மகிமையை

நான் மனுஷரால் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிறதில்லை.

I do not receive honor from men. (John 5:41)
Mt6:2; Mt8:4; Mk5:43; Mk10:18; Jn5:34; Jn6:15; Jn7:18; Jn8:50,54; Jn12:43; 1Tim2:6; 1Pet2:21; 2Ti1:17.

நான் மனுஷரால் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிறதில்லை. (யோவான் 5:41)

மத்தேயு 6:2; மத்தேயு 8:4; மாற்கு 5:43; மாற்கு 10:18; யோவான் 5:34; யோவான் 6:15; யோவான் 7:18; யோவான் 8:50,54; யோவான் 12:43; 1தீமோத்தேயு 2:6; 1 பேதுரு 2:21; 2தீமோத்தேயு 1:17.

மனுஷரால் வரும் மகிமை:

இங்கு வந்துள்ள ‘மகிமை’ என்றச் சொல் பு.ஏ ல் 165 தடவைகள் வந்துள்ளது. இதற்கு 4 பொருள் தரப்பட்டுள்ளது. அபிப்பிராயம் – கருத்து – கண்ணோட்டம், மதிப்பீடு, குறிப்பிடதக்க சிறப்பு – உயர்வு, உன்னத நிலை – மிகவும் போற்றதக்க நிலை என்பதாகும்.

இயேசுகிறிஸ்துவை உயர்வாக சிந்திப்போர், பேசுவோர் 7 விதங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.
1. அவருடைய கிரியைகளை கண்டு அவரை புகழ்ந்துரைத்த கூட்டம்.
2. அவரின் பேச்சு வன்மையை குறித்து அவரை வியந்து பேசிய கூட்டம்.
3. அவரின் உதவிகளினிமித்தம் அவரை பின்தொடர்ந்தனர், மகிமைப்படுத்தினர்.
4. அவர் சூதுவாதில்லாத நேர்மறையாளர் என்று சிலர் அவரை புகழ்ந்தனர்.
5. என்னவென்றே தெரியாமல் அவரை புகழ்ந்து பேசினர்.
6. உள்ளே ஒன்று வைத்து புறமாய் அவரை புகழ்ந்து பேசியவர்களும் உண்டு.
7. நல்ல உள்ளத்தோடு அவரை புகழ்ந்து பேசிய ஒரு சிலரும் உண்டு.

நாம் எப்படி?

மற்றவர் நம்மை புகழ்வதற்காக நாம் மீட்கப்படவில்லை, மற்றவர் மீட்கப்படவே அவர் நம்மை மீட்டுள்ளார்.

இயேசுகிறிஸ்து பிறர் தன்னை புகழ்ந்தோ, இகழ்ந்தோ பேசுவதை குறித்து ஒரு பொருட்டாக எண்ணவில்லை. ஏனெனில் மனுஷரின் உள்ளத்தில் இருப்பதை அவர் அறிந்திருந்தார்.

மனுஷருடைய புகழ்ச்சியை விரும்பாததினால்தான் இயேசு தம்முடைய மகிமையை வெளிப்படுத்தவில்லை.

பிதாவின் சுதனாக இருப்பது வரையிலும் பிதாவுக்குரிய மகிமையை தாம் பெற்றுகொள்ள விரும்பவில்லை.

தேவ கட்டளைகளுக்கு கீழ்படியாத மனுஷரின் புகழ் உரைகளை தேவ கட்டளைகளுக்கு கீழ்படிந்த இயேசு பெற்றுக்கொள்ளவோ, ஏற்றுக்கொள்ளவோ விரும்பவில்லை.

சமயங்களுக்கு ஏற்றாற்போல மாறும் மனநிலை கொண்டோரின் புகழ்ச்சியை மாறாதவராகிய இயேசு ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை.

பிறர் தன்னை புகழவேண்டும் என்பதற்காக அவர் பணிசெய்ய வரவில்லை. மாறாக, தேவனை உண்மையாய் புகழ்கிற – தொழுகிற ஒரு கூட்டத்தை உருவாக்கவே பணிசெய்ய வந்தார்.

கர்த்தாவே, நாங்கள் உம் குமாரனை உண்மையான உள்ளத்திலிருந்து புகழ்ந்து உம்மை மகிமைப்படுத்தும் பக்திமான்களாய் இருக்க எங்களுக்கு உதவி செய்யும். சூதுவாது, பொய்புரட்டுகள், கவர்ச்சி தன்மைகள் ஆகிய யாவையும் தூக்கி எறிந்துவிட்டு உண்மையுள்ள உள்ளத்தோடு உம்மையும் , உம் குமாரனையும் பின்பற்றவும், புகழவும் உதவி செய்யும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME