பிலாத்து: நீர் யூதருடைய இராஜாவா?
Pilate called Jesus,and said to Him,Are You the King of the Jews? (John 18:33)
John 18:37; Matthew 27:11; Mark 15:2; Luke 23:3,4; Psalm 2:6-12; Isaiah 9:6,7; Jeremiah 23:5; Zephania 3:15; Zechariah 9:9.
அப்பொழுது பிலாத்து மறுபடியும் அரமனைக்குள் பிரவேசித்து, இயேசுவை அழைத்து: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். (யோவான் 18:33)
யோவான் 18:37; மத்தேயு 27:11; மாற்கு 15:2; லூக்கா 23:3,4; சங்கீதம் 2:6-12; ஏசாயா 9:6,7; எரேமியா 23:5; செப்பனியா 3:15; சகரியா 9:9.
நீர் யூதருடைய இராஜாவா?
ஏரோது இராஜாவாகவும், பிலாத்து தேசாதிபதியாகவும் இருக்கையில் இயேசு கிறிஸ்து யூதருடைய இராஜா என்ற குரல் தொனித்தது. இந்த குரலை வேடிக்கையின் குரல் என்று ஒதுக்கி வைக்க ஆட்சியாளர்கள் விரும்பவில்லை. யூதருடைய இராஜாவாக சொல்லப்பட்டவரே யூதர்களால் பிடிக்கப்பட்டு ஆட்சியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்த தருணத்தில் இந்த குரலை குறித்தும், குரலுக்குரிய நபராகிய இயேசுவை குறித்தும் தீர விசாரிப்பது பிலாத்துவுக்கு வாய்ப்பாய் அமைந்தது.
நீர் யூதருடைய இராஜாவா என்று பிலாத்து கேட்டதினால் என்னவோ ராஜாவை கேலி செய்யும் விதமாக ராஜாவுக்குரிய கிரீடம், கோல் போன்றவற்றை கொடுத்து பின்னாட்களில் இயேசுவை அவமானபடுத்தினர் என்பதை அறிவோம். லூக்கா 23:37,38. மாற்கு 15:15-20. இராஜாவுக்குரிய தோரணையில்லை, இராஜாவுக்குரிய கர்ச்சனை வைராக்கியம் திமிர் போன்ற எதுவும் இல்லை, இராஜாவுக்குரிய சேனைதிரள் இல்லை, இராஜாவுக்காக கலகம் விளைவிக்கும் கூட்டம் இல்லை. இவையெல்லாம் கருத்தில் கொண்டு இயேசுவை கேலி செய்யும் விதமாகவும் இக்கேள்வியை கேட்டிருக்கக் கூடும்.
இயேசு கிறிஸ்துவின் இராஜ மேன்மை பிலிப்பியர் 2:6-8 ன் படியாக அடிமை ரூபமாகவும், ஏசாயா 53:2 ன் படியாக விரும்பதகாத ரூபமாகவும் காணப்பட்டது என்பதை விவிலியம் தீர்க்கதரிசனமாகவும், நிகழ்வியலாகவும், சுவிசேஷ செய்தியாகவும் கூறுகின்றது. அவரின் பிறப்பின் மகிமை ஆச்சரியமாயிருந்தது. ஆனால் அவரின் அன்றாட தோற்றம் விரும்படதக்கதாக இல்லை.
அனேகர் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாமைக்குரிய ஒரு காரணம் இயேசு கிறிஸ்துவின் மனித தோற்றம் விரும்பதக்கதாக இருக்கவில்லை என்பதாகும். ராஜ மேனமையை விட்டு சாக்கடைக்கு வந்தவர்கள் ராஜ மேன்மையை காண்பிக்க இயலாது. காண்பித்தாலும் ஒருவரும் நம்பமாட்டார்கள். மனிதனை மீட்க பாவியாக்கப்பட்ட இயேசு ராஜ மேனமையை காண்பிக்க அன்று விரும்பவில்லை. ஏனெனில் அதனை ஒருவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் இதே கர்த்தராகிய இயேசு ராஜ மேனமையோடும், மகிமையின் பிரசன்னத்தினாலும் வெளிப்படப்போகிறார் என்பதை மறக்க வேண்டாம்.
அன்று மறைக்கப்பட்ட ராஜ மேன்மை வெகு விரைவில் வெளிப்பட போகின்றது. அப்பொழுது ஒருவரும் தப்பவியலாது.
ராஜ மகிமையை விட்டு வந்த இயேசுவை பிரசங்கிக்கும் நமக்கு ராஜ தோரணை எதற்காக? நமது தோரணையை அல்ல, வரப்போகிற இராஜாவை பிரசங்கிப்போம்.
தூளிலிருந்துக்கொண்டு இராஜாவை காணும் கண்கள் பாக்கியமுள்ளவைகள்.
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து பிரசன்னமாகும்வரைக்கும், நீ இந்தக் கற்பனையை மாசில்லாமலும் குற்றமில்லாமலும் கைக்கொள்ளும்படிக்கு, எல்லாவற்றையும் உயிரோடிருக்கச் செய்கிற தேவனுடைய சந்நிதானத்திலேயும், பொந்தியுபிலாத்துவின் முன்னின்று நல்ல அறிக்கையைச் சாட்சியாக விளங்கப்பண்ணின கிறிஸ்து இயேசுவினுடைய சந்நிதானத்திலேயும் உனக்குக் கட்டளையிடுகிறேன்.
அந்தப் பிரசன்னமாகுதலை தேவன் தம்முடைய காலங்களில் வெளிப்படுத்துவார், அவரே நித்தியானந்தமுள்ள ஏக சக்கராதிபதியும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும், ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென். 1தீமோத்தேயு 6: 13-16.