மறுநாள் இயேசு எருசலேமுக்கு வருகிறாரென்று கேள்விப்பட்டு திரளான ஜனங்கள் கூடினர்

மறுநாள் இயேசு எருசலேமுக்கு வருகிறாரென்று கேள்விப்பட்டு திரளான ஜனங்கள் கூடினர்.

ext day great multitude had come to feast,when they heard that Jesus was coming to Jerusalem. (John 12:12)

Jn11:55-57; Jn6:15; Mt20:17; Mt21:1; Mk11:1; Lk19:28,29.

மறுநாளிலே இயேசு எருசலேமுக்கு வருகிறாரென்று பண்டிகைக்கு வந்த திரளான ஜனங்கள் கேள்விப்பட்டு, (யோவான் 12:12)

யோவான் 11:55-57; யோவான் 6:15; மத்தேயு 20:17; மத்தேயு 21:1; மாற்கு 11:1; லூக்கா 19:28,29.

எருசலேம் பயணம்:
பெத்தானியாவிலிருந்து இயேசு எருசலேமுக்கு செல்லும்படி விரும்பினார். பெத்தானியாவிலிருந்து எருசலேம் 15 பர்லாங்க் தூரத்தில் உள்ளது. பெத்தானியா ஒலிவமலையில் உள்ளது. இங்கிருந்து இயேசு எருசலேம் செல்ல விருப்பமுள்ளவரானார். ஏற்கனவே எருசலேமுக்கு நேராய் போக விரும்புவதைக் கேட்ட சீஷர்கள் பயமும், திகிலும் உடையவர்களாகவே பெத்தானியா வந்தனர். இப்பொழுது பெத்தானியாவிலிருந்து எருசலேம் செல்ல நினைப்பது சீஷர்களுக்கு மிகுந்த வேதனையையும், வியாகுலத்தையும் கொடுத்திருக்கக் கூடும். இதனால்தான் இயேசுவைப் பிடித்தபோது சீஷர்கள் தப்பியோடினர்.

சீஷர்கள் இப்படியிருக்க இயேசுவின் வருகையைக் குறித்து கேள்விப்பட்ட ஜனங்கள் கூட்டம் கூட்டமாக எருசலேமிலிருந்து பெத்தானியாவிலிருந்து வரும் இயேசுவை நோக்கி ஓடினார்கள். ஏற்கனவே லாசருவை பார்க்கும்படி திரள்கூட்டம் பெத்தானியாவில் இயேசுவோடுகூட உள்ளார்கள். அதோடுகூட எருசலேமிலிருந்து பண்டிகை கொண்டாட வந்த ஜனங்களும் இயேசுவுடன் சேர்ந்துகொண்டனர். இது மகா பெரிய கூட்டமாய் அமைந்தது. இது பணம் கொடுத்து சேர்த்த கூட்டமல்ல, இயேசுவின் அற்புதங்களையும், அடையாளங்களையும் குறித்து கேள்விப்பட்டு இயேசுவை பார்க்கவும் அவரை ருசிக்கவும் தானாக சேர்ந்த கூட்டம்.
லாசருவை பார்க்கக்கூடிவந்த ஜனங்களினிமித்தம் லாசருவை கொலைசெய்ய விரும்பியவர்கள் இப்பொழுது லாசருவை விட்டுவிட்டு இயேசுவை நோக்கி தங்கள் கோரமுகத்தை திருப்பினார்கள்.

இன்றைக்கும் இயேசுவை சபைகளில் பார்க்கவும், சபைமூலமாக இயேசுவின் அற்புதங்களை அனுபவிக்கவும் விரும்பி திரள்கூட்டம் இயேசுவை பின்பற்றிக்கொண்டுதானிருக்கிறது. இயேசுவை பின்பற்றுகிறவர்கள் வசியப்படுத்தப்பட்டவர்களல்ல இயேசுவை ருசித்தவர்கள். பணம் கொடுத்து பெறப்பட்டவர்களல்ல கிறிஸ்துவின் குணம் – தன்மை – சாயல் பெற விரும்பி வந்தவர்கள்.

எண்ணத்துக்காய் சேர்க்கப்பட்டவர்களல்ல அற்புதங்களையும், உபதேசங்களையும் கண்டு கேட்டு பின்பற்றுகிறவர்கள். ஆசைகாட்டி சேர்க்கப்படுகிறவர்களல்ல பாவங்கள் மன்னிக்கப்பட்டு இரட்சிக்கப்பட்டவர்களின் கூட்டம்.

இயேசுவை உங்களில் காண வாஞ்சிக்கிறோம்.
அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன். சங்கீதம் 91:14.

ADD YOUR COMMENT

Powered By Indic IME