இந்த ஆலயத்தை இடித்து தள்ளுங்கள். மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன்.
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன் என்றார். (யோவான் 2:19)
யோவான் 2:18-21; யோவான் 5:18; யோவான் 10:17,18; யோவான் 11:25; ரோமர் 4:24; ரோமர் 6:4; ரோமர் 8:11; 1கொரிந்தியர் 15:3,4,12; கொலோசெயர் 2:12; 1 பேதுரு 3:18.
இப்பகுதியில் 4 தியானங்கள் உள்ளன
1. அடையாளம் கேட்டவர்க்கு கொடுக்கபட்ட மறைமுக அடையாளம். ஆலயத்தை சுத்திகரித்த நீர் உமது அதிகாரத்துக்கான – தேவ குமாரனுக்குரிய அடையாளத்தை தாரும் என்று கேட்டனர். அவரோ தமது சரீரமாகிய ஆலயம் குறித்த அடையாம் தந்தார். மாற்கு 8:11,31; லூக்கா 11:39; அப்போஸ்தலர் 2;24,32; அப்போஸ்தலர் 3:15,26.
2. எருசலேம் தேவாலயம். ஏரோதுவினால் கட்டபட்ட இந்த தேவாலயம் யூதர்களால் மிகவும் மதிக்கபட்ட ஒன்று. இந்த ஆலயத்தை இடிக்கும்படி கூறுவதாக யூதர் புரிந்துக் கொண்டனர். மத்தேயு 26:61; மத்தேயு 27:40. ஆனால் இந்த ஆலயம் பின்னர் நீரோ மன்னனின் காலத்தில் கிபி70ல் தீக்கிரையாக்கப்பட்டது. இதுவரையிலும் இவ்வாலயம் கட்டபடவில்லை. மத்தேயு 24:2, மாற்கு 13:2; லூக்கா 19:44.
3. தமது பாடு மரண உயிர்ப்பு. இயேசு கிறிஸ்து சிலுவையை குறித்து பேசினார். ஊழியம் செய்து ஜனங்களை மீட்க ஜீவன் கொடுப்பது குறித்தும் பேசினார். மூன்றாம் நாள் உயிரோடு எழும்புவதை குறித்தும் அடிக்கடி பேசினார். மாற்கு 8:31; மாற்கு 10:33,34; மத்தேயு 16:21; லூக்கா 9:22
4.சரீரமாகிய ஆலயம். இயேசுவின் சரீரமாகிய ஆலயமே சபை என்னப்படுகிறது. சபை என்பது நம்மை குறிக்கின்றது. மீட்க படுகிற ஒவ்வொருவரும் ஆலயமாயிருக்கிறோம். 1கொரிந்தியர் 3:16; 1 கொரிந்தியர் 6:19; 2கொரிந்தியர் 6:16; எபேசியர் 2:20-22; கொலோசெயர் 1:18; 1 பேதுரு 2:4,5.
இயேசுகிறிஸ்துவின் வசனங்களை அன்று யூதர்கள் தவறுதலாக புரிந்துக்கொண்டு அவர்மேல் பழி சுமத்தியதுபோல இக்காலத்திலும் கர்த்தராகிய இயேசுவின் மேல் சேற்றை வாரி இறைப்போர் பலர்.
கர்த்தாவே உமது வாக்குகள் ஆவியாயும், ஜீவனாயும் உள்ளது. அவைகளை புரிந்துக்கொண்டு உம் வழி நடந்து உம்மை பின்பற்றி உம்மைபோல வாழ உமது ஆவியை அளவில்லாமல் தந்து எங்களை வழிநடத்தும்.