என் பிதா என்னை மகிமைப்படுத்துகிறவர்

என்பிதா என்னை மகிமைப்படுத்துகிறவர்.

If I honor Myself,My honor is nothing.It is My Father who honors Me, (John 8:54)

Jn5:22-29,41; Jn7:29; Jn13:31,32; Jn16:14,15; Jn17:2,5; Act3:13; Eph1:20-23; Phi2:9-11; 1Pet1:11,21; 2Pet1:17; Ps2:6-12; Ps110:1-4; Dan7:13,14.

இயேசு பிரதியுத்தரமாக: என்னை நானே மகிமைப்படுத்தினால் அந்த மகிமை வீணாயிருக்கும், என் பிதா என்னை மகிமைப்படுத்துகிறவர், அவரை உங்கள் தேவனென்று நீங்கள் சொல்லுகிறீர்கள். (யோவான் 8:54)

யோவான் 5:22-29,41; யோவான் 7:29; யோவான் 13:31,32; யோவான் 16:14,15; யோவான் 17:2,5; அப்போஸ்தலர் 3:13; எபேசியர் 1:20-23; பிலிப்பியர் 2:9-11; 1பேதுரு 1:11,21; 2பேதுரு 1:17; சங்கீதம் 2:6-12; சங்கீதம் 110:1-4; தானியேல் 7:13,14.

பிதா இயேசுவை மகிமைபடுத்துகிறவர்.
இங்கே பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தை கனத்தை, துதியை, மரியாதையை, உயர்த்தப்படுதலை, கொண்டாடுதலை, பிரகாசிக்கப்படுதலை குறிக்கின்றது. இயேசுகிறிஸ்துவின் பிறப்பு, வளர்ப்பு, ஊழியம், மரணம், உயிர்ப்பு, பரமேறுதல் யாவும் கனத்துக்குரியதாகவே காணப்பட்டது. இயேசு பிதாவின் மகிமையுடையவராயிருந்தாலும் அதனை விட்டு விட்டு வந்தார். மரித்து, உயிர்த்து அதே மகிமையை உடையவராய் இன்றும் உயர்ந்திருக்கிறார். மனிதர் அவரை ஏற்றுகொள்ளாமல் போவதினாலோ, அவரை அவதூறாக பேசுவதினாலோ, அவருக்கு எதிராக எழும்புவதினாலோ அவரது மகிமையை குலைத்துவிட முடியாது.
இப்பகுதியில் பிதா தன்னை மகிமைப்படுத்துவார் என்று இயேசு அறிந்திருப்பதாகக் கூறுகின்றார். இந்த நம்பிக்கை , அறிவு அவரை ஏற்றுக்கொண்ட அனைவருக்கும் உண்டு. ஆனால் இயேசு கூறிய கூற்றானது வித்தியாசமானது. பிதாவின் விருப்பத்தை நான் எந்த அளவுக்கு செய்து நிறைவேற்றுகிறேனோ அவ்வளவாய் நான் பிதாவினால் மகிமைப்படுத்தபடுவேன் என்பதாகும்.
பிதா நம்மை மகிமைப்படுத்துவதாக, நமக்கு கொடுப்பதாக கூறினாலும் நாம் தகுதியடையாமல் அவைகளை பெற்றுகொள்ள முடியாது. நாம் அவருடைய கற்பனைகளைக் கைகொண்டு அவருக்கு பிரியமானதை செய்தால்தான் கிருபையும், இரக்கமும் கிரியை செய்யும். இயேசுகிறிஸ்து தம்மை பிதா மகிமைப்படுத்துவதை எவ்வளவாய் அறிந்தாரோ அவ்வளவாய் பிதாவுக்கு பிரியமானதை செய்யவும் அறிந்திருந்தார்.
கர்த்தாவே உம் குமாரன் உம் வாக்குக்கு செவிகொடுத்து மகிமையடைந்ததுபோல நாங்களும் உமக்கு கீழ்படிந்து உம் மகிமைக்குள் வந்து சேர உதவிடும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME