பிலிப் நாத்தன்வேலிடம், நியாயபிரமாணத்தில் மோசே, தீர்க்கதரிசிகள் எழுதியிருக்கிறவரை கண்டோம் என்றான்
பிலிப்பு நாத்தான்வேலைக் கண்டு, நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம்: அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசுவே என்றான். (யோவான் 1:45)
யோவான் 44,45; யோவான் 5:45-47; லூக்கா 24:27,44; அப்போஸ்தலர் 3:24-26; அப்போஸ்தலர் 10:43; அப்போஸ்தலர் 13:27; வெளி 19:10; சங்கீதம் 16:10.
இந்த இயேசு கிறிஸ்து பழைய ஏற்பாடாகியநியாயாபிரமாணத்தில் முன்னுரைக்கபட்டவர்.
உலகில் வேறு எந்த நூல்களிலும் உரைக்கப்படாதவர்.
அவரின் இரண்டாம் வருகையை குறித்து எந்த அளவுக்கு உலகம் அறிவில்லாதிருக்கிறதோ அந்த அளவுக்கு உலகமானது அவரின் முதலாம் வருகை குறித்தும் அறிந்திருக்கவில்லை. யோவா1:10.
உலகமானது அவர் வந்த பின்பும் கூட அறியாத உலகம்,அவர் வருமுன்பு அவரை எவ்விதம் அறிந்திருக்க கூடும்.
இயேசுகிறிஸ்துவை நியாயபிரமாணம், கவிதை நூல்கள், வரலாற்று நூல்கள், தீர்க்கதரிசனங்கள், அடங்கிய பழைய ஏற்பாட்டிலே மட்டும் தான் பார்க்க முடியும்.
– அவர் நியாயபிரமாணத்தை நிறைவேற்றுகிறவராக வந்தார்.
– அவர் பாவிகளை இரட்சிக்க மனிதனாக வந்தார்.
– அவர் பாடுபடும் தாசனாக வந்தார்.
– அவர் தேவகுமாரனாக வந்தார்.
– இனி அவர் உலகை நியாயம் விசாரிக்கும் ராஜாவாக வர்ப்போகிறார்.
அவரை அறியுங்கள், அவரிடம் வாருங்கள், அவரை நம்புங்கள், அவரில் வாழுங்கள். ஆமென்.