ஸ்திரீ

விபசாரத்தில் கண்டு பிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீ.

scribes and Pharisees brought to Him a woman caught in adultery. (John8:3) 

Mt15:18,19; Mk7:20-23; Mt5:27-32; Gal5:19-21; Rom2:22; Jas2:11; 2Pet2:14; Rev2:22; Rev21:8; Rev22:15; Lev20:10; Ps50:18; Jer23:10.

அப்பொழுது விபசாரத்திலே கண்டு பிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் கொண்டு வந்து, அவளை நடுவே நிறுத்தி: (யோவான் 8:3) 

மத்தேயு 15:18,19; மாற்கு 7:20-23; மத்தேயு 5:27-32; கலாத்தியர் 5:19-21; ரோமர் 2:22; யாக்கோபு 2:11; 2பேதுரு 2:14; வெளி 2:22; வெளி 21:8; 22:15; லேவியராகமம் 20:10; சங்கீதம் 50:18; எரேமியா 23:10.

விபசார பாவம் அது அபசாரம்.

தனக்கு மனைவி அல்லது கணவன் இருக்க எதிர் பாலரோடு தவறான பழக்கம் வைத்துகொள்வது விபசாரம் ஆகும்.
உள்ளத்தின் இச்சையை கொண்டு எதிர்பாலரோடு பழகுவது விபசாரம்.

விபசாரம் என்பது நியாயபிரமாணத்தை மீறுவது,
தேவனுடைய ஆலோசனையை தள்ளிவிடுவது,
தேவனால் உண்டாக்கப்பட்ட உறவை கொச்சைபடுத்துவது,
அசுத்தமானது,
தீட்டானது,
அழிவுக்குரியது.

விபசாரம் பண்ணி, குடித்து வெறித்து, புகைபிடித்து, கற்பனைகளை மீறி நடப்பதும் விபச்சாரமாகவே கருதப்படுகின்றது.

விபசாரம் என்பது அசுத்தமானது, தீட்டானது, கறைபடுத்துவது,
அருவருப்பானது.

விபசாரம், பின்மாற்ற  ஆராதனை, பொருளாசை ஆகிய மூன்றும் ஒரே தன்மை கொண்ட அழுக்காகும். இவைகளின் பேர்முதலாய் இரட்சிக்கப்பட்டவர்களிடையில் சொல்லலாகாது.

நம் தேவன் பரிசுத்தர். ஆகையினால் நாமும் பரிசுத்தராயிருக்க வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கின்றார்.

நமது பரிசுத்தமே நமது குடும்பத்தின், சபையின், பணியிடங்களின் பரிசுத்தமாயிருக்கும்.

விபசார ஆவியை விட்டு தூரமாய் விலகி நில்லுங்கள்.
அவைகளை செய்கிறவர்களை விட்டு இன்னும் தூரமாய் விலகி நில்லுங்கள்.

கர்த்தாவே, விபசாரனும், அசுத்தனும் உம்மண்டை வர இயலாதபடிக்கு உமது பரிசுத்தத்தினால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறீர். உமக்கு நன்றி. நாங்களும் உமது பரிசுத்தத்தில் அலங்கரிக்கபட எங்களுக்கு உதவி செய்யும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME