நானும் என்னை அனுப்பின பிதாவுமாக இருக்கிறோம்

நானும் என்னை அனுப்பின பிதாவுமாக இருக்கிறோம்.

 but I am with the Father who sent Me. (Jn8:16b) 

Jn8:29; Jn16:32; Jn7:33.

நான் நியாயந்தீர்த்தால், என் தீர்ப்பு சத்தியத்தின்படியிருக்கும், ஏனெனில் நான் தனித்திருக்கவில்லை, நானும் என்னை அனுப்பின பிதாவுமாக இருக்கிறோம். (யோவான் 8:16) 

யோவான் 8:29; யோவான் 16:32; யோவான் 7:33.

இயேசுவும் பிதாவும்:
    இயேசுகிறிஸ்துவுக்கு சூட்டப்பட்டுள்ள பெயர்களில் இரு பெயர்கள் முக்கியமானவையாகும். மனுஷகுமாரன், தேவகுமாரன் என்பதாகும்.
இயேசுகிறிஸ்து பூமியில் மனுஷனாக பிறந்ததினால் மனுஷகுமாரன் எனப்படுகிறார். மனுஷகுமாரனுக்கு தந்தை, தாய் இருப்பதுபோலவே இயேசுவுக்கும் யோசேப்பு, மரியாள் இருந்தனர். ஆனாலும் இவைகளுக்கு மேலாக இயேசு பிதாவை மையமாக வைத்து மனுஷகுமாரன் என்று கூறியுள்ளார். பூமியில் மனுஷகுமாரனாக இருக்கும்போது பிதாவாகிய தேவனை தந்தையாக பாவித்து அவர் மடியில் இருப்பவராகவும், அவருக்கு கீழ்படிகிறவராகவும், அவர் சித்தம் செய்பவராகவும் தன்னை காண்பித்தார். இதனால் தன்னை பிதாவுக்கு சமமாக்காமல் பிதாவுக்கு கீழானவராகவே காட்டிக்கொண்டார். மகன் தகப்பனை சார்ந்திருப்பதுபோலவே இயேசுவும் முழுவதும் பிதாவையே சார்ந்திருந்தார்.
இயேசுகிறிஸ்து பரலோகத்தில் தேவகுமாரனாக அறியப்பட்டுள்ளார். தேவனுடைய விருப்பத்தை செய்யும்படியாக தேவனால் பணிக்கப்பட்டார். தேவனுக்கு சமமானவராக இராவிட்டாலும் தேவனுடைய வலதுபாரிசத்தில் இருப்பவராகவே அறியப்பட்டுள்ளார்.

   ஆனால் இயேசு பூமியில் இருக்கும்போதும் தன்னை தேவகுமாரனாகவும் தேவனோடு இருப்பவராகவும் அரிதாக காண்பித்துள்ளார். பிசாசுகள் இந்த ஐக்கியத்தை கண்டதினால்தான் இவர் தேவகுமாரன் என்று சத்தமிட்டன.
இயேசுவும் பிதாவும் எண்ணத்திலும், செயலிலும், பயன் தரதக்க விளைவுகளிலும் ஒன்றாகவே வெளிப்பட்டுள்ளனர். பிரிவினை என்பது இல்லை.

  அதுபோலவே தேவனுடைய மக்களாகிய நாம் எண்ணத்திலும், செயலிலும், நடவடிக்கைகளிலும், பழக்கவழக்கங்களிலும் தேவனுடன் இருப்பவராகவே காட்டிக்கொள்ள வேண்டும்.
ஒருவர் தேவனோடும் உலகத்தோடும் இணைந்து வாழமுடியாது. உலக கறைகளிலிருந்து மீட்கபட்டபின்பு தேவனும்,

  கிறிஸ்துவும்,சபையும், ஊழியகாரர்களும், விசுவாசகுடும்பங்களுமே அவரது குடும்பமாகும். அதுவே தேவனோடு இணைந்து செல்வது.
இயேசுவை கொண்டிருங்கள். சபையோடு இணைந்திருங்கள்.

  கர்த்தாவே நீரும் உம் மகனும் இணைந்து எங்களுக்கு மீட்பை கொண்டுவந்ததுபோல, நாங்களும் கிறிஸ்துவும் இணைந்து பிறருக்கு மீட்பை கொண்டுசெல்ல உதவி செய்யும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME