பிலிப்பு அந்திரேயாவுக்கு அறிவித்தான், இருவரும் இயேசுவுக்கு அறிவித்தனர்.
Philip came and told Andrew, and in turn Andrew and Philip told Jesus. (John 12:22)
Jn1:40,41; Jn6:8; Mat10:5,6; Mat4:18; Mk1:16,29; Mk13:3; Act1:13.
பிலிப்பு வந்து, அதை அந்திரேயாவுக்கு அறிவித்தான், பின்பு அந்திரேயாவும் பிலிப்புவும் அதை இயேசுவுக்கு அறிவித்தார்கள். (யோவான் 12:22)
யோவான் 1:40,41; யோவான் 6:8; மத்தேயு 10:5,6; மத்தேயு 4:18; மாற்கு 1:16,29; மாற்கு 13:3; அப்போஸ்தலர் 1:13.
அறிவித்தல்:
கிரேக்கர் பிலிப்புவினிடம் இயேசுவை காண உத்தரவு கேட்டனர். பிலிப்பு பயத்தினிமித்தமாகவோ, கூச்சத்தினிமித்தமாகவோ, அனுமதி பெறவேண்டும் என்பதினிமித்தமாகவோ கிரேக்கர்களின் விருப்பத்தை அந்திரேயாவிடம் அறிவித்தான். அந்திரேயா என்றால் ஆடவரின் நற்பண்புகள் கொண்ட என்று பொருளாகும்.
அந்திரேயாவும் பிலிப்புவும் சேர்ந்துவந்து இதனை இயேசுவுக்கு அறிவித்தனர். அந்திரேயா அடிக்கடி பேதுருவோடு இணைத்து பேசப்படுவதுண்டு. இங்கே பிலிப்புவுடன் இணைத்து பேசப்படுகின்றார். ஒருவரோடு இணைந்து செயல்படும் நல்ல தோழமையும், இணக்க மனநிலையும் கொண்டவனே அந்திரேயா. அதைபோலவே போதகரும் சபையாரும், பெற்றோரும் பிள்ளைகளும், கணவனும் மனைவியும, அண்ணனும் தம்பியும் இணைந்து செயல்படுவதையே ஆண்டவர் விரும்புகின்றார்.
இயேசுவிடம் இணக்க மனநிலை கொண்டு அணுகுவதே சிறப்பானது. இருவர் அல்லது மூவர் இணைந்து செயல்படும் இடத்தில்தான் இயேசு வெளிப்பட முடியும். பிறரிடம் கசப்பும் வெறுப்பும் கொண்டிருந்து, கீழ்படியாமலிருந்து இயேசுவிடம் நெருங்கிவர இயலாது. பரிசுத்தம் என்பது வெறும் வெளிப்புற சடங்கு சார்ந்தது மட்டுமல்ல, உட்புற மனம் சார்ந்ததுமாகும். எக்காலத்திலுமில்லாத அளவுக்கு இக்காலத்தில் போட்டிகளும், பொறாமைகளும் கீழ்படியாமையும் நிறைந்து காணப்படுகின்றன.
இயேசுவிடம் காணிக்கை செலுத்தவும் ஒருமனம் தேவை. அவரிடம் முறையிடவும், ஜெபிக்கவும் ஒருமனம் தேவை. கணவன் மனைவி ஒன்றித்து அவரிடம் முறையிட வேண்டும்.போதகர் விசுவாசிகள் ஒருமனபட்டு அவரிடம் முறையிட வேண்டும். ஒன்றித்து அவரிடம் வந்தபோதுதான் பரிசுத்த ஆவியானவர் மழையாக பொழிந்தருளப்பட்டார். வரங்களை கொண்டு வேறுபடுவதற்கல்ல ஒன்றித்து அவரிடம் செல்லுவதற்கே வரங்கள் தரப்பட்டுள்ளது.
பிறருடைய குற்றங்களை அவரிடம் கொண்டுபோகும்போது உன்னால் அவன் எவ்வளவு காயப்பட்டுள்ளான் என்பதையும் அவரிடம் கேட்டு தெரிந்துகொள்.
ஆதலால் கிறிஸ்துவுக்குள் யாதொரு ஆறுதலும், அன்பினாலே யாதொரு தேறுதலும், ஆவியின் யாதொரு ஐக்கியமும், யாதொரு உருக்கமான பட்சமும் இரக்கங்களும் உண்டானால்,
நீங்கள் ஏக சிந்தையும் ஏக அன்புமுள்ளவர்களாயிருந்து, இசைந்த ஆத்துமாக்களாய் ஒன்றையே சிந்தித்து, என் சந்தோஷத்தை நிறைவாக்குங்கள். பிலிப்பியர்2:1,2.