ஒன்றுக்கும்

மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது.

The flesh profits nothing. (John 6 :63)
Ro2:25; Ro3:1,2; 1Cor11:27-29; Gal5:6,16,17,19-21; Gal6:8,15; 1Tim4:8; Heb13:9; 1Pet3:21; Mt25:41; Mk14:38; Jn3:6.

ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது, நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது. (யோவான் 6:63) 

மத்தேயு 2:25; மத்தேயு 3:1,2; 1கொரிந்தியர் 11:27-29; கலாத்தியர் 5:6,16,17,19-21; கலாத்தியர் 6:8,15; 1தீமோத்தேயு 4:8; எபிரெயர் 13:9; 1 பேதுரு 3:21; மத்தேயு 25:41; மாற்கு 14:38; யோவான் 3:6.

உதவாத மாம்சம்:

இயேசுகிறிஸ்து தனது மாம்சத்தை குறித்து பேசும்போது தன் மாம்சத்தை புசிக்கிறவன் ஜீவனடைவான் என்றார். ஆனால் இவ்விடத்தில் மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது என்கிறார். மாம்சமானது ஒரு நன்மையையும் கொண்டுவராது என்கிறார். அதாவது கிறிஸ்துவை விசுவாசியாதவர்களின் – கிறிஸ்துவின் மாம்சத்தை புசியாதவர்களின் மாம்சமானது எந்த நன்மையையும் – தேவனுக்கு மகிமையையும் கொண்டுவராது. கிறிஸ்துவை விசுவாசித்து அவரோடு நல் உறவை வைத்திருப்பவர்களே மாம்சத்தினால் தேவனை மகிமைபடுத்த முடியும். மற்றவர்களின் மாம்சம் அழிவுக்கானது . மண்ணோடு அழிந்துபோவதாகும். கிறிஸ்துவை விசுவாசியாதவர்களின் மாம்ச செயல்பாடுகள் உலகிற்கு , மனிதர்களில் பலருக்கு பயன்படுவதாக நாம்கூறலாம். ஆனால் தேவனுடைய பார்வையில் அது ஒன்றுக்கும் உதவாது.

மண்ணை மாம்சமாக்கிய தேவனுக்கு நற்பெயரை கொண்டுவராத எந்த மாம்சமும் அழிவுக்குரியதே – நரகிற்குரியதே.

அழுக்கும், ஊத்தையும், நாத்தமும் கொண்ட மாம்சத்தினால் தேவன் மகிமைபடவேண்டுமானால் இயேசுவின் வசனத்தினாலும், இரத்தத்தினாலும், ஆவியினாலும் கழுவபடவேண்டும். கழுவபடாத சரீரம் பயனற்றது. அழுக்காககப்பட்ட சரீரம் அழிவுக்கானது.

கர்த்தாவே எங்கள் மாம்சமானது உம்மாலே பெற்றதாயிருக்க செய்வதற்காக நன்றி. நாங்கள் அழுக்கானவைகளில் பன்றியைபோலவும், நாயை போலவும் புரண்டு எங்கள் கழுவப்பட்ட மாம்சத்தை மறுபடியும் அழுக்காக்காமல் இருக்க உதவிடும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME