எல்லாரும் தேவனாலே போதிக்கப்பட்டிருப்பார்கள்.
It is written in the prophets, ‘And they shall all be taught by God. (John 6:45a)
Ps25:5,8; Ps86:11; Ps119:33; Isa2:3; Isa54:13; Jer31:33,34; Mic4:2; Eph4:21,22; Phili2:13.
எல்லாரும் தேவனாலே போதிக்கப்பட்டிருப்பார்கள் என்று தீர்க்கதரிசிகளின் ஆகமத்தில் எழுதியிருக்கிறதே: ஆகையால் பிதாவினிடத்தில் கேட்டுக் கற்றுக்கொள்ளுகிறவன் எவனும் என்னிடத்தில் வருகிறான். (யோவான் 6:45)
சங்கீதம் 25:5,8; சங்கீதம் 86:11; சங்கீதம்119:33; ஏசாயா 2:3; ஏசாயா 54:13; எரேமியா 31:33,34; மீகா 4:2; எபேசியர் 4:21,22; பிலிப்பியர் 2:13.
தேவனால் போதிக்கப்படுதல்:
ஆதியில் ஆதாம் ஏவாளை உண்டாக்கி தமது ஏதேனுக்குள் வைத்து, செயல்படும்படியான கட்டளை கொடுத்து, அவைகளை செய்வதற்கான ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் அன்றாடம் கற்றுகொடுத்து வழிநடத்தியவரே தேவன். என்றைக்கு மனிதன் தேவனுடைய ஆலோசனையை தள்ளி பிறத்தியாரின் – அந்நியனின் ஆலோசனைக்குட்பட்டானோ அன்றிலிருந்து தன்னைவிட்டு பிரிந்துபோன மனுகுலத்துக்கு மறுபடியும் நல்லாலோசனைகளை வழங்கி தமது ஏதேனுக்குள் கொண்டுவர எவ்வளவோ பிரயாசப்படுகிறார்.
பிரமாணத்தை கொடுத்து போதித்தார். விசுவாசமார்க்கம் கொடுத்து போதித்தார்.
மோசே, ஆசாரியர்கள், தீர்க்கர்களைகொண்டு போதித்தார். மனுக்குலம் தேவ ஆளுகைக்குள் வரவிரும்பவில்லை.
என்றாலும், அன்பினிமித்தம் தமது குமாரனை அனுப்பி குமாரனின் உபதேசங்களைகொண்டு சபைக்குள் கொண்டுவர விரும்பினார். சபைக்குள் நல்லாலோசனைகளை வழங்கி வழிநடத்த பரிசுத்த ஆவியையும், ஊழியக்காரர்களையும் வைத்தார். அதற்கும் மனுக்குலம் கட்டுப்படவில்லை.
இன்றும் அவருடைய ஆலோசனைகள் தொடர்கின்றது.
யார் அவர் ஆலோசனையை கேட்பார்?
கர்த்தர் என்னோடுபேசி என்னை வழிநடத்துகிறார் என்பவர்கள் சபைக்கும் தேவனுடைய வீட்டுக்கும் விரோதமாக கலகம் பண்ணி பிரிந்துபோகிறார்கள்.
அபிஷேகம் பெற்றேன் என்று சொல்லி அடாவடியான செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
அபிஷேகம் என்பது அன்பு, அமைதி, அடக்கம், பணிவு போன்றவைகளின் தொகுப்பு – கிறிஸ்துவின் சிந்தையின் பிரதிபலிப்பு.
எல்லாரும் தேவனால் போதிக்கப்படுவர் என்பது உண்மை.
மனிதன் கேட்கிறானோ இல்லையோ சபைதலைவர்கள், ஊழியர்கள், விசுவாசிகள் தேவனுக்கு செவிகொடுக்கிறார்களோ இல்லையோ அவர் போதிக்கிறார்.
இயேசு ஒரு போதகர். அவரில் இருந்த சிந்தை, மனதுருக்கம், ஆவி இக்கால போதகர்கள் என்று சொல்லிக்கொள்கிறவர்களுக்கு அவசியம் தேவை.
கீழ்படிய – செவிகொடுக்க மனமில்லாதிருப்போருக்கு அவர் போதிப்பதில்லை.
எளியவர்க்கும், ஆவியில் எளிமையானோருக்கும், பாலகருக்கும் அவர் போதிக்கிறார்.
நீங்கள் போதிப்பவரானால் தகப்பனைபோல மாறுவீர்களாக. எல்லையை மீறி போதிக்காதீர். பாடுபட்டு போதிப்பீர்.
அடுத்தவர் வாசலில் போதிக்க அனுப்பவில்லை. உன் வீட்டுக்கு நீர் போதிப்பீராக.
நீங்கள் போதனைபெற விரும்பினால் பிள்ளையை போலாவீர்களாக.
உங்கள் வீடாகிய சபையில் கற்றுகொள்ளுங்கள்.
வேறு மந்தைகூட்டத்தில் மேய செல்லாதீர்கள். சிதறுவீர்கள்.
அன்பானவர்களே, சபைக்கும், சபை அமைப்புக்கும் எதிர்த்து நிற்கிற காலம் இதுவல்ல, அவைகளில் உள்ள தவறுகளை சரிசெய்ய திறமையான போதகர் ஒருவர் இருக்கிறார். அவர் பார்த்துகொள்வார்.
நீர் சொல்லித்தான் அவருக்கு தெரியவேண்டுமென்றில்லை.
எந்த சபையையும் குறை சொல்லாதீர். பெரிய போதகரிடம் தெரிவியுங்கள். அவர் பார்த்துகொள்வார்.
கர்த்தாவே, உம்மால் போதிக்கப்படவே நாங்கள் உம் குமாரனால் மீட்கப்பட்டு உம் ஆவியை பெற்றோம். எங்களுக்குரிய அதிகார வரம்புக்குட்பட்டு நாங்கள் போதிக்கவும், போதிக்கப்படவும் எங்களை திரும்பவும் உம்மிடம் ஒப்படைக்கிறோம்.