பிதா

பிதா அனுப்பினவரை விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியை.

This is the work of God, that you believe in Him whom He sent. (John 6:29)
Jn3:16-18,36; Jn5:39; Mt17:5; Mt12:50; Mk16:16; Lk8:21; Act16:31; Act22:14-16; Ro4:4,5; Ro9:30,31; Ro10:3,4; 1Co15:58; Phi1:5,6; 1Jn3:22,23; 1Jn4:9; 1Jn5:1; Rev2:26.

இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது என்றார். (யோவான் 6:29)

யோவான் 3:16-18,36; யோவான் 5:39; மத்தேயு 17:5; மத்தேயு 12:50; மாற்கு 16:16; லூக்கா 8:21; அப்போஸ்தலர் 16:31; அப்போஸ்தலர் 22:14-16; ரோமர் 4:4,5; ரோமர் 9:30,31; ரோமர் 10:3,4; 1கொரிந்தியர் 15:58; பிலிப்பியர் 1:5,6; 1 யோவான் 3:22,23; 1 யோவான் 4:9; 1 யோவான் 5:1; வெளி 2:26.

விசுவாசிப்பதே கிரியை:

ப.ஏ ல் மோசேயை நம்பாமல் மோசேயின் வார்த்தைகளை ஏற்கவில்லை. மோசே எவ்வளவுக்கு நம்பிக்கைக்குரியவராக இருக்கிறாரோ அவ்வளவாய் அவரின் வார்த்தைகளும் வலிமை பெறும். அதைபோலவே தேவன் நம்பிக்கைக்குரியவராய் இருந்ததினாலேதான் மோசே தேவனுடைய வார்த்தைகளை நம்பி அதை இஸ்ராயேலருக்கு கொடுத்தார். இதுவே தேவனுக்கேற்ற கிரியை ஆயிற்று.

இயேசுகிறிஸ்துவை நம்பியவர்கள், விசுவாசித்தவர்கள் அவரின் வார்த்தையையும் விசுவாசித்தனர். அவரை நம்பாதவர்களோ அவரின் வார்த்தையையும் புறந்தள்ளினர்.

சமீப காலங்களாக 4 விதமான கூட்டத்தார் கிறிஸ்தவத்தில் காணப்படுகின்றனர்.
ஒரு கூட்டத்தார் இயேசுவை விடவும் பரிசுத்த ஆவிக்கு முக்கியத்துவம் கொடுத்து இயேசுவை நம்புவதற்கும் பிரசங்கிப்பதற்கும் பதில் ப.ஆவியை பிரசங்கிக்கின்றனர்.

இன்னொரு கூட்டத்தார் இயேசுவை நம்புவதற்கு பதில் பரிசுத்தவான்களையும், தேவதூதர்களையும் நம்பி பிரசங்கிக்கிறார்கள்.

வேறொரு கூட்டத்தார் இயேசுவை நம்புவதாக கூறுகிறார்கள். ஆனால் அவரின் வார்த்தைகளில் பலவற்றையும் புறந்தள்ளுகின்றனர்.

நான்காவதாக, ஒரு கூட்டத்தார் இயேசு வந்தாரோ, இல்லையோ, அவர் வரப்போகிறாரோ, இல்லையோ அவர் பேசியதாக கூறப்படும் செய்திகள் மிகவும் முக்கியமானவைகள் என்று கூறுகின்றனர்.

கிறிஸ்தவம் என்பது கிறிஸ்துவை சுற்றி சுழல்வதாகும். அதை சுழல வைப்பவர் பரிசுத்த ஆவி. மேற்பார்வையிடுகிறவர் பிதா. இதனை மறக்க வேண்டாம்.

போதகனை பாராதே.
போதகத்தை பார் என்பதல்ல. போதகனும் முக்கியம். போதிப்பவனும் முக்கியம்.

இயேசு என்ற கிறிஸ்துவை நாம் பிரசங்கித்தால் மட்டுமே இயேசு என்ற மாதிரியை கொண்டுவர முடியும்.

இயேசுவின் வார்த்தைகள் பரலோக செய்திகளாகும். இயேசுவின் கிரியைகள் யாவும் இயேசுவை நம்பவைக்கும் தேவனின் கிரியைகள்.

விவிலிய இயேசுவை விசுவாசிக்காத எவரும் கிறிஸ்தவர்களல்ல. கிறிஸ்தவத்துக்கு எதிரான கிறிஸ்தவர்கள்.
இயேசுவை விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியை. இதனை விசுவாசத்தின் கிரியை எனலாம்.

தேவன் அனுப்பிய இயேசுவை விசுவாசித்தால் மட்டுமே பரலோகசத்தம் கேட்கும்.

இயேசுவை விவிலியத்தில் பார். பின்பற்று.
இதர சாக்காடைகளில் இயேசுவை தேடாதீர்.

கர்த்தாவே உமது மகனை நீர் அனுப்பியிருந்தும் இஸ்ராயேலரைபோல நாங்களும் அடையாளத்தை தேடுகிறோம். விவிலியத்தில் இயேசுவை தேடுவதற்கு பதில் சாக்காடை நூல்களில் இயேசுவை தேடுகிறோம். எங்களை மன்னியும். இனி நாங்கள் உம் விவிலியத்தின் இயேசுவை மட்டுமே பிரசங்கிக்க பெலன் தாரும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME