மரியாள் சீக்கிரமாய் எழுந்து அவரிடத்தில் வந்தாள்

மரியாள் சீக்கிரமாய் எழுந்து அவரிடத்தில் வந்தாள்

As soon as she heard that, she arose quickly and came to Him.Jesus had not yet come into the town, but was in the place where Martha met Him. (John 11:29,30)

Ps27:8; Ps119:59,60; Pro15:22-24; Song3:1-4; Hab2:2.

அவள் அதைக் கேட்டவுடனே, சீக்கிரமாய் எழுந்து, அவரிடத்தில் வந்தாள். (யோவான் 11:29)

இயேசு இன்னும் கிராமத்திற்குள் வராமல், மார்த்தாள் தம்மைச் சந்தித்த இடத்திலே இருந்தார். (யோவான் 11:30)

சங்கீதம் 27:8; சங்கீதம் 119:59,60; நீதிமொழிகள் 15:22-24; உன்னதப்பாட்டு 3:1-4; ஆபகூக் 2:2.

அவரை சந்திக்க தீவிரம்:
மார்த்தாள் தன்னிடம் சொன்னவுடனே மரியாள் தீவிரமாய் எழும்பி இயேசுவிடம் வந்தாள். துக்கவீட்டுக்கு சென்று விசாரிக்காது துக்கவீட்டு காரர்களே தன்னை சந்திக்க வரவேண்டும் என்று காட்டப்படுகிறது. நாம் நமது நன்மைகளின் காலத்திலும், தீமைகளின் காலத்திலும் அவரை சந்திக்க ஆயத்தமாக வேண்டும். உன் தேவனை சந்திக்க ஆயத்தப்படு என்பது விவிலிய வாக்கு. நம்மை காண விரும்புகிறவரும், நமக்கு நன்மை செய்ய ஆவலுள்ளவரும்,நம்மை தம்மிடம் அழைக்கிறவருமாகிய இயேசுவை சந்திக்க ஆயத்தமாக வேண்டும். அவரை சந்திக்க அவரிடம் செல்ல வேண்டும். அவர் எங்கும் இருக்கிறவர்தான். அவர் எல்லாம் அறிந்தவர் தான். அவர் எல்லாம் செய்ய வல்லவர்தான். ஆனாலும் நாம் அவரை சந்திக்கும் மனோபாவத்தைை அவர் அறிய விரும்புகிறார். அவர் கிருபையுள்ளவர்தான். இரக்கமுள்ளவர்தான். அன்புள்ளவர்தான். ஆனாலும் நாம் எந்த அளவுக்கு அவரை நெருங்க ஆயத்தமாகிறோமோ அந்த அளவுக்கு தான் அவரின் கிருபை பெருகும்.

அவரை சந்திக்க மரியாள் பயன்படுத்திய ஆயுதம் சீக்கிரமாய் என்பது ஆகும். அவள் எந்த ஒன்றுக்கும் இடம் கொடுக்காமல் அவரை சந்திக்க விரைந்ததினால் நன்மையை பெற்றாள். நல்ல பங்கை பெற்றவள் நன்மையையும் பெறுகின்றாள்.

நமது அவசரம் பணம் சம்பாதிப்பதிலும், அறிவை வளர்ப்பதிலும், உலக கடமைகளை செய்வதிலும், வேலைகளை செய்வதிலும், மனித உறவுகளை தேடி கண்டுபிடித்து மெருகேற்றுவதிலும் செல்வழிக்கும் அதிவேக தன்மைகளை இயேசுவை சந்திக்க பயன்படுத்துவோமெனில் மேற்கண்ட காரியங்கள் யாவும் நமக்கு உண்டாகும். அவரோடுள்ள நல்ல உறவுகளே நம்மை மேன்மையடைய வைக்கிறது. அவரை சந்திக்க நேரம் ஒதுக்குங்கள். அவரை சந்திக்க இணக்க மனமாயிருங்கள்.
உன் தேவனை சந்திக்க ஆயத்தபடு. ஆமோஸ்4:12.

ADD YOUR COMMENT

Powered By Indic IME