இயேசு இன்னும் மகிமைப்படாதிருந்தபடியினால் பரிசுத்தஆவி இன்னும் அருளப்படவில்லை.
Holy Spirit was not yet given, because Jesus was not yet glorified. (John 7:39)
Jn12:16; Jn13:31,32; Jn14:13; Jn17:5; Jn16:7; Lk24:49; Act3:13; Act2:17,33; 2Cor3:8; Ps68:18; Isa32:15; Isa49:10; Isa58:11; Isa59:21; Zec14:8.
தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக்குறித்து இப்படிச்சொன்னார். இயேசு இன்னும் மகிமைப்படாதிருந்தபடியினால் பரிசுத்தஆவி இன்னும் அருளப்படவில்லை. (யோவான் 7:39)
யோவான் 12:16; யோவான் 13:31,32; யோவான் 14:13; யோவான் 17:5; யோவான் 16:7; லூக்கா 24:49; அப்போஸ்தலர் 3:13; அப்போஸ்தலர் 2:17,33; 2கொரிந்தியர் 3:8; சங்கீதம் 68:18; ஏசாயா 32:15; ஏசாயா 49:10; ஏசாயா 58:11; ஏசாயா 59:21; சகரியா 14:8
பரிசுத்த ஆவி அருளப்படவில்லை:
இயேசுவுக்கு இன்னும் பரிசுத்த ஆவி கொடுக்கப்படவில்லை என்றல்ல, விசுவாசிக்கிறவர்களுக்கு இன்னும் பரிசுத்த ஆவி கொடுக்கப்படவில்லை என்று பொருளாகும். அதாவது இயேசு மகிமைக்குள் சென்ற பின்பே பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்படுவார்.
இப்பகுதியில் உள்ள இரு விஜயங்களை நாம் தியானிக்கலாம்.
- இயேசு இன்னும் மகிமைப்படவில்லை. இயேசுகிறிஸ்து பிதாவின் விருப்பத்தை செய்துமுடித்து வெற்றியாளராக பிதாவிடம் திரும்ப சேர்வதே மகிமைப்படுதலாகும்.
தாம் விட்டுவந்த மகிமையை பெறுவதே மகிமைப்படுவதாகும்.
இயேசு மகிமைக்குள் பிரவேசித்த பின்புதான் பரிசுத்த ஆவி கொடுக்கப்படுவார் என்று இயேசு முன்னதாகவே கூறியிருந்தார்.
நமது கிரியைகள், நமது நற்குணங்கள், நல்ல அணுகுமுறைகள், கீழ்படிதல்கள் மூலம் கிறிஸ்து மகிமைப்படுவதே நமக்கு தேவன் தரப்போகும் அரும்பெரும் கொடைகளுக்கு காரணமாகும். - பரிசுத்த ஆவியானவர் கொடுக்கப்படுகிறவர்.
இயேசுகிறிஸ்து பிதாவினால் அனுப்பப்பட்டதுபோல – கொடுக்கப்பட்டதுபோல பரிசுத்த ஆவியானவரும் கொடுக்கப்படுகிறவரே. பரிசுத்த ஆவியானவர்
தாமாக வரமாட்டார்,
தாமாக எதையும் செய்யமாட்டார்,
தாமாக எதையும் பேசமாட்டார்.
பரலோக உத்தரவுகளின் அடிப்படையில்தான் பரிசுத்த ஆவியானவர் ஒருவரில் கிரியை செய்ய முடியும் – தங்க முடியும்.
எவராயினும் பிதாவின் – குமாரனின் விருப்பத்துக்கு ஏற்றவாறு நடந்தால் பிதாவிலும், குமாரனிலும் இருந்து அனுப்பப்படுகிற ஆவியானவர் நம்மில் வந்து கிரியை செய்வார்.
ஆவியானவர் நமக்கு கொடுக்கப்பட நாம் குமாரனின் வழியாக பிதாவிடம் மன்றாட வேண்டும்.
கர்த்தாவே உம் குமாரனின் வழியாக உமது நல்ல ஆவியை எங்களுக்கு தந்து எங்களை உமது பிள்ளைகளாக மாற்றியதற்காக நன்றி செலுத்துகிறோம்.