ஜெபஆலயத்துக்கு புறம்பாக்க வேண்டுமென்று யூதர்கள் கட்டுப்பாடு செய்திருந்தார்கள்

ஜெபஆலயத்துக்கு புறம்பாக்க வேண்டுமென்று யூதர்கள் கட்டுப்பாடு செய்திருந்தார்கள்.

Jews had agreed already that if anyone confessed that He was Christ, he would be put out of the synagogue. (John 9:22)

Jn9:34; Jn12:42; Jn16:2; Lk6:22; Act4:18; Act5:40; 1Cor5:1-5; Deu29:21; Mt8:12; Mt25:30.

அவனுடைய தாய்தகப்பன்மார் யூதர்களுக்குப் பயந்ததினால் இப்படிச் சொன்னார்கள். ஏனெனில் இயேசுவைக் கிறிஸ்து என்று எவனாவது அறிக்கை பண்ணினால் அவனை ஜெபஆலயத்துக்குப் புறம்பாக்கவேண்டுமென்று யூதர்கள் அதற்குமுன்னமே கட்டுப்பாடு செய்திருந்தார்கள். (யோவான் 9:22)

யோவான் 9:34; யோவான் 12:42; யோவான் 16:2; லூக்கா 6:22; அப்போஸ்தலர் 4:18; அப்போஸ்தலர் 5:40; 1கொரிந்தியர் 5:1-5; உபாகமம் 29:21; மத்தேயு 8:12; மத்தேயு 25:30.

புறந்தள்ளப்படுதல்:
நசரேயனாகிய இயேசுவை கிறிஸ்துவாகிய மேசியா என்று அறிக்கையிடுகிறவரை யூத சமயத்தை விட்டும், சமூகத்தை விட்டும், குடும்பத்தை விட்டும் புறம்பாக்கிப்போடுவது யூதர்களின் வழக்கமாயிருந்தது. இயேசுகிறிஸ்துவை கிறிஸ்து என்று அறிக்கைபண்ணாதவர்கள் அந்திகிறிஸ்துவின் ஆவியுள்ளவர்கள் என்று விவிலியம் கூறுகின்றது. இயேசுவே கிறிஸ்து, இயேசுவே ஆண்டவர், இயேசுவே மீட்பர், இயேசுவே மெய்யான தெய்வம் என்று அறிக்கை செய்யாதவர்கள் தேவனுடைய இராஜ்ஜியத்துக்கு புறம்பாக்கிப்போடப்படுவார்கள் என்று தேவன் உரைத்துள்ளார். நமது விசுவாசம் இயேசுவிலும், இயேசுவுக்குள்ளும் இருக்கதக்கதாய் நாம் நடந்துகொள்ள வேண்டும். இயேசுவை ஏற்றுக்கொண்டால் ஜாதி அமைப்பிலிருந்தும், மத அமைப்பிலிருந்தும், சமூக அமைப்பிலிருந்தும் புறம்பாக்கப்பட்டிருந்தாலும் தேவன் அப்படிபட்டவர்களை சபையிலும், தேவனுடைய இராஜ்ஜியத்திலும் சேர்த்துக்கொள்கிறார். உறவுகள் உதறிவிடும். மனிதர்கள் மிருகமாவர். சமூகம் நெரிஞ்சிலாகும். அரசுகள் எதிர்க்கலாம். ஆனாலும் கர்த்தரோ அப்படிபட்டவர்களுக்கு தாய்தகப்பனாகவும், ஆதரவாகவும், ஆறுதலாகவும் இருக்கின்றார்.

உலகம் புறம்பாக்குவதை பெரிதாக நினைத்தால் பரலோகம் உன்னை புறம்பாக்கும் மறவாதே.

பரலோக குடிமகனாக மாற இயேசுவை கிறிஸ்து என்றும், ஒரே தெய்வமென்றும் அறிக்கையிடு.

கர்த்தாவே எங்களை உம் குமாரன் மூலம் இரட்சித்தீர் என்பதை எங்கள் நாவுகளின் மூலம் அறிக்கையிட உம் நல்ல ஆவியை தந்துள்ளதற்காய் ஸ்தோத்திரம்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME