நாம் அவரை பொய்யராக்குகிறவர்களாயிருப்போம்.

நாம் அவரை பொய்யராக்குகிறவர்களாயிருப்போம்.

If we say that we have not sinned, we make Him a liar, (1John 1 :10)

1John 5:10; 1John 2:4; 1John 4:4-6; Colossians 3:16,17; Job 24:25; 1 Samuel 15:29; Psalms 89:35; Habrews 2:3; Zephania 3:13; 2 Corinthians 11:31; Titus 1:3.

நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது. (1 யோவான் 1:10)

1யோவான் 5:10; 1யோவான் 2:4; 1யோவான் 4:4-6; கொலோசெயர் 3:16,17; யோபு 24:25; 1சாமுவேல் 15:29; சங்கீதம் 89:35; ஆபகூக் 2:3; செப்பனியா 3:13; 2கொரிந்தியர் 11:31; தீத்து 1:3.

பொய்யுரையாத தேவன்.

என்னில் பாவமில்லையென்று சொல்லுகிறவனின் மூன்றாவது குணம் தேவனை பொய்யராக்குதல் ஆகும். மனுகுலம் முழுவதும் பாவம் செய்து தேவ மகிமையை இழந்து போனது என்றும், இழந்துபோன மகிமையை திரும்பபெற வேண்டுமானால் தங்களின் பாவம் பரிகரிக்கப்பட வேண்டும் என்றும், அவ்விதம் பாவத்தை பரிகரித்து நித்திய ஜீவனாகிய மறுவாழ்வை இயேசு தருகிறார் என்றும், இதனால் தேவனோடு இணைக்கப்படுகிறோம் என்றும் கூறப்பட்ட உண்மைக்கு மாறாக என்னில் பாவமில்லை என்றும், எனக்கு பரிகாரமோ பாவமன்னிப்போ தேவையில்லை என்றும், இயேசு எனக்கு அவசியமில்லை என்றும் கூறுவதினால் தாங்கள் செய்த கர்ம பாவங்களோடும், தங்களில் காணப்பட்ட ஜென்ம பாவங்களோடும் அதிகமான பாவமாகிய தேவனை பொய்யராக்குதல் என்ற பாவத்தை செய்கிறவர்களாகின்றனர்.

தங்களில் பாவமில்லை என்று சொல்லுகிற இரட்சிக்கப்படாதவர்கள் வஞ்சக ஆவியினாலும், பொய்யின் ஆவியினாலும் பிணைக்கப்பட்டு தேவனை பொய்யராக்குகிறார்கள். சத்தியத்தைப் போதிக்கும் தேவனுடைய வார்த்தையை தங்களில் கொண்டிராதவர்களாயிருக்கிறார்கள். விவிலியத்தை கலப்பாய் போதிக்கிறவர்களும், விவிலியத்தை சாதாரண புத்தகமாக நினைக்கிறவர்களும், விவிலியத்தை வேண்டாமென்று நினைக்கிறவர்களும் தேவனை பொய்யராக்குகிற பெரிய பாவத்தை செய்கிறார்கள்.

விவிலியம் என்பது சத்தியமாகும். சத்தியத்தில் பொய் இல்லை. பொய் சொல்லுகிறவனில் சத்தியமில்லை. விவிலியத்துக்கு மாறுபாடாக போதிக்கும் எல்லாமே பொய்யாகும். ஒன்றை மறைத்து வாழ்வதும், செய்த ஒன்றை மறுப்பதும் பொய்யின் ஆவியின் வெளிப்பாடே. வஞ்சக ஆவியின் மறு உருவம். பிசாசானவன் பொய்யனாயிருக்கிறான். ஏனெனில் அவன் ஆதிமுதல் பொய் சொல்லுகிறவனாயிருக்கிறான். ஆதி மனிதர்களை பொய்யின் வலையில் விழ வைத்தான். அன்று முதல் இன்று வரையிலும் பல பெரிய மனிதர்களையும்பொய்யில் விழவைத்து தனது எல்லையை பெரிதாக்கிக்கொண்டேயிருக்கின்றான். சத்திய சபைக்குள்ளும் பொய்யின் ஆவியால் நிரம்பியவர்களை நுழைய வைத்து சத்திய சபையை பொய் சபையாக மாற்ற முயற்சிக்கின்றான். ஆனால் பொய்யின் ஆவியை கடிந்துக்கொண்ட பேதுருக்கள் போன்றவர்களை சபைகளிலே எழும்ப செய்து இன்று வரையிலும் சத்திய ஆவியானவர் பொய்யை மடிவித்துக்கொண்டேயிருக்கின்றார்.

பொய்யுரையாத தேவன்…….
தம்மை நம்புகிறவர்களை பொய்யுலகத்தினின்று வேறுபடுத்தி வைக்கிறார்….
தாம் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதில் கவனமாயிருக்கிறார்…
பிசாசானவனை பொய்களின் பிதா என்று பகிரங்கப்படுத்துகின்றார்…

சில கேள்விகள்….
பொய்யுரையாத தேவன் சாராத எல்லா புத்தகங்களும் , உரைகளும் பொய்களையே கொண்டது என்று கூறலாமா?

சத்திய ஆவியையும், பொய்யின் ஆவியையும் அடையாளம் கண்டுக்கொள்வது எப்படி?
பொய்யுரையாத தேவனும், பொய்களின் பிதாவும் இணங்கிப்போக வாய்ப்புகள் உண்டா?

அப்படியில்லையென்று என்னைப் பொய்யனாக்கி என் வார்த்தைகளை வியர்த்தமாக்கத்தக்கவன் யார் . யோபு 24:25.

அவருடைய வசனங்களோடு ஒன்றையும் கூட்டாதே, கூட்டினால் அவர் உன்னைக் கடிந்துகொள்வார், நீ பொய்யனாவாய். இரண்டு மனு உம்மிடத்தில் கேட்கிறேன்; நான் மரிக்கும்பரியந்தமும் அவைகளை எனக்கு மறுக்காமல் தாரும். மாயையையும் பொய்வசனிப்பையும் எனக்குத் தூரப்படுத்தும்; தரித்திரத்தையும் ஐசுவரியத்தையும் எனக்குக் கொடாதிருப்பீராக. நான் பரிபூரணம் அடைகிறதினால் மறுதலித்து, கர்த்தர் யார் என்று சொல்லாதபடிக்கும்; தரித்திரப்படுகிறதினால் திருடி, என் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்காதபடிக்கும், என் படியை எனக்கு அளந்து என்னைப்போஷித்தருளும். நீதிமொழிகள் 30:6-9.

ADD YOUR COMMENT

Powered By Indic IME