வாலிபரே, நீங்கள் பொல்லாங்கனை ஜெயித்ததினால் எழுதுகிறேன்

வாலிபரே, நீங்கள் பொல்லாங்கனை ஜெயித்ததினால் எழுதுகிறேன்

yound men because you have overcome the wicked one. 1John 2:13

1John 2:14; Titus 2:6-8; 1John 4:4; 1John 5:4,5; 1john 3:125:18; Matthew 13:19,38; Ephesians 6:10-12; 1Peter 5:8,9; Psalms 148:12; Proverb 20:29; Joe 2:28.

பிதாக்களே, ஆதிமுதலிருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன். வாலிபரே, பொல்லாங்கனை நீங்கள் ஜெயித்ததினால் உங்களுக்கு எழுதுகிறேன். பிள்ளைகளே, நீங்கள் பிதாவை அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன். (1 யோவான் 2:13)

1யோவான் 2:14; தீத்து 2:6-8; 1யோவான் 4:4; 1யோவான் 5:4,5; 1யோவான் 3:125:18; மத்தேயு 13:19,38; எபேசியர் 6:10-12; 1பேதுரு 5:8,9; சங்கீதம் 148:12; நீதிமொழிகள் 20:29; யோவேல் 2:28.

ஜெயிக்கவேண்டிய நிலை:

யோவான் இந்த வசனத்திலும் இதற்கு பின்வரும் வசனத்திலும் தமது வாசகர்களை மூன்று பகுதியாக பிரித்து பொருள் கொள்கின்றார். பிதாக்கள் ஆவிக்குரிய முதிர்ச்சியுடையவர்கள் என்றும் வாலிபர்கள் ஆவிக்குரிய வாழ்வுக்கான எதிர்விளைவுகளை எதிர்த்து போரிடுகிறவர்கள் என்றும் , பிள்ளைகள் மீட்கப்பட்ட அறிமுக நிலையிலே இருப்பவர்கள் என்றும் பகுத்து கூறுகின்றார். இக்கால சபையிலும் இப்படிபட்ட ஸ்திதி உடையவர்களாக விசுவாசிகள் காணப்பட வேண்டும்.

வாலிபர்கள் பொல்லாங்கனாகிய சாத்தானை ஜெயித்தவர்களாக இருக்கிறார்கள். காரணம் என்னவெனில் அவர்கள் பலவான்களாகவும், தேவ வசனத்தை தங்களுக்குள் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். தேவனோடு நல்ல தொடர்புடையவர்களாகவும், விவிலியத்தின்மேல் ஆழ்ந்த பற்றுள்ளவர்களாகவும் இருக்கிறவர்களே சத்தியத்துக்கும் தேவனுக்கும் சபைக்கும் எதிராக எழும்பும் ஆவிகளை எதிர்த்து போரிட இயலும். அன்றாட விவிலிய தியானம், தூய்மையான வாழ்வு, படைத்தவரோடுள்ள நல்ல உறவு, சபையோடு இணைந்த வாழ்க்கைமுறை, சபை ஊழியரோடு இணைந்து பயணித்தல் இக்கால வாலிப சமுதாயத்துக்கு அவசியமானதாகும். தன்னை பெற்ற தாய் தந்தையோடு நல்ல உறவு கொண்டிராத எந்த வாலிபரும் சபை ஊழியரோடு இணங்கிப்போக முடியாது. முடிவில் அவர்கள் தேவனோடும் இணங்கிபோகாமல் தேவனுக்கு எதிர்த்து நிற்கிறவர்களாக இருப்பார்கள்.

அப்போஸ்தலரில் வாலிபர்கள் அனனியா சப்பீராளை அடக்கம் செய்தார்கள். ஆவிக்குரிய வாழ்வில் உறுதியான மனோபாவம் கொண்டிருக்க வேண்டும். விசுவாசத்தைக் கொண்டும், கீழ்படிதலைக் கொண்டும், பரிசுத்தத்தைக் கொண்டும் சாத்தானையும் அவனது கிரியைகளையும் ஜெயிக்க வேண்டியவர்களாயுள்ளோம். தீமைகளை அகற்றுவது மட்டுமல்ல, தீமைகள் தங்களில் வேரூன்றாதபடி தங்களை காத்துக்கொள்வதே மேலானது. கர்த்தருடைய வாக்கியங்களில் பழக்கமில்லாத ஒருவரும் சாத்தானையும், பாவத்தையும் ஜெயிக்க முடியாது. பட்டயம் சுழற்ற தெரியாமல் யுத்தத்தில் எப்படி ஜெயம் பெற முடியும்?ஆவிக்குரிய பட்டயமாகிய தேவ வசனமே நம்மையும், நம் சந்ததிகளையும் காக்கும் பட்டயம்.

சில கேள்விகள்…
வாலிப சமுதாயம் சீர்கேடு அடைவதற்கு விவிலியத்தின் மீதுள்ள பற்றில்லாமையா அல்லது விவிலியத்தை தவறாக புரிந்து கொண்டதா?

யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே. ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாதபடிக்கும் யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும், ஒருவனும் வேசிக்கள்ளனாகவும், ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள். ஏனென்றால், பிற்பாடு அவன் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ள விரும்பியும் ஆகாதவனென்று தள்ளப்பட்டதை அறிவீர்கள்; அவன் கண்ணீர்விட்டு, கவலையோடே தேடியும் மனம் மாறுதலைக் காணாமற்போனான். எபிரேயர் 12:14-17.

ADD YOUR COMMENT

Powered By Indic IME