்துவின் உயிர்ப்பின் ஆவி உன்னில் இருக்குமானால் நீயும் ஒரு தீர்க்கதரிசியே.
ஆனாலும் உன்னுடைய போதகருக்கு, அல்லது தலைமை ஊழியருக்கு நீ அடங்கியிருப்பதே மெய்யான தீர்க்கதரிசன பண்பாகும்.
இயேசுவின் ஜீவன் எந்த சபையிலோ, குடும்பத்திலோ, மனிதரிலோ இருக்குமானால் தீர்க்கதரிசன ஆவி அங்கே கிரியை செய்கிறது என்றாகும்.
கர்த்தாவே, உம்குமாரனை உமக்காக எங்களிடத்திலே ஒரு தீர்க்கதரிசியாக அனுப்பி எங்களை தேவனுக்கு நேராக திருப்பினீரே. உமக்கு நன்றி. நாங்கள் இனி பின்னிட்டு திரும்பாமல் எல்லாவற்றிலும், எந்த சூழல்களிலும் முன்னிட்டு செல்ல எங்களுக்கு கிருபை செய்தருளும்.