பேதுரு பட்டயத்தால் பிரதான ஆசாரியனின் வேலைக்காரனை வெட்டினான்.
Simon Peter,having a sword,drew it and struck the high priest servant,cut off his right ear. (John 18:10)
Matthew 26:51-54; Mark 14:47; Luke 22:28-38,49-51; Matthew 10:34; Luke 2:35; Act 7:24.
அப்பொழுது சீமோன்பேதுரு, தன்னிடத்திலிருந்த பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலதுகாதற வெட்டினான், அந்த வேலைக்காரனுக்கு மல்குஸ் என்று பெயர். (யோவான் 18:10)
மத்தேயு 26:51-54; மாற்கு 14:47; லூக்கா 22:28-38,49-51; மத்தேயு 10:34; லூக்கா 2:35; அப்போஸ்தலர் 7:24.
பட்டயம் தன் வேலையை செய்யும்:
லூக்கா 22:36 ல் இயேசு இப்பொழுதோ பணப்பையும் சாமான்பையும் உடையவன் அவைகளை எடுத்துக்கொள்ளக்கடவன்; பட்டயம் இல்லாதவன் தன் வஸ்திரத்தை விற்று ஒன்றைக் கொள்ளக்கடவன் என்றார். அதன்படியாக லூக்கா 22:38 ல் அவர்கள்: ஆண்டவரே, இதோ இங்கே இரண்டு பட்டயம் இருக்கிறது என்றார்கள். அவர்: போதும் என்றார். இதற்குரிய காரணத்தை லூக்கா 22:37 ல் அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்று எழுதியிருக்கிற வாக்கியம் என்னிடத்தில் நிறைவேறவேண்டியதென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று இயேசு கூறுகின்றார். சீஷர்கள் இயேசுகிறிஸ்துவின் நோக்கத்தை புரிந்துக் கொண்டார்களோ இல்லையோ பட்டயம் தங்களிடம் இருப்பதைக் குறித்து பெருமை கொண்டார்கள். இயேசு தன்னை இராஜாவாக பிரகடனப்படுத்துவதற்காக பட்டயத்தை வாங்கச் சொன்னார் என்று கருதி பட்டயங்களை வாங்கியிருக்கக் கூடும். ஆனால் இந்த பட்டயம் தன்னுடைய வேலையை செய்தது. ஆயுதமில்லாதபோது உண்டாகிற ஆத்திரத்துக்கும், ஆயுதம் உள்ளபோது உண்டாகின்ற ஆத்திரத்துக்கும் பெருத்த வித்தியாசம் உண்டு. இயேசுவை பிடித்ததை சற்றேனும் எதிர்பாராத சீஷர்கள், தூக்கத்திலிருந்து மீண்டவுடனே எதிர்த்து வினைபுரிய பட்டயத்தைப் பயன்படுத்தினர்.
தேவனுடைய மனிதர்கள் வாயை கூர்மையான பட்டயங்களாகவும், ஆயுதங்களைப் பட்டயங்களாகவும் பயன்படுத்துவதை தடுப்பதற்காகவே கர்த்தருடைய வசனத்தை பட்டியமாக கொடுத்திருக்கின்றார். வசனம் என்ற பட்டயம் ஆவியின் பட்டயமாயிருக்கிறது. நம்மில் ஆவியானவர் இருந்து காலங்களுக்கு தகுந்தவாறும், அந்தந்த சூழலுக்கு ஏற்றவாறும் வசனங்களை பயன்படுத்துவதைக் குறித்து போதிக்கின்றார்.
கிதியோனின் பட்டயத்தை எடுத்துக்கொள்ளவோ, தாவீதின் கவண்களை எடுத்துக் கொள்வதற்கோ நமக்கு அனுமதி தரவில்லை. கிறிஸ்துவின் வசனமாகிய ஆவியின் பட்டயத்தை எடுத்து கொள்ளவே நாம் போதிக்கப்பட்டிருக்கின்றோம். இந்த பட்டயம் என்ன வேலை செய்யும் என்பதை எபிரெயர் 4:12 ல் பவுல் தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது என்று கூறுகின்றார்.
கர்த்தருடைய வாக்கியங்களைக் கொண்டு பிறரை காயபடுத்துவதல்ல, மாறாக நம்மிலும் பிறரிலும் இருக்கும் பாவ கறைகளையும், பாவ சிந்தனைகளையும் வேரறுத்து தூய்மைபடுத்தவே. வசனத்தினால் நம்மை தூய்மைபடுத்துவதே ஆவியின் திருப்பணியாகும். யோசேப்பை வசனத்தைக் கொண்டே புடமிட்டார் ஆவியானவர். வசனத்துக்கு செவிகொடாத மனங்களிலே ஆவியானவர் கிரியை செய்யமாட்டார். நம்மில் உள்ள மாம்சத்தின் கிரியைகளை வசனத்தை கொண்டு கருவறுத்து ஆவியின் பிள்ளைகளாக மாற்றியமைப்பதே ஆவியின் வேலை.
வசனத்தை நாம் ஆவியின் பட்டயமாக கொண்டால் அது நம்மில் மாற்றத்தை கொண்டுவரும்.
பேதுரு பதினொருவரோடுங்கூட நின்று, அவர்களை நோக்கி: நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள் என்றான். இதை அவர்கள் கேட்டபொழுது, இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து. சகோதரரே, நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றார்கள். பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது என்று சொல்லி; இன்னும் அநேக வார்த்தைகளாலும் சாட்சிகூறி, மாறுபாடுள்ள இந்தச் சந்ததியை விட்டு விலகி உங்களை இரட்சித்துக்கொள்ளுங்கள் என்றும் புத்திசொன்னான்.
அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள். அப்போஸ்தலர் 2:14, 36-42.