பிதா இயேசுவை உலகரட்சகராக அனுப்பினாரென்று நாங்கள் கண்டு சாட்சியிடுகிறோம்

பிதா இயேசுவை உலகரட்சகராக அனுப்பினாரென்று நாங்கள் கண்டு சாட்சியிடுகிறோம்

And we have seen and testify that the Father has sent the Son as Savior of the world. (1John 4:14)

1John 2:1,2; John 1:29; John 3:16,17; John 4:42; John 12:47; Acts 18:5; 1Peter 5:12.

பிதாவானவர் குமாரனை உலகரட்சகராக அனுப்பினாரென்று நாங்கள் கண்டு சாட்சியிடுகிறோம். (1 யோவான் 4:14)

1யோவான் 2:1,2; யோவான் 1:29; யோவான் 3:16,17; யோவான் 4:42; யோவான் 12:47; அப்போஸ்தலர் 18:5; 1பேதுரு 5:12.

இயேசுவே உலக இரட்சகர்.

இயேசு கிறிஸ்துவின் பிறப்பும், வளர்ப்பும், ஊழியமும், மரணமும், உயிர்த்தெழுதலும் சார்ந்த தீர்க்கதரிசனங்களும், புகழுரைகளும், சாட்சியுரைகளும் இயேசுவே உலகரட்சகர் என்று காண்பிக்கின்றது. பழைய ஏற்பாட்டின் புத்தகங்களிலும் இத்தகைய கருத்துக்கள் காணப்படுகின்றன. பாவம் என்பது எப்பொழுது ஒரு பொதுபண்பாகவும், முழு உலகையும் பாதிப்பதாகவும் மாறியதோ அப்பொழுதே தேவனுடைய மீட்பும், மீட்புக்காக அனுப்பப்போகிற ஸ்திரீயின் வித்தும் முழு உலகிற்கானதாகவும் மாறியது. சில பாவங்கள் தனி மனிதனை மட்டுமே அழிக்கும். ஆனால் அந்த பாவத்தின் வேர் அவனிலிருந்து உண்டாகும் முழு சந்ததியையும் தாக்கும். ஆகவே பாவம் செய்தார்களோ இல்லையோ ஒவ்வொருவரும் தனிபட்ட முறையில் கிறிஸ்துவை உலக மீட்பராகவும், தன் ஆத்தும மீட்பராகவும் ஏற்றுக்கொள்ள வேண்டும். பாவம் எவ்விதம் சந்ததிகளை பாதித்ததோ அவ்வாறே கிறிஸ்துவின் மீட்பும் சந்ததிகளை பின்தொடரும். ஆனால் பாவத்தினால் பிறந்த சந்ததியில் ஒருவன் பாவம் செய்யாதிருக்க தீர்மானிப்பதைப்போல மீட்கப்பட்டவனின் சந்ததியில் ஒருவன் இயேசுவை நிராகரிக்கவும் இயலும் என்பதை வருத்தத்துடன் விவிலிய்ம் பதிவிடுகின்றது.

இயேசு கிறிஸ்து உலக இரட்சகர். ஒரு மனிதனின் பாவம் முழு உலகையும் பாதித்ததுபோல ஒரு கிறிஸ்துவின் இரட்சிப்பு முழு உலகையும் மீட்கிறது. ஆதி பாவம் சந்ததி சந்ததியாக தொடர்ந்தாலும் ஒவ்வொருவரும் தங்களில் இருக்கும் பாவ உணர்வுகளினாலோ, உலக இச்சைகளின் தாக்குதலினாலோ தன்னிஷ்டமாக தானும் பாவம் செய்து ஆதிபாவத்தோடே பாவத்தைக் கூட்டுகிறான். இவ்விதம் ஒவ்வொருவரும் பாவம் செய்து பாவத்தோடு பாவத்தைக் கூட்டுவதினால் தான் முழு உலகமும் பொல்லாங்கனுக்குள் விழுந்து கிடக்கிறது என்று விவிலியம் கூறுகின்றது. இதைபோலவே இயேசு கிறிஸ்துவினால் உண்டான மீட்பை ஏற்றுக்கொள்கிறவர்கள் ஒவ்வொருவரும் அவருடைய கற்பனைகளை கைக்கொண்டு நன்மை செய்து தேவனின் நீதியை பெருக செய்ய வேண்டும். கிறிஸ்துவின் இரட்சண்ய கிரியையோடு ஒவ்வொருவரும் செய்கிற நீதி இணைந்து கிறிஸ்துவின் சபையாக எழும்புகின்றது. இதினிமித்தம் தேவனுடைய இராஜ்யம் பொல்லாங்கனை மேற்கொண்டு உலகமெங்கும் விரிவடைகின்றது.

அவரவரின் விசுவாசத்தினால் உண்டாகும் நீதியும் நற்கிரியைகளினால் உண்டாகும் நீதியும் கிறிஸ்துவின் நீதியோடு இணைந்து கிறிஸ்துவின் ஆளுகை பூமியெங்கும் பரவுகிறது. ஆகவேதான் இயேசுகிறிஸ்து உலக இரட்சகர் என்று அழைக்கப்படுகிறார். அவரை உலக இரட்சகராக உயர்த்தி காண்பிக்கும் பொறுப்பு ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் ஒவ்வொரு ட்சபைகளுக்கும் உள்ளது. அவரோடு இணைந்து நாம் செய்யும் காரியங்கள் மட்டுமே அவரை உலகின் மீட்பராக இன்னும் நேரலையில் வைத்திருக்கும்.

மீட்பு என்பது நேற்று நடந்து முடிந்தது மட்டுமல்ல, இன்றும் என் மூலம் நேரலையாக நடந்துக்கொண்டேயிருக்கிறது. ஆகையினால் இயேசு உலக மீட்பராக இன்றும் வாழ்கிறார்.

நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்; நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும். நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார். தேவன் ஒருவரே தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரியசாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது. இதற்காகவே நான் பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், புறஜாதிகளுக்கு விசுவாசத்தையும் சத்தியத்தையும் விளங்கப்பண்ணுகிற போதகனாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறேன்; நான் பொய் சொல்லாமல் கிறிஸ்துவுக்குள் உண்மையைச் சொல்லுகிறேன். 1தீமோத்தேயு 2:1-7.

ADD YOUR COMMENT

Powered By Indic IME