பேதுரு நான் அவருடைய சீஷரில் ஒருவனல்ல என்று மறுதலித்தான்

பேதுரு நான் அவருடைய சீஷரில் ஒருவனல்ல என்று மறுதலித்தான்.

Simon Peter stood and denied it and said, “I am not!. (John 18:25)

Proverb 30:9; Jeremiah 5:13; Matthew 10:33; Matthew 26:34,35,70,72,75; John 1:20; Act 3:13,14; 1 Timothy 5:8; 2 Timothy 2:12,13; 2 Timothy 3:5; Titus 1:16; 1John 2:22,23; Revelation 3:8.

சீமோன்பேதுரு நின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தான். அப்பொழுது சிலர் அவனை நோக்கி: நீயும் அவனுடைய சீஷரில் ஒருவனல்லவா என்றார்கள். அவன்: நான் அல்ல என்று மறுதலித்தான். (யோவான் 18:25)

நீதிமொழிகள் 30:9; எரேமியா 5:13; மத்தேயு 10:33; மத்தேயு 26:34,35,70,72,75; யோவான் 1:20; அப்போஸ்தலர் 3:13,14; 1 தீமோத்தேயு 5:8; 2 தீமோத்தேயு 2:12,13; 2தீமோத்தேயு 3:5; தீத்து 1:16; 1 யோவான் 2:22,23; வெளி 3:8.

மறுதலித்த பேதுரு.

பேதுரு இயேசுவோடுகூட நெருக்கமாயிருந்தவரும், பாடுகளுக்கு பங்காளியாயிருந்தவரும், கட்டப்படபோகின்ற கிறிஸ்துவின் சரீரமாகிய சபையின் அடிக்கல்லாகவும், பல ஆயிரகணக்கானவர்களை மனந்திரும்பப் பண்ணினவருமாயிருந்தார் என்பதை நாமறிவோம். அப்படிபட்ட பேதுருவின் வாழ்க்கையில் மறுக்கவும், மறக்கவும் இயலாத ஒரு கறுப்பு நிகழ்வு நடந்தேறியது. அது கிறிஸ்துவை அறியேன் என்று மறுதலித்தலாகும். இந்த நிகழ்வினிமித்தமாக பேதுரு தேவன் முன்னிலையில் ஒருபோதும் நிமிர்ந்து நிற்க முடியாமல் போயிற்று. இடறல் என்பது நம்மை தேவன் முன்னிலையில் தாழ்த்துவதற்கான உரைகல். மறுதலித்தல் என்றால் மறுத்தல், நிராகரித்தல்,ஏற்றுக்கொள்ளாமை, அங்கீகரிக்காமை என்று பலவிதங்களில் பொருள் கொள்ளப்படுகின்றது.

பேதுரு ஏன் இயேசுவை தெரியாது என்று சொன்னார்?. பல காரணங்களை நாம் அனுமானிக்க முடியும். ஆனால் ஒரு முக்கியமான விஷயம் இதன் பின்னணியத்திக்ல் மறைந்துள்ளதை நாம் அறிய வேண்டும். பேதுரு கிறிஸ்துவுக்காக வைராக்கியம் பாராட்டினார். எவரொருக்வர் இயேசுவை விட்டு விலகிப்போனாலும் நான் இயேசுவை விட்டு விலக மாட்டேன். நான் அவரோடு இருக்க அழைக்கப்பட்டவனாகையினால் அவரை விட்டு விலக மாட்டேன். என் ஜீவன் போனாலும் ஒருவரின் கையிலும் அவரை ஒப்புக்கொடுக்க விட மாட்டேன் என்றவாறு பேதுரு நடந்துக் கொண்டார்.

இக்காரியம் தேவனுடைய பார்வையிலும் மனுஷ பார்வையிலும் நலமானதே. ஆனால் பேதுரு ஒன்றை புரிந்துக் கொள்ள வேண்டும். அது என்னவெனில், இயேசுவின் திருப்பணிகள் யாவும், நல்வார்த்தைகள் யாவும் தேவனுடைய விருப்பபடியே நடக்கின்றது. கிறிஸ்துவின் மரணமும் தேவனுடைய விருப்பப்படியே நடக்கின்றது. இதனை தடுத்த இதே பேதுரு சாத்தானே அப்பாலே போ என்று கடிந்துக் கொள்ளப்பட்டார். இப்பொழுதோ எனக்காக நீ வைராக்கியம் பாராட்டுவாயோ, இன்று நீ என்னை மறுதலிப்பாய் என்று இயேசு கூறினார். இதிலிருந்து நாம் அறிவது என்ன?. பேதுருவின் முன்பாக இயேசுகிறிதுவே ஒரு தடுக்கலை வைத்து அவனுடைய மாம்ச வைராக்கியத்தை உடைத்துப்போட்டார். இனி பேதுரு ஒருபோதும் பெருமைபாராட்டாதபடிக்கு பலவீனப்படுத்தப்பட்டார்.

தேவனுக்காக வைராக்கியம் பாராட்டுகிறவர்களே உங்கள் வைராக்கியம் தேவனுடைய வழிமுறைகளுக்கு மாறுபாடாக இருக்குமெனில் உங்கள் முன் தடுக்கலை வைத்து உங்களை பலவீனபடுத்துவார் என்று அறியுங்கள்.

கிறிஸ்துவுக்காக வைராக்கியம் பாராட்டி உயர்ந்தவர்களும் உண்டு, இடறிபோனவர்களும் உண்டு.
இரத்தசாட்சிகள் வைராக்கியத்தின் விளைவே.

சகோதரரே, இஸ்ரவேலர் இரட்சிக்கப்படவேண்டும் என்பதே என் இருதயத்தின் விருப்பமும் நான் தேவனை நோக்கிச்செய்யும் விண்ணப்பமுமாயிருக்கிறது. தேவனைப்பற்றி அவர்களுக்கு வைராக்கியமுண்டென்று அவர்களைக் குறித்துச் சாட்சிசொல்லுகிறேன்; ஆகிலும் அது அறிவுக்கேற்ற வைராக்கியமல்ல. எப்படியென்றால், அவர்கள் தேவநீதியை அறியாமல், தங்கள் சுயநீதியை நிலைநிறுத்தத் தேடுகிறபடியால் தேவநீதிக்குக் கீழ்ப்படியாதிருக்கிறார்கள்.

விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார். மோசே நியாயப்பிரமாணத்தினாலாகும் நீதியைக்குறித்து: இவைகளைச் செய்கிற மனுஷன் இவைகளால் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறான். விசுவாசத்தினாலாகும் நீதியானது: கிறிஸ்துவை இறங்கிவரப்பண்ணும்படி பரலோகத்துக்கு ஏறுகிறவன் யார்? அல்லது கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணும்படி பாதாளத்துக்கு இறங்குகிறவன் யார்? என்று உன் உள்ளத்திலே சொல்லாதிருப்பாயாக என்று சொல்லுகிறதுமன்றி; இந்த வார்த்தை எனக்குச் சமீபமாய் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது என்றும் சொல்லுகிறது; இந்த வார்த்தை நாங்கள் பிரசங்கிக்கிற விசுவாசத்தின் வார்த்தையே.

என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும். அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது. யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லாருக்குங் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார். ரோமர் 10:1-12.

ADD YOUR COMMENT

Powered By Indic IME