அநேகர் அவருடனேகூட நடவாமல் பின் வாங்கிப்போனார்கள்.
From that time many of His disciples went back and walked with Him no more. (John 6:66)
Jn6:60; Jn8:31; Mt12:38-45; Mt13:20,21; Mt19:22; Mt27:20-25; Lk9:62; 2Tim1:15; 2Tim4:10; Heb10:38; 2Pet2:20-22; 1Jn2:19.
அதுமுதல் அவருடைய சீஷரில் அநேகர் அவருடனேகூட நடவாமல் பின் வாங்கிப்போனார்கள். (யோவான் 6:66)
யோவான் 6:60; யோவான் 8:31; மத்தேயு 12:38-45; மத்தேயு 13:20,21; மத்தேயு 19:22; மத்தேயு 27:20-25; லூக்கா 9:62; 2தீமோத்தேயு 1:15; 2தீமோத்தேயு 4:10; எபிரெயர் 10:38; 2பேதுரு 2:20-22; 1யோவான் 2:19.
பின்வாங்கிப்போன சீஷர்கள்:
இயேசுகிறிஸ்துவை பின்பற்றிய சீஷர்கள் 12+70 மட்டுமல்ல, வேறுபலரும் இருந்திருக்கலாம் என்பதை இப்பகுதி காண்பிக்கின்றது. இயேசுவின் பரமேறுதலுக்கு பின்பு கூடிய கூடுகையில் 120 பேர் காணப்பட்டனர் என்று அப்போஸ்தலர் 1:15 கூறுகின்றது.
இயேசுவை பின்பற்றிய சீஷர்களில் பின்வாங்கிப்போனவர்களை 3 வகையாகப் பிரிக்கலாம்.
- அவரின் உபதேசத்தை ஏற்றுக்கொள்ளாமல் பின்வாங்கிப்போனவர்கள்.
- அவரை காட்டிக்கொடுக்க துணிந்த யூதாசு போன்றவர்கள்.
- கிறிஸ்துசபை உருவானபின்பு பின்வாங்கிப்போனவர்கள்.
யோவான் 6 ஆம் அதிகாரத்தில் பின்வாங்குதல் என்பது அவரோடு நடக்க விருப்பமில்லாதவர்கள் என்பதாகும். இயேசுவோடு இருக்கவும், நடக்கவும் அழைக்கப்பட்டவர்களே சீஷர்கள். இயேசுவை பின்பற்ற அழைக்கப்பட்டவர்கள் விசுவாசிகள். இயேசுவோடு இருந்து, அவரோடு நடந்து, அவரையே போதித்து, அவரையே காண்பித்து, அவரையே மகிமைபடுத்தி, அவருக்காய் சாட்சிகளாக இருப்பதுவே உண்மையான சீஷத்துவ பணியாகும். இதில் இணக்கம் இல்லாதிருக்குமானால் பின்வாங்குதலே தொடரும்.
கடினநிலை புரிந்துகொள்ளாமைக்கும், புரிந்துகொள்ளாமை முறுமுறுத்தலுக்கும் ,
முறுமுறுத்தல் அவிசுவாசத்திற்கும், அவிசுவாசம் வெளியேறுதலுக்கும் வழிநடத்தும்.
இணைந்து நடத்தலே விசுவாசம்.
பிரிந்து நடத்தலே அவிசுவாசம்.
கர்த்தாவே, உம் மகனை எங்களுக்கு மாதிரியாக தந்தமைக்கு நன்றி. நாங்கள் என்றும், எங்கும், எல்லாவற்றிலும் அவரோடு இணைந்து நடந்துவர உதவிச்செய்யும்.