பிலாத்துவுக்கு இயேசு மறுபடி சொல்லவில்லை.
Pilate said to Jesus,Where are You from?.But Jesus gave him no answer. (John 19 :9)
John 8:14; John 9:29,30; Matthew 27:12-14; Mark 15:3-5; Act 8:32,33; Psalm 38:13-15; Isaiah 53:7.
மறுபடியும் அரமனைக்குள்ளே போய், இயேசுவை நோக்கி: நீ எங்கேயிருந்து வந்தவன் என்றான். அதற்கு இயேசு மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை. (யோவான் 19:9)
யோவான் 8:14; யோவான் 9:29,30; மத்தேயு 27:12-14; மாற்கு 15:3-5; அப்போஸ்தலர் 8:32,33; சங்கீதம் 38:13-15; ஏசாயா 53:7.
பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை. பதில் சொல்லாத இயேசு.
இயேசுகிறிஸ்துவின் உபதேசங்களைக் கவனித்துப் பார்க்கும்போது சில நேரங்களில் அவரிடம் கேட்கபடும் கேள்விகளுக்கு பதில் சொல்லுவதில்லை. சில நேரங்களில் கேட்கபடும் கேள்விக்கு வேறுவிதமான பதிலை சொல்லுவதுமுண்டு. இங்கே பிலாத்துவின் கேள்விக்கு இயேசு பதில் சொல்லவில்லை. விசாரணை மன்றத்தில் பதில் சொல்லாதிருப்பது தகாது என்பதை இயேசு அறிந்திருந்தும் பதில் சொல்லவில்லை.
கேள்வியானது நீர் எங்கேயிருந்து வந்தீர் என்பதாகும். இந்த கேள்விக்கும் சேர்த்து 36,37 ஆகிய வசனங்களில் பதில் சொல்லிவிட்டார் இயேசு. இப்பொழுது மறுபடியும் கேட்கபடுகிறது. கேள்விக்கு பதில் சொல்ல விரும்பாதது மயிர் கத்தரிக்கிறவனுக்கு முன்பாக சத்தமிடாதிருக்கிற ஆட்டை போலவும், தன் நேர்மையையும் குற்றமின்மையையும் நிரூபிக்க இயலாதவராகவும் வாய் மூடி மௌனமாய் நிற்கின்றதுமாகும். .
கர்த்தராகிய இயேசு ஏன் மௌனமாக நிற்கின்றார்?
முதலாவது, இந்த மௌனம் 11 ஆம் வசனத்தை பிறப்பிக்கபோகின்றது என்பதினிமித்தம். இரண்டாவது, தன்னுடைய சாட்சியை ஒருவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று அறிந்ததினிமித்தம். மூன்றாவது, உலகை இரட்சிப்பதற்காக வந்துள்ள இயேசுவுக்கு உலக மனிதர் கேட்கின்ற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்க அவசியமில்லை. நான்காவதாக, தன்னை பரிபூரணமாக வெளிபடுத்துவது தேவனுடைய விருப்பமாயிருக்கவில்லை. ஐந்தாவதாக, தன்னை பின்பற்றி வரப்போகும்தேவனுடைய பணியாட்கள் தீமைக்கு பேதைகளாயிருக்க வேண்டும் என்று கற்றுக் கொடுப்பதற்காக. ரோமர் 16:19; மத்தேயு 10:19,20.
தேவனுடைய மனிதர்களாகிய நாம் பேசுவதற்கு தீவிரமாயும், கோபிக்கிறதற்கு பொறுமையாயும் இருக்க வேண்டும் என்பதை திரித்து பார்க்கிறவர்களாயிருப்பதினால் தேவையில்லாத இடங்களிலெல்லாம் தேவையில்லாதவைகளை பேசி தேவனுடைய நாமத்தை அவகீர்த்தியடையபண்ணுகிறோம். நியாயம் எடுபட்டு போகிற இடங்களிலும், பொய்ம்மை அதிகாரம் செலுத்தும் இடங்களிலும், துன்மார்க்கம்மேலோங்கி நிற்கிற காலங்களிலும் தேவனுடைய கிரியைகள் வெளிப்படுவது வரையிலும்பேசாதிருப்பதுவே நலமாயிருக்கும். தேவனுடைய ஆவி நம்மில் கிரியை செய்யாமல் நாம் பேசுவது, நமக்கே ஆபத்துகளையும், தோல்விகளியும் கொண்டுவரும். சங்கீதம் 12:8; 39:1; நீதி 28:28,12 ஆகிய வசனங்களை கவனிக்குக. யோபு, தாவீது, ஆசாப் போன்ற பகதர்களும் இயேசுவைபோல மௌனமாயிருக்க வேண்டிய இடத்தில் மௌனமாயிருக்க கற்றுக் கொண்டிருந்தார்கள்.
நமது வாய் அவரால் திறக்கப்பட நமது உள்ளம் அவரது வார்த்தையால் நிரப்படுவதுவரையிலும் மௌனமாயிருப்போம்.
பொல்லாதவர்களைக் குறித்து எரிச்சலடையாதே; நியாயக்கேடுசெய்கிறவர்கள்மேல் பொறாமைகொள்ளாதே. அவர்கள் புல்லைப்போல் சீக்கிரமாய் அறுப்புண்டு, பசும்பூண்டைப்போல் வாடிப்போவார்கள்.
கர்த்தரை நம்பி நன்மைசெய்; தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள். கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார். உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார். உன் நீதியை வெளிச்சத்தைப்போலவும், உன் நியாயத்தைப் பட்டப்பகலைப்போலவும் விளங்கப்பண்ணுவார்.
கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு; காரியசித்தியுள்ளவன்மேலும் தீவினைகளைச் செய்கிற மனுஷன்மேலும் எரிச்சலாகாதே. கோபத்தை நெகிழ்ந்து, உக்கிரத்தை விட்டுவிடு, பொல்லாப்புச்செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம். பொல்லாதவர்கள் அறுப்புண்டுபோவார்கள்; கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள். இன்னுங் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான்; அவன் ஸ்தானத்தை உற்று விசாரித்தாயானால் அவன் இல்லை. சங்கீதம் 37:1-10.