முகாந்தரமில்லாமல் என்னைப்பகைத்தார்கள் என்று விவிலியம் கூறுவதாயிற்று.
Word might be fulfilled which is written in their law,They hated Me without a cause. (John 15:25)
Psalm 7:3-5; Psalm 35:19; Psalm 69:4; Psalm 109:3; Psalm 25:3; Psalm 35:7; Psalm 59:3; Psalm 119:78,161; Isaiah 54:15-17.
முகாந்தரமில்லாமல் என்னைப்பகைத்தார்கள் என்று அவர்களுடைய வேதத்தில் எழுதியிருக்கிற வாக்கியம் நிறைவேறும்படிக்கு இப்படியாயிற்று. (யோவான் 15:25)
சங்கீதம் 7:3-5; சங்கீதம் 35:19; சங்கீதம் 69:4; சங்கீதம் 109:3; சங்கீதம் 25:3; சங்கீதம் 35:7; சங்கீதம் 59:3; சங்கீதம் 119:78,161; ஏசாயா 54:15-17.
காரணமில்லா பகை:
உலகம் உருவான காலத்திலிருந்தே தேவனுக்கு விரோதமாக சாத்தானுடைய கூட்டமும், சத்துருக்களும், மனுஷர்களும் காரணமில்லாமல் பகையை வளர்த்து கொண்டிருக்கின்றார்கள். அதாவது, ஆதி படைப்பில் நன்மை மட்டுமே வாசமாயிருந்ததினால் எதிர் விளைவுகள் காணப்படவில்லை. சாத்தானின் முகவராக மாறிபோன சர்ப்பம் ஆதி மனிதர்களை வஞ்சித்து எதிர் விளைவை உருவாக்கியதிலிருந்து தேவன் அந்த எதிர் விளைவுகளுக்கு எதிரான திட்டங்களையும், செயல் முறைகளையும் வகுத்து செயல்படுத்துகின்றார். தனது படைப்பின் மகிமையைக் குலைத்து போட்டவனையும், குலைத்துபோட காரணமாயிருந்தவனையும், குலைத்துபோடபட்டவனையும் தமது பிரமாணத்தைக் கொண்டும், கிரியைகளை வெளிபடுத்தியும் எதிர்த்து செயல்பட்டார். அதிலிருந்து தேவனுக்கு எதிராகவும், தேவனை சார்ந்து நிற்பவர்களுக்கு எதிராகவும் காரணமேயில்லாமல் பகையை வளர்க்கின்றார்கள்.
நன்மை செய்கிறவனையும், நற்செய்தி அறிவிப்பவனையும், யோக்கியதியுள்ளவனையும், உத்தமனையும், உண்மையுள்ளவனையும், நேர்மையுள்ளவனையும் அங்கீகரிக்கிற கூட்டம் உண்டோ இல்லையோ எதிர்த்து சண்டைபண்ணுகிற கூட்டம் அதிகமாயிற்று. ஒருவருடைய குற்றத்தை சுட்டிகாட்டும்போது அதை அங்கீகரித்து தன்னை சீர்படுத்திக்கொள்வதற்கு பதில் எதிர்வினையாற்றும் மனப்பாங்கு எக்காலத்திலும் இல்லாத அளவுக்கு அதிகரித்து விட்டது. பிள்ளைகளை குற்றம் சொன்னால் அவர்கள் கேட்காததினால்தான் பிள்ளைகள் போகிற – விரும்புகிற வழியில் பெற்றோர் சென்றுவிட்டனர். பகை வேண்டாம் என்று பகையாளியின் கைபாவையாகி விட்டனர் பெற்றோர்.
காரணமின்றி பகைக்கப்பட்ட இயேசுவைபோல நாம் வாழுவோமெனில் நமக்கும் காரணமின்றி காயங்களும், வேதனைகளும் உண்டாகும். ஆனாலும் ஜெயித்த இயேசு நமது ஆறுதலாக இருக்கிறார். அவர் மார்பில் சாய்ந்து கொள்வோம்.
என் கடிந்துகொள்ளுதலுக்குத் திரும்புங்கள்; இதோ, என் ஆவியை உங்களுக்கு அருளுவேன்; என் வார்த்தைகளை உங்களுக்குத் தெரிவிப்பேன். நீதிமொழிகள் 1:13.
இதோ, உனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடினால், அது என்னாலே கூடுகிற கூட்டமல்ல; எவர்கள் உனக்கு விரோதமாய்க் கூடுகிறார்களோ, அவர்கள் உன் பட்சத்தில் வருவார்கள். இதோ, கரிநெருப்பை ஊதி, தன்கிரியைக்கான ஆயுதத்தை உண்டுபண்ணுகிற கொல்லனையும் நான் சிருஷ்டித்தேன்; கெடுத்து நிக்கிரகமாக்குகிறவனையும் நான் சிருஷ்டித்தேன். உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்; இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்தரமும் என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று கர்த்தர் சொல்கிறார். ஏசாயா 54:15-17.