பிரதான ஆசாரியன் இயேசுவிடம் சீஷர், போதகம் குறித்து விசாரித்தான்.
high priest then asked Jesus about His disciples and His doctrine. (John 18:19)
Matthew 21:10; Mark 7:17; Mark 10:10; Luke 1:3; Luke 23:6,14; John 4:52; John 5:33; John 16:19; John 18:21; Act 4:9; Act 10:17; Romans 10:20.
பிரதான ஆசாரியன் இயேசுவினிடத்தில் அவருடைய சீஷரைக்குறித்தும் போதகத்தைக்குறித்தும் விசாரித்தான். (யோவான் 18:19)
மத்தேயு 21:10; மாற்கு 7:17; மாற்கு 10:10; லூக்கா 1:3; லூக்கா 23:6,14; யோவான் 4:52; யோவான் 5:33; யோவான் 16:19; யோவான் 18:21; அப்போஸ்தலர் 4:9; அப்போஸ்தலர் 10:17; ரோமர் 10:20.
விசாரித்தறிதல்:
பிரதான ஆசாரியன் இயேசுவைக் குறித்து அறிய விரும்பாது இயேசுவின் சீஷர்கள் குறித்தும், இயேசுவின் உபதேசம் குறித்தும் விசாரித்தறிய முயற்சி செய்தான். இயேசுவின் சீஷர்களில் ஒருவனே பிரதான ஆசாரியனின் வேலைக்காரனின் காதை வெட்டினவன். அப்படியிருக்க இயேசுவின் போதகமானது கலகம் விளைவிக்கிறதற்கேதுவானதாக இருந்திருக்க வேண்டும். ஆகையினால்தான் சீஷர்கள் பட்டயத்தைப் பயன்படுத்தினார்கள் என்று நினைத்து விசாரித்திருக்கக் கூடும்.
ஆதிசபை காலங்களில் கூடிவருகிற தேவ ஜனங்கள் இயேசுவின் பெயரால் அப்பம் பிட்டு, திராட்சை ரசம் பருகியதை அக்காலத்திய ஆட்சியாளர்கள் கிறிஸ்தவர்கள் மனித மாம்சம் தின்று மனித இரத்தம் குடிக்கிறவர்கள் என்று குற்றஞ்சாட்டி கிறிஸ்தவர்களை உபத்திரவப்படுத்தினார்கள்.
இயேசுவின் உபதேசத்தை சரியாக புரிந்துக்கொள்ளாத யூதர்கள் இயேசு தேவாலயத்தை இடித்து தள்ள கூறினார் என்று அவர்மீது குற்றம் சுமத்தினார்கள்.
அப்போஸ்தலர் நடபடிகளில் தேவனை அறியாத ஜனங்கள் தேவனுடைய ஊழியக்காரர்களை கோவில் கொள்ளைக்காரர்கள் என்று சொல்லி குற்றம் சுமத்தினார்கள்.
குற்றசாட்டுகள் தொடர்ந்துக் கொண்டேயிருந்தாலும் சுவிசேஷ பிரபல்யம் பெருகிக் கொண்டேயிருக்கின்றது.
கொள்ளைநோய்கள் சபைகூடி வருதலை தடுத்திருந்தாலும் பெருங்கூட்டம் மனந்திரும்பி இரட்சிக்கப்பட காரணமாயிருக்கின்றது. எவ்வளவக்கெவ்வளவாக சபை அடைக்கப்பட்டுள்ளதோ அவவளவக்கவ்வளவாக எங்கும் சபைகள் திறக்கப்படும். எங்கும் பிதாவை தொழுதுக்கொள்ளும் காலம் வரும் என்பது உண்மையாகும்.
சுவிசேஷத்தை அறிவித்தல் கிறிஸ்தவரின் கடமையாகும். இயேசுகிறிஸ்து மூன்று பிரதானமான கட்டளைகளை கொடுத்ததுண்டு. முதலாவது, சிலுவை சுமந்து என்னை பின்பற்றுங்கள் என்பதாகும். 2 வது, ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்பது. 3 வது, எங்கும் போய் சுவிசேஷத்தை பிரசங்கம் செய்யுங்கள் என்பதாகும். விசாரித்து கேட்கிறவர்கள் இருந்தாலும் சரி விசாரணை செய்கிறவர்கள் இருந்தாலும் சரி சுவிசேஷம் எல்லா அடைபட்டுள்ள வாசல்களையும் திறந்து சென்றுக் கொண்டேயிருக்கும்.
தொற்றினால் வாசல்கள் அடைபட்டிருந்தாலும் மக்களின் மனவாசல்கள் சுவிசேஷத்திற்காக திறக்கப்பட போகின்ற காலம் விரைவில் வரப்போகின்றது.
கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும். அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது.
யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லாருக்குங் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார். ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான். அவரை விசுவாசியாதவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளுவார்கள்? அவரைக்குறித்துக் கேள்விப்படாதவாகள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்?
அனுப்பப்படாவிட்டால் எப்படிப் பிரசங்கிப்பார்கள் சமாதானத்தைக்கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள் என்று எழுதியிருக்கிறதே. ஆனாலும் சுவிசேஷத்துக்கு எல்லாரும் கீழ்ப்படியவில்லை. அதைக்குறித்து ஏசாயா: கர்த்தாவே, எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார் என்று சொல்லுகிறான். ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும். ரோமர் 10: 9-17.