பிறவிக்குருடனுடைய கண்களை ஒருவர் திறந்தாரென்று இதுவரையிலும் கேள்விப்படவில்லை

பிறவிக்குருடனுடைய கண்களை ஒருவர் திறந்தாரென்று இதுவரையிலும் கேள்விப்படவில்லை.

Since the world began it has been unheard of that anyone opened the eyes of one who was born blind. ( John 9:32)

Mk2:12; Mk10:52; Lk1:68-75; Jn10:21; Jn15:24; Rev16:18; Job20:4,5; Isa64:4; Ps22:5; Ps27:14.

பிறவிக்குருடனுடைய கண்களை ஒருவன் திறந்தானென்று உலகமுண்டானது முதல் கேள்விப்பட்டதில்லையே. (யோவான் 9:32)

மாற்கு 2:12; மாற்கு 10:52; லூக்கா 1:68-75; யோவான் 10:21; யோவான் 15:24; வெளி 16:18; யோபு 20:4,5; ஏசாயா 64:4; சங்கீதம் 22:5; சங்கீதம் 27:14.

ஒருவரும் இல்லை:
உலகம் உண்டானது முதற்கொண்டு பிறவியிலே குருடனாக பிறந்தவனுக்கு மறுபடியும் கண்களை வரவைக்க ஒருவராலும் இயலவில்லை. 1728 வரையிலும் அறுவை சிகிட்சை மூலமாகவும் இது சாத்தியபடவில்லை. 1728 ல் டாக்டர் செஸில்டன் என்ற அறுவை சிகிட்சை நிபுணர் 14 வயது பையனுக்கு அறுவை சிகிட்சை மூலம் கண்ணொளி வரச்செய்தார். இந்த அறுவை சிகிட்சையானது திறமையான வழிகாட்டுதல், வழி நடத்துதல்படியே வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

யோவான் சுவிசேஷத்தில் உள்ள நிகழ்வானது இயேசுவால் செய்யப்பட்ட அற்புதம். தேவனுடைய வல்லமையினால் செய்யப்பட்டது. இதில் எந்த திறமையாளர்களும் சம்பந்தபடவில்லை. அவர் ஒருவரே – கண்களை உண்டாக்கினவரே கண்ணொளி கொடுத்தார்.

வலி இல்லாமல், மருத்துவ உபகரணங்கள் இல்லாமல், மயக்க மருந்து இல்லாமல், அறுவை அரங்கங்கள் இல்லாமல், உயர்தர மருத்துவமனைகளோ, சிகிட்சை முறைகளோ இல்லாமல் இயேசுகிறிஸ்து இந்த அரிய அற்புதத்தை ஒருசில நிமிடங்களிலே நிகழ்த்தினார். பிறவியிலே கண்களை உடையவராய் பிறப்பது போலவே இவன் கண்ணொளி பெற்றான்.

இந்த அற்புதம் விசுவாசத்தின் அடிப்படையில் உண்டானதல்ல, தேவ கிருபையின் அடிப்படையில் உண்டானது.

பாவம் செய்தவர்களும், பலவீனர்களும், குறைவுள்ளவர்களும் தேவனுடைய கிருபைக்காய் காத்திருக்கலாம். அவர்கள்மேல் தேவகிருபை பலிதமாகி அற்புதங்களை பிறப்பிக்கும். அற்புதங்கள் விசுவாசத்தை பிறப்பிக்கும். விசுவாசம் பூரணமாகும்போது அவரை போலாகின்றோம். இப்பொழுது கிருபைக்கல்ல கீழ்படிதலுக்கே கொண்டுபோகப்படுகின்றோம்.

இயேசுவினால் மட்டுமே பாவிக்கு கிருபையையும், விசுவாசித்த பிள்ளைகளுக்கு சுதந்தரத்தையும் தரமுடியும். வேறு எவராலும் எதையும் நமக்கு கொடுக்க இயலாது.

கர்த்தாவே உம்மைதவிர வேறு எவராலும் அற்புதங்களை செய்ய இயலாது என்று முழுமையாய் நம்பியுள்ளோம். எங்களுக்கு அற்புதங்களை செய்யும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME