முழுகினவன் முழுவதும் சுத்தமாயிருக்கிறான்

முழுகினவன் முழுவதும் சுத்தமாயிருக்கிறான்.

He who is bathed needs only to wash his feet, but is completely clean. (John 13:10)

Matthew 6:12; Romans 7:20-23; 2Corinthians 7:1; Ephesians 4:22-24; Ephesians 5:26,27; I Thessalonians 5:23; James3:2; 1John1:7-10; Ecclesiastes 7:20.

இயேசு அவனை நோக்கி: முழுகினவன் தன் கால்களைமாத்திரம் கழுவவேண்டியதாயிருக்கும், மற்றப்படி அவன் முழுவதும் சுத்தமாயிருக்கிறான், நீங்களும் சுத்தமாயிருக்கிறீர்கள், ஆகிலும் எல்லாரும் அல்ல என்றார். (யோவான் 13:10)

மத்தேயு 6:12; ரோமர் 7:20-23; 2கொரிந்தியர் 7:1; எபேசியர் 4:22-24; எபேசியர் 5:26,27; 1தெசலோனிக்கேயர் 5:23; யாக்கோபு 3:2; 1யோவான் 1:7-10; பிரசங்கி 7:20.

முழுகினவன் சுத்தமாயிருக்கிறான்:
முழுகினவன் என்ற சொல்லுக்கு கழுவினவன், குளித்தவன் என்று பொருளாகின்றது. இறந்துபோன மனிதனை கழுவதுமாகும். காயங்களில் உள்ள இரத்தகறைகளை கழுவுவதுமாகும். இச்சொல் திருமுழுக்கை குறிப்பிடவில்லை. இவ்வசனத்தில் ஒரே பொருள் கொண்ட மூன்று கிரேக்கச் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
குளித்தவன் வீட்டுக்கு வரும்போது கால்களை மட்டும் கழுவி விட்டு வீட்டுக்குள் நுழைகிறான். சீஷர்கள் இயேசுவோடு வாழ்ந்து, அவருடைய வார்த்தைகளைக் கற்று சுத்திகரிக்கப்பட்டவர்களாயிருக்கிறதினால் அவர்கள் கால்கள் மட்டுமே கழுவபட்டால் போதுமானது.

இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவபட்டவர்கள் அவருடைய ஆவியினாலும், அவருடைய வசனத்தினாலும் அனுதினமும் சரீரத்தையும், பழக்கவழக்கங்களையும் கழுவி சுத்திகரித்துக்கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. ஊழியம் செய்கின்றவர்களும், விசுவாசிகளும் இவ்வித அனுதின சுத்திகரிப்பைசெய்து கொள்வது அவசியமாகின்றது.

இரட்சிக்கப்பட்டவர்கள் பாவத்திலிருந்தும், பாவபிடியினின்றும் மீட்கப்பட்டார்கள். மீட்கபட்ட தேவ ஜனம் பாவம் நிறைந்த, அக்கிரமம் நிறைந்த, அசுத்தம் நிறைந்த இவ்வுலகத்திலே வாழ்வதினால் அனேக நேரங்களில் இரட்சிப்பின் வஸ்திரம் கறைபடுகின்றது. பாவத்தினால் அல்ல, பாவத்தின் சுவடுகளினாலும் பிழைகளினாலும், சிறுதவறுகளினாலும், அவிசுவாசமாகிய பேச்சுகளினாலும் கறைபடுகின்றது. எனவே, அனுதின ஜெபம், அனுதின தியானம் மிகவும் அவசியமாகின்றது. ஜெபிப்பதினால் தாழ்மையும், தியானிப்பதினால் கீழ்படிதலும் உண்டாகி முழுமையான, மகிமைபடுதலுக்குரிய தூய்மையாக்கப்படுதலுக்கு நேராக முன்னேறுகிறோம்.

சுத்தமுள்ளவன் சுத்தமாவதையே விரும்புகிறான்.
மாற்றமடைந்தவன் மேலும் மாற்றப்படுவதையே விரும்புவான். அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.

இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள். நாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள். வெளி22:11-15.

ADD YOUR COMMENT

Powered By Indic IME