இவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, உலகத்தினாலுண்டானவைகள்

இவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, உலகத்தினாலுண்டானவைகள்.

For all that is in the world is not of the Father but is of the world. (1John 2:16)

Ecc 3:11; Mark 8:36; Mark 4:18; John. 1:10; John 3:17; John 8:23; John 12:47; John 14:30; 1Corinthians 1:20; James 1:27; 1John 4:4; 1John 5:19; Revalation 12:9.

ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள். (1 யோவான் 2:16)

பிரசங்கி 3:11; மாற்கு 8:36; மாற்கு 4:18; யோவான் 1:10; யோவான் 3:17; யோவான் 8:23; யோவான் 12:47; யோவான் 14:30; 1கொரிந்தியர் 1:20; யாக்கோபு 1:27; 1யோவான் 4:4; 1யோவான் 5:19; வெளி 12:9.

உலகத்தாலுண்டானவைகள்.

மாம்சத்தின் இச்சை, கண்களின் இச்சை, ஜீவனத்தின் பெருமை ஆகிய இவைகள் தேவனாலோ, தேவனுடைய ஆவியினாலோ, தேவனுடைய குமாரனாகிய இயேசுவினாலோ உண்டானவைகளல்ல. இவைகள் எல்லாம் உலகத்தாலும், பாவத்தாலும், பாவம் செய்கிற மனுகுலத்தாலும், பிசாசினாலும் உண்டானவைகள் ஆகும். தேவன் இச்சைகளின் காரணர் அல்ல, பிசாசானவனே இச்சைகளின் காரணன். இச்சையை, பெருமையை மனித உள்ளங்களில் வைத்து உலகத்தை கைபிடியளவுள்ள இருதயத்துக்குள் அமைத்து விட்டான். தேவனால் படைக்கப்பட்ட மனிதனில் தேவனுடைய இராஜ்யம் இருந்தது. இச்சை வந்தபோதோ இவ்வுலகம் அங்கே வந்தது.

பிதாவினால் உண்டாக்கப்படாததுவும், கிறிஸ்துவால் மீட்கப்படுதலுக்கும் வைக்கப்பட்டுள்ள உலகமானது மீட்கப்பட்ட தேவனுடைய பிள்ளைகளில் குடியிருக்க அனுமதிப்பது ஆதி பாவத்தின் தொடர்ச்சியாகும். ஆதிபாவத்துக்குரிய பலன் வெளியேற்றப்படுதலாகும். அதேபோல் அதே பாவம் நம்மில் தொடருமானால் தேவனுடைய இராஜ்யத்திலிருந்து பிசாசின் இராஜ்யத்துக்குள் தள்ளப்படுவோம். பாவிகள் நீதிமான்களின் சபைகளில் நிலை நிற்பதில்லை. உலகம் உலகத்தோடு இணைந்து நிற்கும், தெய்வீகமானவர்கள் தேவனோடு இணைந்து நிற்பார்கள். ஆவிக்குரியவர்கள் ஆவியோடு இசைந்திருப்பார்கள்.

உலகத்தில் இச்சைகளை உண்டுபண்ணக்கூடிய பிசாசானவனின் சிந்தை பின்னி பிணைந்து காணப்படுகின்றது. நாம் அனுபவிக்கும் எந்தவொரு பொருளும் பிசாசானவனின் இருதயத்தையே கொண்டிருக்கின்றது. நமது உடமைகளை நமது உள்ளங்களில் கொண்டிராமல் இருந்தால் மட்டுமே பிசாசின் இருதயம் நமக்குள் நுழையமுடியாதபடிக்கு தடுக்கப்பட முடியும். யோபு பக்தர் தன்னிடம் கொண்டிருந்தவைகள் ஒன்றும் தன் இருதயத்தை ஆளுகை செய்யாதபடிக்கு பார்த்துக் கொண்டதினால்தான் பாடுகளிலிருந்து மீட்கப்பட்டார். நமது இருதயத்தில் பிசாசின் சிந்தை காணப்படுகிறதா இல்லையா என்பதை தேவனுடைய ஆவியானவர் சோதித்துப்பார்க்கவே நம்மில் ஊற்றப்பட்டுள்ளார். நமது பாடுகள், உபத்திரவங்கள் எல்லாம் நமது இருதயத்திலுள்ள பிசாசின் சிந்தையை அகற்றி ஆவியின் சிந்தையை வைப்பதற்கான சோதனையாகும். உலகத்தில் நாம் வாழ்ந்தாலும் உலகம் நம்மில் வாழாதபடிக்கு விழித்திருப்போம்.

கேள்வி…
அழிவுக்கு வைக்கப்பட்டுள்ள ஐசுவரியத்தை அடையும்படி துடிக்கும் ஆவிக்குரியவர்களின் மனநிலை எதுவாயிருக்கும்?

அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்; உலகத்தையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்; ஆதலால் தேவன் ஆதிமுதல் அந்தம்மட்டும் செய்துவரும்கிரியையை மனுஷன் கண்டுபிடியான். பிரசங்கி 3:11.

சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், இனிவரும் காலம் குறுகினதானபடியால், மனைவிகளுள்ளவர்கள் மனைவிகளில்லாதவர்கள்போலவும், அழுகிறவர்கள் அழாதவர்கள்போலவும், சந்தோஷப்படுகிறவர்கள் சந்தோஷப்படாதவர்கள்போலவும், கொள்ளுகிறவர்கள் கொள்ளாதவர்கள்போலவும், இவ்வுலகத்தை அனுபவிக்கிறவர்கள் அதைத் தகாதவிதமாய் அனுபவியாதவர்கள்போலவும் இருக்கவேண்டும்; இவ்வுலத்தின் வேஷம் கடந்துபோகிறதே. 1கொரிந்தியர் 7:29-31..

எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்கு நஷ்டமென்று எண்ணினேன்.
அதுமாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன். பிலிப்பியர் 3:7,8…

ADD YOUR COMMENT

Powered By Indic IME