இதிலும் பெரிதானவைகளை காண்பாய்.
இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: அத்திமரத்தின் கீழே உன்னைக் கண்டேன் என்று நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்: இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய் என்றார். (யோவான் 1:50)
சங்கீதம் 71:19; யோவான் 5:20; எபிரெயர் 2:4; யாத்திராகமம் 6:1; எண்ணாகமம் 11:23; சங்கீதம் 37:34; சங்கீதம் 91:8; சங்கீதம் 128:5,6; பிரசங்கி 11:1; யோவான் 11:40.
வில்லியம் கேரி.
“தேவனிடம் பெரிய காரியங்களை எதிர்பார்.
தேவனுக்காய் பெரிய காரியங்களை செய்”.
தேவன் தம் பிள்ளைகளுக்கு செய்யும் மகத்தான கிரியைகளை தூரத்தில் பார்க்கும் கண்கள் உடையவர்களே தேவனுக்காய் பெரிய காரியங்களை செய்யும் இருதயம் உடையவர்கள்.
தேவனுடைய பிள்ளைகள்
– தேவனை பார்க்கும் கண்கள் உடையவர்களாய் இருக்க வேண்டும்.
– கிறிஸ்துவின் மகிமையை பார்க்கும் கண்கள் உடையவர்களாய் இருக்க வேண்டும்.
– கிறிஸ்துவின் இரட்சண்ய கிரியைகளை பார்க்கும் கண்கள் உடையவர்களாய் இருக்க வேண்டும்.
– பரிசுத்த ஆவியானவர் சபைகளில் செய்துகொண்டிருக்கும் காரியங்களை பார்க்கும் கண்கள் உடையவர்களாய் இருக்க வேண்டும்.
– தேவன் சத்துருவுக்கு செய்யப்போகும் நியாயதீர்ப்பை பார்க்கும் கண்கள் உடையவர்களாய் இருக்க வேண்டும்.
– சாத்தானின் ஆழங்களையும், தந்திரங்களையும் பார்க்கும் கண்கள் உடையவர்களாய் இருக்க வேண்டும்.
– தேவன் நமக்கு வைத்துள்ள திரளான நன்மைகளை பார்க்கும் கண்கள் உடையவர்களாய் இருக்க வேண்டும்.
– வரப்போகிற கிறிஸ்துவை எதிர்பார்த்து காத்திருக்கும் கண்கள் உடையவர்களாய் இருக்க வேண்டும்.
– நாம் அடையபோகும் ஆனந்தபாக்கியத்தை இங்கே பார்க்கும் கண்கள் உடையவர்களாய் இருக்க வேண்டும்.