நீங்கள் என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிவீர்கள்

நீங்கள் என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிவீர்கள்.

If you had known Me, you would have known My Father also. (John 8:19)

Jn1:18; Jn14:6-9; Jn17:3,25,26; Mt11:25; Lk10:21,22; Lk2Cor4:4-6; Eph1:17; Col1:15; Heb1:3; 2Jn1:9.

அப்பொழுது அவர்கள்: உம்முடைய பிதா எங்கே என்றார்கள். இயேசு பிரதியுத்தரமாக: என்னையும் அறியீர்கள், என் பிதாவையும் அறியீர்கள், நீங்கள் என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிவீர்கள் என்றார். (யோவான் 8:19) 

யோவான் 1:18; யோவான் 14:6-9; யோவான் 17:3,25,26; மத்தேயு 11:25; லூக்கா 10:21,22; 2கொரிந்தியர் 4:4-6; எபேசியர் 1:17; கொலோசெயர் 1:15; எபிரெயர் 1:3; 2 யோவான் 1:9.

பிதா யார்?
   இயேசுவை அறிவதுதான் பிதாவை அறியும் வழி. இயேசுவை ஏற்றுகொள்வதுதான் பிதாவை அறியும் வழி. மாம்சத்தில் வந்த இயேசுவை விசுவாசித்து அறிக்கை செய்து ஏற்றுகொள்வதுதான் தேவனை அறியும் வழி. இயேசுவை கண்டவரே பிதாவை கண்டவராகின்றார். இயேசு நமக்குள் இருப்பதுவே பிதாவாகிய தேவனை அறிந்து நம்ப இடமாகின்றது. இயேசுவினாலேயன்றி ஒருவரும் பிதாவாகிய தேவனிடம் நெருங்கவியலாது.

   காரிருளுக்குள் தம்மை மறைத்துகொண்ட தேவனை ஒளியாகிய கிறிஸ்துவை கொண்டுதான் அறிய முடியும், காணமுடியும். கிறிஸ்து இயேசு இல்லாமல் தேவனையோ, அவரது வாக்குதத்தங்களையோ, அவரது ராஜ்யத்தையோ அடையவியலாது.

   தாயானவள் தான் பெற்றபிள்ளைக்குதான் அடைக்கலம் கொடுப்பாள். அதுபோலவே கிறிஸ்துவால் பிறப்பிக்கப்பட்டவர் மட்டுமே தேவனின் அடைக்கலத்துக்குள் இருக்க முடியும்.
கிறிஸ்துவை நீ ஏற்றுகொள்ளாமல் கடவுள் யார், அவர் எங்கே இருக்கிறார் என்று எவ்வளவுதான் கத்தினாலும், தேடினாலும் கண்டடையமாட்டாய். நெருப்பை நெருங்கும் தன்மை கொண்டவர் இயேசு மட்டுமே. அவரைகொண்டுதான் பட்சிக்கிற அக்கினியாகிய அவரை அறியவும், நெருங்கவும் இயலும்.

  இயேசுகிறிஸ்துவினால்தான் தேவனிடமிருந்து அன்பும், கிருபையும், இரக்கமும், தயவும் வெளிப்பட்டது. இயேசுகிறிஸ்து இல்லாமல் கடவுளை தேடுகிறவர்கள் நெருப்பையும், காரிருளையும்தான் அடைய இயலும்.

  கர்த்தாவே உம் மகன்மூலம் எல்லாவற்றையும் வெளிபடுத்தியுள்ளீர். அவரை புறக்கணித்துவிட்டு உம்மை அடைய இயலாது என்பதையும் நாங்கள் அறிந்துள்ளோம். உம் மகனின் விருப்பப்படி நடக்க உதவி செய்யும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME