மனுஷகுமாரன்

அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்.

which the Son of Man will give you. (John 6:27b)
Jn6:40,51,54,58,68;4:14;10:28;11:25,26;14:6;17:2Rom6:23;Pr2:2-6;Jer15:16.

அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்: அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்: அவரைப் பிதாவாகிய தேவன் முத்திரித்திருக்கிறார் என்றார். (யோவான் 6:27)

யோவான் 6:40,51,54,58,68; யோவான் 4:14; யோவான் 10:28; யோவான் 11:25,26; யோவான் 14:6; யள17:2; ரோமர் 6:23; நீதிமொழிகள் 2:2-6; எரேமியா 15:16.

கொடுக்கும் மனுஷகுமாரன்:

இயேசுகிறிஸ்துவின் ஆளுமையில் வித்தியாசமானதும், ஆனால் ஒரே நோக்கம் கொண்டதுமான இரு ஆளுமைகள் உள்ளன.

மனுஷனாக பூமியில் பிறந்து தேவனுடைய மகனாக வெளிப்பட்டு, தேவசித்தம் செய்து மனுஷகுமாரன் என்ற அந்தஸ்தை பெற்றார்.

மரணத்தினின்று உயிரோடெழுந்தும், தேவசித்தம் செய்தும், தேவனுக்குரிய கிரியைகளை செய்தும் தேவகுமாரன் என்ற சிறப்பை பெற்றார்.

இங்கே மனுஷகுமாரனாயிருந்து அவர் கொடுக்கிற விசேஷித்த ஈவை அவர்தாமே குறிப்பிடுகிறார். மனுஷகுமாரனை தேவனால் அனுப்பபட்டவர் என்றும, தேவன் அவரோடிருந்து கிரியை நடப்பிக்கிறார் என்றும், பாவமில்லாதவராயிருக்கிறார் என்றும், அவரின் வார்த்தை தேவவார்த்தை என்றும் விசுவாசித்து ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்விதம் ஏற்றுக்கொள்கிறவர்களுக்குதான் நித்திய ஜீவன் கொடுக்கபடும்.

அவர் இலவசமாய் கொடுக்க வேண்டுமானால் அதற்குரிய புரிந்துகொள்ளுதலும், விசுவாசமும் அவசியம்.

ப.ஏ ன் காலத்தில் மோசேயின்மூலமாக கற்பனை தர்ப்பட்டது. அந்த கற்பனைகளை விசுவாசிக்க வேண்டும், அதன்படி நடக்க வேண்டும். என்றால்தான் நித்திய ஜீவன் உண்டு. ஆனால் அந்த கற்பனைகளை இயேசுகிறிஸ்துவைதவிர வேறு எவரும் நிறைவேற்றவில்லை. எனவே கற்பனைகளின்படி நடந்து நியாயபிரமாண கிரியைகளை நிறைவேற்றிய இயேசுவை எவரொருவர் ஏற்றுக்கொண்டு விசுவாசிக்கிறார்களோ அவர்களுக்கு நித்திய ஜீவன் கொடுக்கப்படும்.
விசுவாசிப்போருக்கு நித்திய ஜீவனை கொடுப்பவர் அதோடு ஆவிக்குரிய பிரமாணங்களை நமக்கு தந்துள்ளார் என்பதையும் மறக்கலாகாது.

ப.ஏ ல் விசுவாசமும், கிரியைகளுமுண்டாயிருந்தது. கிரியைகள் மோசேயின் பிரமாணங்களுக்கு உட்பட்டதாயிருந்தது. பு.ஏ லோ விசுவாசமும் கிரியைகளும் உண்டாயிருந்தாலும் கிரியைகள் யாவும் இயேசுவின் இரட்சண்ய கிரியைகளை அடிப்படையாக கொண்டே செயல்படுகிறது.

விசுவாசித்தபோது நமக்கு அவர் தந்த நித்திய ஜீவன் நமக்குள்ளே என்றும் ஊறுகிற நீரூற்றாய் இருக்க வேண்டுமானால் நற்கிரியைகளில் நாம் தேறியிருக்க வேண்டும், ஆவியின் பிரமாணங்களினால் கட்டப்பட்டிருக்க வேண்டும்.

கிரியைகளில்லாத விசுவாசம் செத்தது என்றால் விசுவாசிக்கிற எவரும் நற்கிரியைகள் செய்வதற்கு முன்னணியத்திற்கு வரவேண்டும்.

நற்கிரியைகள் என்பது:
– மனிதாபிமானம், மனசாட்சியுடன் நடப்பது.
– பிறரின் மீட்புக்காய் தன்னை கொடுப்பது.
தன் ஜீவனை இழப்பவரும் உண்டு.
தன் ஜீவனை காப்பவரும் உண்டு. மத்தேயு 10:37.
ஜீவனை காக்க போராடினால் இழப்பு அதிகம்.
ஜீவனை இழக்க போராடினால் ஆதாயம் அதிகம்.

கர்த்தாவே, உம் மகன்மூலம் தந்த நல்ல வாழ்வுக்காய் ஸ்தோத்திரம். நாங்கள் நற்கிரியைகளில் தேறி கிடைத்த வாழ்வை இழக்காமல் இருக்க உதவி செய்யும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME