அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்.
He must increase, but I must Decrease. (John 3:30)
Ps72:17-19; Isa9:7; Isa53:2,3,12; Dan2:34,35,44,45; Mr13:31-33; Rev11:15; Act13:36,37; 1Cor3:5; 2Co3:7-11; Col1:17-20; Heb3:2-6.
அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும். (யோவான் 3:30)
சங்கீதம் 72:17-19; ஏசாயா 9:7; ஏசாயா 53:2,3,12; தானியேல் 2:34,35,44,45; மத்தேயு 13:31-33; வெளி 11;15; அப்போஸ்தலர் 13:36,37; 1கொரிந்தியர் 3:5; 2கொரிந்தியர் 3:7-11; கொலோசெயர் 1:17-20; எபிரெயர் 3:2-6.
இதுகுறித்த புரிந்து கொள்ளுதல் அவசியம்.
1. தேவன் மனிதரை தமக்கு சமமாக படைக்கவில்லை. கிறிஸ்துவும் இரட்சிக்கபடுகிறவர்களை தமக்கு சமமாக வைப்பதில்லை. ஆனால், அவர் அருகில் இருக்க கிருபை உண்டு.
2. தேவன் உலகை விடவும், மனிதரின் இருதய எண்ணங்களை விடவும் உயர்ந்திருக்கிறார்.
3. மனுக்குலம் தங்களது உணர்வுகளில் தேவனுக்கு அடங்கி, அவருக்கு பயந்து கீழ்படிந்து நடக்க – பணிந்து நடக்க தன்னை தயார்படுத்தியிருக்க வேண்டும். இயல்பான குணத்தில் இது வெளிபடுத்தபடவேண்டும்.
4. ஜெபங்களில், செய்திகளில், ஆலோசனைகளில், உரையாடல்கள், தேவன் உயர்ந்தவர், நாம் அதற்கு கீழானவர் என்ற தன்மைகளை தேவனுடைய பிள்ளைகள் வெளிபடுத்த வேண்டும்.
5. மத்தேயு 23:6-12 விவிலிய பகுதி இதன் பிரதிபலிப்பு ஆகும். உயர்த்தபடவேண்டும் என்ற சிந்தையில் தன்னை தாழ்த்துவதல்ல, தேவனுக்கு அஞ்சி தன்னை தாழ்த்துவதினாலேயே உயர்த்தபடுதல் உண்டாகிறது.
6. சத்தியத்தை அப்படியே அறிவிப்பதினால் அவர் உயர்த்தபடுகிறார்.
7. அவர் சொல்வதை அப்படியே செய்வதினால் இந்நிகழ்வு நடக்கிறது.
கர்த்தாவே, நாங்கள் எங்களை தாழ்த்தி உம்மை மட்டும் உயர்த்தி உம் நாமத்திற்கு எல்லா முழங்கால்களும் முடங்கதக்கதாய் செயல்பட கிருபை தாரும்.