நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ?
Then Jesus said to the twelve,Do you also want to go away? (John 6:67)
Deu4:3,4; Jos24:15-22; Ru1:11-18; 2Sam15:19,20; 2Kin2:2; 1Chr12:18; Ps62:5; Son1:7; Mt24:10; Lk14:25-33; Lk22:28; Jn20:3-8,24-29.
நீங்களும் போகிறீர்களோ?
அப்பொழுது இயேசு பன்னிருவரையும் நோக்கி: நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ என்றார். (யோவான் 6:67)
உபாாகமம் 4:3,4; யோசுவா 24:15-22; ரூத்1:11-18; 2 சமுவேல்1 5:19,20; 2 இராஜாக்கள் 2:2; 1 நாளாகமம் 12:18; சங்கீதம் 62:5; உன்னதப்பாட்டு 1:7; மத்தேயு 24:10; லூக்கா 14:25-33; லூக்கா 22:28; யோவான் 20:3-8,24-29.
இயேசுவோடு இருக்க, இயேசுவோடு நடக்க அழைக்கப்பட்ட சீஷர்களில் பெரும்பாலானோர் பின்வாங்கிப்போயினர்.
மீந்திருந்த 12 பேர் அல்லது 120 பேர்களிடம் இக்கேள்வியை இயேசு கேட்கிறார்.
தேவன் மனிதரிடம் கேள்வி கேட்பதில்லை.
மனிதன் தேவனுடைய இருதயத்துக்கு ஏற்றவனாய் இராதிருப்பதை – நம்பிக்கை துரோகம் செய்வதை – கூட இருந்து குழி பறிப்பதை உணரும்போது இக்கேள்வியை ஒவ்வொருவரிடமும் கேட்கிறார்.
நாம் கேட்கும் கேள்விக்கு அவர் பதில் தருகிறாரோ இல்லையோ, அவர் கேட்கும் கேள்விக்கு நாம் பதில் கொடுத்துதானாக வேண்டும்.
ஒரு மனிதனின் தவறு முழு உலகையும் பாதித்ததுபோல ஒரு சிலரின் பின்மாற்றம் மொத்த பின்னடியார்களியும் சந்தேகிக்க வைக்கிறது.
இயேசு மனிதனாக வந்தார், மனிதருக்குள் வந்தார்,
மனிதரோடு வாழ பிரயாசப்பட்டார், மனித உதவிகளை எதிர்பார்த்தார். தனக்கு ஒத்தாசையாகவும், தன் விருப்பம் நிறைவேற்றும்படியாகவும் மனிதரிடம் எதிர்பார்த்தார்.
தேவன் மனிதரிடம் – தம் பிள்ளைகளில் எதிர்பார்ப்பதை பூர்த்தி செய்யாவிடில் கேள்வி கேட்கப்படும்.
நீங்களும் போகிறீர்களோ?
இணைந்து வாழ்வது இன்ப வாழ்வு. பிரிந்து வாழ்வது துன்ப வாழ்வு.
- கணவன் மனியவியிடமும், மனைவி கணவனிடமும் இக்கேள்வியை கேட்டு பாருங்கள்.
- பிள்ளைகள் பெற்றோரிடமும், பெற்றோர் பிள்ளைகளிடமும் இக்கேள்வியை கேட்டு பாருங்கள்.
- எங்கே பிரிவு உண்டாவதை உணர்கிறீர்களோ அங்கே இக்கேள்வியை கேளுங்கள்.
பிரிந்து போகாதீர்கள்.
தனிமையை உணர்வீர்.
கைவிடப்படுவீர்.
கர்த்தாவே நாங்கள் பிரிந்து வாழாமல் இணைந்து வாழ்வதற்காகவே திருமகன் இயேசுவின் இரத்தத்தாலும், ஆவியாலும் இணைத்தீர். எனவே நாங்கள் பிரிவினைகளை மறந்து கிறிஸ்துவுக்குள் இணைந்து வாழ கற்று தாரும்.