பிரதான ஆசாரியர் இயேசுவைக் கண்டபோது சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டனர்.

பிரதான ஆசாரியர் இயேசுவைக் கண்டபோது சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டனர்.

chief priests and officers saw Him, they cried out, saying,Crucify Him, crucify Him. (John 19 :6)

John 19:15; Matthew 27:22; Mark 15:12-15; Luke 22:21-23; Act 2:23; Act 3:13-15; Act 7:52; Act 13:27-29.

பிரதான ஆசாரியரும் சேவகரும் அவரைக் கண்டபோது: சிலுவையில் அறையும் சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: நீங்களே இவனைக் கொண்டுபோய்ச் சிலுவையில் அறையுங்கள், நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன் என்றான். (யோவான் 19:6)

யோவான் 19:15; மத்தேயு 27:22; மாற்கு 15:12-15; லூக்கா 22:21-23; அப்போஸ்தலர் 2:23; அப்போஸ்தலர் 3:13-15; அப்போஸ்தலர் 7:52; அப்போஸ்தலர் 13:27-29.

சிலுவையில் அறையுங்கள்:

ஆங்கிலத்தில் சிலுவை என்ற சொல் வரவில்லை. Crucify என்ற சொல்லே இவ்வசனத்தில் வந்துள்ளது. இயேசுவை அறையுங்கள் என்று கூறினர். எங்கே அறைய கூறினர்? அல்லது எப்படி அறைய கூறினர்?? சிலுவையில் அறைய கூறினர் என்று பொருள் கொள்ளலாம். சிலுவையில் அறைதல் என்பது யூதர்களின் பழக்கமல்ல, உரோமர்களின் பழக்கமாகும். சிலுவையில் அறைதல் என்பது சமுதாயத்துக்கும், அரசியலுக்கும், ராஜாங்கத்துக்கும் எதிராக எழும்புகிறவர்களுக்கு கொடுக்கப்படும் உச்சபட்ச தண்டனையாகும்.

மூன்றுவித சிலுவைகள் உள்ளதாக குறிப்புகள் கூறுகின்றன. T வடிவ சிலுவை, X வடிவ சிலுவை, கூட்டல் வடிவ சிலுவை ஆகியவையாகும். இந்த கூட்டல் வடிவ சிலுவையில் தான் (சற்று மாறுபட்ட முறையில்) இயேசு அறையப்பட்டதாக பாரம்பரியங்கள் கூறுகின்றன.

சிலுவையை இஸ்ராயேலர்கள் தெரிந்தெடுக்குமுன்பதாகவே தேவன் சிலுவையை தெரிந்தெடுத்தார். இந்த சிலுவை மரணம் குறித்து இயேசுகிறிஸ்து அறிந்திருந்தார். அதைகுறித்து பிரசங்கிக்கவும் செய்தார். பிதாவாகிய தேவன் தமது குமாரனுக்கு சிலுவையை தெரிந்தெடுக்க காரணம் என்ன?யூதர்களுக்கு பழக்கமில்லாத உரோமர்களின் பழக்கத்தை தெரிந்தெடுக்க காரணம் என்ன?

சபிக்கப்பட்ட மனுக்குலம் ஆசீர்வதிக்கப்பட இயேசுகிறிஸ்து சாபமாக வேண்டியது. அதாவது மரத்திலே தூக்கப்படுபவர் சபிக்கப்பட்டவர்.

வானத்துக்கும் பூமிக்கும் நடுவாக தொங்கவிடபடவேண்டுமென்ற நியாயபிரமாண குறிப்புகளினிமித்தம். வெண்கல சர்ப்பம் உயர்த்தப்பட்டதைபோல.

உரோமர்களின் சிலுவையை தெரிந்தெடுக்க காரணம் இயேசுகிறிஸ்துவை உரோமர்கள் சிலுவையில் அறைவதினிமித்தம் பாவத்தை தங்கள் தலைமேல் சுமத்திக் கொள்கிறார்கள். இந்த உரோமர்களே முழுவதுமாய் இரட்சிக்கப்படவேண்டும் என்பதுமாகும். பிற்காலங்களில் உரோமர்களின் ராஜமேன்மையைவிட இயேசு கிறிஸ்து உயர்ந்திருப்பார் என்று காண்பிக்கவும் ஆகும்.

மனிதர் – பாவம் செய்த மனிதர் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவை நோக்கிப்பார்த்து இரட்சிப்படையவே இயேசு சிலுவையில் அறையப்பட்டார்.

பாவத்தினிமித்தம் மனுகுலத்தை வேதனைகளுக்கும், பாடுகளுக்கும், மரணத்துக்கும் ஒப்புக்கொடுத்த தேவனே தம் குமாரனை சிலுவைக்கு கொடுத்து வலியையும், வேதனையையும் அனுபவிக்கின்றார். குழியில் தள்ளப்பட்ட மனிதனை மீட்க அவரே குழியில் இறங்க ஆயத்தமானார். தம் மகன் அடையபோகும் வலியை கண்டு மனுகுலம் மனந்திரும்பாதா என்று ஏங்குகின்றார்.

மனிதனே உன் மீட்புக்காக என் சொந்தகுமாரனை சிலுவைக்கு தந்தேன். இப்பொழுதாவது உன் பாவங்களை விட்டுவிட்டு – பிற தெய்வங்களை விட்டுவிட்டு மரித்தும் உயிரோடிருக்கும் இயேசுவிடம் மனந்திரும்புவீரா?

சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டது போல மனுஷகுமாரனும், தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும். தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்பட்டாயிற்று. யோவான் 3:14-18.

ஞானஸ்நானத்தைக் கொடுக்கும்படி கிறிஸ்து என்னை அனுப்பவில்லை; சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவே அனுப்பினார்; கிறிஸ்துவின் சிலுவை வீணாய்ப்போகாதபடிக்கு, சாதுரிய ஞானமில்லாமல் பிரசங்கிக்கவே அனுப்பினார். சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது. 1கொரிந்தியர் 1:17,18.

ADD YOUR COMMENT

Powered By Indic IME